ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
full video link: https://youtu.be/guvM3YCISMI?si=5LJ_9GLauC0OzKkd
குவாண்டம் இயற்பியலையும், ஜோதிடத்தையும் இணைத்து, நட்சத்திர அமைப்புகளை அறிய முடியுமா? - ALP ஜோதிட ஆய்வு.
அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பில், அட்சய இல்லத்தில், ஆன்மீக Glitz சேனலின் வாயிலாக, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
அட்சய லக்ன பத்ததியின் தந்தை. வாக்குயோகி. உயர்திரு. Dr. சி. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள், ஜோதிட ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கலந்துரையாடல் நிகழ்வில் இருந்து சில துளிகள்…….
ஐயா வணக்கம். என் பெயர் நாகரத்தினம். நான் கூடுவாஞ்சேரியில் இருந்து வருகிறேன்.
எனக்கு ஒரு கேள்வி உள்ளது.
நீங்க வகுப்புல அடிக்கடி சொல்லுவீங்க. நட்சத்திரங்கள் எல்லாம் அணுக்களால் ஆனது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும், ஒரு அமைப்பு இருக்கிறது. மிருகசீரிஷம் 1, 2 க்கு இருக்கிற அமைப்பு வேற. மிருகசீரிஷம் 3,4 க்கு இருக்கிற அமைப்பு வேற, அப்படின்னு சொன்னீங்க.
அப்ப எனக்கு ஒரு கேள்வி என்ன வருதுன்னா ஐயா, நம்ம வந்து குவாண்டம் இயற்பியலையும், ஜோதிடத்தையும் ஏன் ஒன்றாக இணைக்க கூடாது, என்று. இதுல இருக்கிறதைத் தான் ஐயா, அங்கேயும் சொல்றாங்க. அணுக்கள் எல்லாமே வந்து அணுவாகவும், அணு நிலையிலும், திரவ நிலையிலும் இருக்கிறது, அப்படின்னு சொல்றாங்க, ஐயா.
இப்போ, குவாண்டம் கம்ப்யூட்டர்ஸ் எல்லாம் வந்து விலை அதிகமாக கோடிக் கணக்குல சொல்றாங்க.www.alpastrology.org
நம்ம, ரொம்ப சர்வ சாதாரணமா ஜோதிடத்தில், நட்சத்திரங்கள் உடைய அமைப்பை வைத்து, அடிப்படையாக விஷயத்தை வைத்து, அணுக்கள் உடைய அமைப்பை வைத்து, நீங்கள் உதாரணத்திற்கு, விசாகம் 3 போகும் போது பார்த்தால், கட்டாயம் வேற ஒரு தொடர்பு ஏற்படும், விசாகம் 2 போனால், அவங்களுக்கு மண முறிவு ஏற்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும் அப்படின்னு சொல்றீங்க, ஐயா.
அப்போ, ஒவ்வொரு நட்சத்திரமும், நீங்க சொன்ன மாதிரி, அணுக்களால், வெவ்வேறு அணுக்கள் உடைய அமைப்பைக் கொண்டவை. ஆனால் அதேதான், குவாண்டம் பிசிக்ஸ்ல சொல்றாங்க, ஐயா.
இதை வந்து, நம்ம முன்னோர்கள், ரிஷிகள், முனிவர்கள் எல்லாம், இதற்கு முன்னாலேயே, நமக்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்னாலே, இந்த அமைப்பைக் கண்டு பிடித்து நமக்கு கொடுத்திருக்காங்க, ஐயா.
அதை நட்சத்திரங்கள் என்று சொல்வதால், நம்மளை எல்லாம் ஆன்மீகவாதிகள் அப்படின்னு சொல்லிடுறாங்க.
ஆனால் விஞ்ஞானத்தோட பார்க்கும் போது, கட்டாயம் இந்த மெய் ஞானத்தை வைத்துத் தான், விஞ்ஞானம் வந்திருக்கு, அப்படின்னு தெரியுதுங்க, ஐயா. எனக்கு தெரிஞ்சு ஐயா, நீங்க வந்து என்னுடைய வேண்டுகோளை ஏற்று, ஜோதிடத்தையும், குவாண்டம் பிசிக்ஸ்ஐயும் வைத்து, நிறைய சொல்லணும், ஐயா. இது வந்து, ஜோதிடம்னா வெறும் மூட நம்பிக்கை என்று, இது பின்னாடி யார் போவாங்கன்னு, நம்பாதவர்களாக இருக்கிறார்கள். அப்ப ஜோதிடமோ, ஆன்மீகமோ, யாரும் மறுத்தாலும் சரி, மறுக்கா விட்டாலும் சரி, ஏத்துக்கிட்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் சரி, எல்லாத்தையும் அரவணைச்சு கொண்டு போகக் கூடிய, ஒரு அடைக்கலமான இடம் தாங்க ஐயா, இந்த ஜோதிடம். அதனால இதுக்கு நீங்க சொல்லுங்க, ஐயா. உங்க பாணியில் சொல்லுங்க ஐயா. நான் எனக்கு தெரிஞ்ச மாதிரி கேட்டேன், ஐயா. நன்றிங்க ஐயா.
ஐயாவின் பதில்:
ரொம்ப, நன்றி.
முதல் முறையாக, இந்த ஆன்மீக Glitz-ல், இதைப் பேசணும்னு இருக்கு. அதான் ஆச்சரியமான விஷயம். இது வரைக்கும், நாங்கள் செல்களைப் பற்றி, மூளையோட நிகழ்வுகளைப் பற்றி, நாங்க எதுவுமே பேசினது கிடையாது.
ஏன் அப்படின்னா, அதுக்கான புத்தகமும், அதுக்கான வடிவமும், இன்னும் வெளியில் வரவில்லை. அது வந்து, காப்பி ரைட்ஸ்ல இருக்குங்குறதால, அது பேட்டன்ட் ரைட்ஸ்ல இருக்குற காரணத்தால், இன்னும் வெளியிடவில்லை.
உதாரணத்திற்கு, அடிக்கடி ஒரே ஒரு நட்சத்திரத்தை மட்டும் தான், நம்ம பேசியிருக்கோம். மத்த நட்சத்திரங்களைப் பத்தி பேசவில்லை. www.alpastrology.com
உதாரணத்துக்கு, பூசம் நட்சத்திரம் போகும் போது, ALP 4 வருஷம் 5 மாதம் 10 நாள், போகுது. இந்த பூச நட்சத்திரம் போகும் போது, பூச நட்சத்திரத்தோட, இந்த செல்களோட அமைப்பு, (எப்படி உள்ளது என்றால்) இந்த நான் மாறலை, நான் அப்படியே தான் இருக்கிறேன், நான் புரிஞ்ச மாதிரி பேசுறேன், நான் புரியாத மாதிரி பேசுகிறேன், நல்லதா பேசுறேன், கெட்டதா பேசுறேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி, அவன் பேசுறது நல்லாவே இருந்தது. இவன் அப்படியே நல்லா பேசுவான்யா, ஆனா நாலு வருஷம் கழிச்சு, சூப்பரா புரிஞ்ச மாதிரி பேசினான். நேத்து நல்லா தானடா இருந்தான், இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியல, என்று இருக்கும்.
இப்போ இந்த மூளையோட செல்கள் என்ன பண்ணுது? இந்த ஒரே ஒரு நட்சத்திரத்தை மட்டும், உதாரணமாக எப்படி என்று பார்ப்போம்.
அந்த பூச நட்சத்திரம் மட்டும் நான் இது வரைக்கும் காமிச்சிருக்கேன். வேற நட்சத்திரங்கள் பற்றி, நான் இன்னும் பதிவு பண்ணல.
ஒவ்வொரு 27 நட்சத்திரத்துக்கும், 36 பிரிவுகளுக்கும் தனித்தனியாக, இங்க ஒரு வரைபடம் இருக்கு.
நீங்க வேணும்னாலும், வேண்டாமென்றாலும், இன்றும் 50 வருஷமோ, 100 வருஷமோ, 500 வருஷமோ கழித்து, ஒரு அறிவியல் வரும். நாம் இதனை கணிதமா கொண்டு வந்துட்டோம். அந்த ஜோதிடத்தை, இப்ப அறிவியலா வந்து இணைக்கும் போது, இப்ப நாளைக்கு, இந்த மூளையோட செல்கள் இப்படித்தான் இயங்குது. இந்த நேரத்துல, இப்படி இந்த மனிதனுடைய மூளையில் உள்ள இந்த செல்களோட அமைப்பு, இப்படித் தான் கூட்டமைப்பாக இருக்கு. அப்ப என்ன நடக்கும், என்பதை ஒத்துக் கொள்வீங்க.
உதாரணத்துக்கு, இப்ப ஒரு புள்ளி வச்சிருக்கேன். இந்த புள்ளியில் இருந்து, மறுபடியும் நான் இப்படி ஒரு ரவுண்டு போறேன். ஒரு முக்கால் ரவுண்டு வந்த உடனே, மறுபடியும் U-TURN அடிச்சு திரும்பி வந்து, இப்படி வர்றேன். மறுபடியும் முக்கால் ரவுண்டு வந்தவுடன், மறுபடியும் இப்படி திருப்பி வர்றேன். இப்படி வந்த உடனே, இது ஒரு வட்டமாக உங்களுக்கு வெளியிலிருந்து பார்த்தா தெரியும். ஆனால் பாதி முக்கால் முக்கால் திரும்பி திரும்பி, என்ன பண்ணும், ரிவர்ஸ், ரிவர்ஸா போய், இப்படித் தான் பூச நட்சத்திரத்தோட அமைப்பு இருக்கு.
பூச நட்சத்திரம், பழசை பேசிக் கிட்டே இருக்கும். நாம் சொல்லுவோம்ல, சொல்லி சொல்லிக் காட்றது யாருப்பா? எல்லா நட்சத்திரமும் சொல்லி சொல்லி காமிக்கும். அதுல பூச நட்சத்திரம், கிட்டி பிள்ளை சண்டைல இருந்து, வீட்ல சண்டை போட்டதுல இருந்து, நீ பேசுனதுல இருந்து, கல்யாணமாகி 20 வருஷம் கழிச்சு, நீ கல்யாணம் ஆகி வந்த அன்னைக்கு, எங்க அம்மா கிட்ட நீ சொன்னீல்ல, உங்க மாமியார் கிட்ட சொன்னீல்லன்னு, என்று சண்டை போடும். எப்போ? 20 வருஷம் கழிச்சு. இதை எப்ப எப்ப எல்லாம், பழையது எல்லாம் ஞாபகம் வச்சு, எடுத்தாந்து, எடுத்தாந்து கொடுக்கும், சண்டை போடுன்னு. கிரகம் நல்லா இருந்துச்சுன்னா ஓகே பரவாயில்ல. சும்மா, விளையாட்டுத்தனமா சொன்னேன் அப்படின்னு சொல்லிட்டு போயிடுவோம். ஆனா கிரகம் நல்லா இல்லனா, இந்த சனி பகவான் நல்லா இல்லைன்னு வச்சுக்கோங்களேன், பிரச்சனை தான்.
இந்த மூளை இருக்கே, இந்த செல்கள் என்ன பண்ணும்? செல்கள், ஒன்றோட ஒன்று ஏறி ஏறி செயல்படுமாம். இப்படி இருக்கும் போது, இங்க இந்த செல்லே சுற்றி சுற்றி இருக்கு. இப்படியான இந்த அமைப்பு. இது வந்து, இன்னும் ஒரு அறிவியல் வந்து, மூளையோட வளர்ச்சிகளைப் பற்றி, யாராவது ஒருத்தர் ஆய்வு பண்ணி, அது ஒரு சயின்டிஸ்ட் சொல்லி, அது ஒரு பிம்பமாக, ஒரு படமா வரைந்தால் மட்டும் தான், மூர்த்தி சொன்னது சரி என்று ஒத்துக் கொள்வர். இன்னைக்கு நான் சொல்றது கூட வித்தியாசமாக இருக்கும். என்னடா, மூளையோட செல்கள் வந்து, ஒரு மனிதனை இப்படி எல்லாம் இந்த நட்சத்திரம், பண்ணுமா என்றால், நீங்க வேணும்னாலும், வேண்டாமென்றாலும், புரிஞ்சாலும், புரியவில்லையென்றாலும், முடிஞ்சாலும், முடியா விட்டாலும், என்னைக்கு தெரிஞ்சுக்கிட்டாலும், புரிஞ்சு கிட்டாலும், இதுதான் உண்மை.
என்ன நடக்குது? இந்த ஒரு நட்சத்திரம் போகும் போது, ஏதாவது ஒரு விஷயத்தை, திரும்பத், திரும்ப, சொல்லிக் காண்பிக்கிறது. ஒரு விஷயத்தை புரிஞ்ச மாதிரி பேசுறது, ஒரு விஷயத்தை புரியாத மாதிரி பேசுறது, ஒரு விஷயத்தை கற்பனைகள் செய்வது. உதாரணமா, நேத்து உங்களைப் பார்த்தேன், என்பது. இது ஒரு நிகழ்வு, இந்த நட்சத்திரம் சம்பந்தமே இல்லாம பேசும். நாம ஒண்ணு பேசிக்கிட்டு இருப்போம், டீ குடிக்க போலாமா, என்பார்.
என்னடா இது? எல்லா நட்சத்திரங்களுக்கும் வேறு வேறு அமைப்புகள் இருக்கும். அதற்கு தகுந்த மாதிரி, இந்த பூச நட்சத்திரம், திரும்பத் திரும்பப் பேசுதல், ஒரு கற்பனையின், ஒரு எல்லையின், ஒரு விதி விலக்காக செயல்படும்.
ஒரு விஷயம் என்னன்னா, இமேஜின் பண்ணும். ஒரு கற்பனையில் வச்சுக்கிட்டு, நீங்க நேத்து அவர் கிட்ட பேசுனீங்க இல்ல, என்று கேட்கும். நான் எங்கடா அவர் கிட்ட பேசினேன், நான் ஏன்டா அவர் கிட்ட பேசுறேன்? இல்ல, இல்ல, நீங்க அவர் கிட்ட பேசிருக்கீங்க. நீங்க அவர் கிட்ட பேசாம, அவர் எப்படி என் கிட்ட கேட்கிறாரு? இவரும், இவரும், அன்னைக்கு எதார்த்தமா, அவர் கேட்க போய், நீங்க அவர் கிட்ட சொன்னது தான், அவர் என்கிட்ட கேட்கிறார், என்று கேட்பர். அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. இவர் யார் என்றே தெரியாது. இந்த குடும்பத்துக்குள்ள, ஒரு கதி கலக்கம், எப்ப பார்த்தாலும் ஒரு விஷயத்தைப் பேசிக் கொண்டே இருக்கும், இந்த நட்சத்திரம்.
இது ஏன் அப்படின்னா, இந்த செல்கள் வந்து அவ்வளவு அழகாக, இந்த 27 நட்சத்திரங்களும், 36 நிகழ்வுகளாக, பிம்பங்களாக செயல்படும். இது ஒரு வடிவமாக, உங்களுக்கு ஒரு நாள் எப்படியாச்சும் எப்பயாச்சும் ஒரு புத்தகம் வரும் போது, அந்த வடிவங்கள் நீங்க பார்க்கும் போது, இப்படித் தான் செயல்படும்னு தெரிஞ்சுருச்சுன்னா, அப்படியே அமைதியா, இருக்கலாம். இப்படித் தான் செயல்படும் கிரகம் என இருக்கும் போது, நீங்க அந்த புத்தகத்தை படிக்கவே மாட்டீங்க. பார்க்கவே மாட்டீங்க.
இது என்றைக்கோ ஒரு சயின்டிஸ்ட் சொல்லப் போறார், 500 வருஷம் கழிச்சு, ஒரு அறிவியலாளர் சொல்லி, ஆமாம் இல்ல, இது எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி, மூர்த்தி என்கிற ஒருத்தர் வந்து ஜோசியத்துல சொல்லிட்டு போயிட்டான்னு சொல்லுவாங்க. அதுதான் நடக்கும்.
இன்னைக்கு வந்து, இந்த வீடியோ பதிவு பண்ணா, இந்த வீடியோவை என்னைக்கோ ஒரு நாள் பார்த்தாங்கன்னா, இன்னும் ஒரு 500 வருஷம் கழிச்சு இந்த வீடியோ பார்த்தாங்கன்னா, ஆமாம் இல்ல, அன்றைக்கே இந்த மூர்த்தி சொல்லி இருக்கான்ல, என்பார்கள். நாம் நிகழ்காலத்தில் சொல்லும் போது, யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மூளைல என்ன நடக்குது? மூளையோட சிந்தனை என்ன, செயல் என்ன, இயக்கம் என்ன என்று, நமக்கு இன்னைக்கு இவ்வளவு நிகழ்வு என்னவென்று, நமக்கு இப்ப தான் புரியுது.
நாம் என்ன நினைக்கிறோம்? நமக்கு வாயில வந்தது எல்லாம் பேசுகிறோம். வாயில வந்தது எல்லாம் பேச முடியாது. இங்க என்ன சொல்லுதோ, அதுதான். இங்க என்ன சொல்லுன்னு கட்டளையிடுவது பாருங்க. கையை ஓங்குறது, அடிக்கிறது, அடிக்காம இருக்கிறது, கீழ இறக்கு, வேண்டாம்டா, கையை இறக்கு, கோபப்படாத. இப்ப, இந்த புரிதல்கள் இருக்கு பாருங்க. இது வந்து சாதாரணமில்லை. கடவுள் நமக்கு மட்டும் தான் கொடுத்திருக்கிறார். இந்த கிரகம் அவ்வளவு அழகா இயங்குது. இந்த நட்சத்திரங்களை அழகாக பயன்படுத்திக் கொண்டு, கிரகங்களை அழகாக தோள் மேல கையை போட்டுக்கிட்டு, பாவகங்களை அழகா சந்தோஷப்படுத்தினோம்னா, நம்ம புகழ், பேர், பணம், வெற்றி, சந்தோஷம், அப்படியே கொடுத்துக் கிட்டே இருப்பார். அது ஒன்று தான் நமக்கு. எப்படி? புகழ் என்பது யாருக்கு? இந்த நட்சத்திரத்திற்கா, இந்த கிரகத்துக்கா, இந்த பாவகத்திற்க்கா? எனக்கு. அது தான் வாழ்க்கை. வேற ஒண்ணுமே இல்லை. அனுபவிக்கிறோம் பாருங்க. மூர்த்தி என்கிற ஒரு பெயர் கிடைக்குது பாருங்க. இது தான் அனுபவிக்கறது. இது தான் விஷயம். இது மட்டும் தான், நான். எனவே, இந்த நட்சத்திரமும், இந்த கிரகமும், இந்த பாவகமும், ஒரு நாள் கண்டிப்பாக கூடிய விரைவில் அது வரும் போது, இன்னும் மக்களுக்கு அது புரியும்.
கண்டிப்பாக கூடிய விரைவில் குவாண்டம் பிசிக்ஸ் உடன், அந்த அறிவியலுடனும், இந்த ஆன்மீகத்தையும் சேர்த்து, ஒரு நாள், ஒரு பிரம்மாண்டமாக வரும் போது, இது அழகா அன்னைக்கே எல்லாம் சொல்லிட்டு போயிட்டாங்கன்னு சொல்லுவாங்க. கண்டிப்பா, அது கூடிய விரைவில் நடக்கும்.
ரொம்ப சந்தோஷம்.
நன்றி.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology