ALP ஜோதிடம், ஏன் படிக்க வெண்டும்?

ALP Astrology

நிகழ்வு தலைப்பு
1

முன்னுரை

full video link: https://youtu.be/guvM3YCISMI?si=oss1n5-oRk4cYm-b

 

ALP ஜோதிடம், ஏன் படிக்க வெண்டும்? 

 

அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பில், அட்சய இல்லத்தில், ஆன்மீக Glitz சேனலின் வாயிலாக, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அட்சய லக்ன பத்ததியின் தந்தை. வாக்குயோகி. உயர்திரு. Dr. சி.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள், ஜோதிட ஆர்வலர்களின்  கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

 

கலந்துரையாடல் நிகழ்வில் சில துளிகள்…….

 

என் பெயர் பாலகுமார். செம்பாக்கத்திலிருந்து வருகிறேன்

ஜோதிடம் பார்க்க வரும் போது, நீங்க ஏன் ALP ஜோதிடம் படிங்க அப்படின்னு சொல்றீங்க, அது ஏன்?

 

ஐயாவின் பதில்: 

 

இந்த கேள்விக்கு நிறைய டைம் நாம் பதில் சொல்லி இருப்போம். ஆனாலும் மீண்டும் ஒருமுறை இங்கு பதில் சொல்வோம். ஏன் அப்படினா, ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் வந்து, ஒரு 15 நிமிஷத்துல உங்க வாழ்க்கையோட பாதையை தெரிஞ்சுக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க. இதை செய்யுங்க, இதை செய்யாதீங்க, இது நடக்கும், இது நடக்காது,  இது முடியும், இது முடியாது,  இது வேணும், இது வேண்டாம்,  அவ்வளவுதான் விஷயம். இதைத் தான் ஒரு ஜோதிடரான நாங்க சொல்லப் போறோம்.www.alpastrology.com

 

ஜோதிடர்கள் யாரும் தலையெழுத்தை மாற்ற முடியாது. ஜோதிடர் தலை எழுத்தையே, ஜோதிடரே மாற்ற முடியாது. அப்போ உங்க தலை எழுத்தை நாங்க எப்படி மாற்ற முடியும்? 

 

இப்போ நாங்க சொல்றோம். இப்ப புரிஞ்சுகிட்டிங்க. நீங்க இந்த 15 நிமிஷத்துல, உங்க வாழ்க்கை மாறும் என்று நினைக்கிறீர்கள், என்று ஜோதிடரை நம்பி வரும் போது, அதை நீங்கள் 15 நாட்களில் புரிந்து கொண்டால், உங்களுடைய வாழ்க்கை மாறும். இந்த கிரகங்களுடைய,  நட்சத்திரங்களுடைய,  ராசிகளுடைய, பாவங்களுடைய,  தன்மைகளை நீங்க உணர்ந்துக்கிட்டா, அப்ப உங்க வாழ்க்கை மாறாதா என்ன? ஜோதிடம் படிங்கன்னு சொல்றதுக்கு காரணமே அதுதான். 

 

இவங்க ஒரு 15 நிமிஷத்துல புரிஞ்சுக்கிட்டாங்கன்னு வச்சுக்கோங்களேன். இப்போ உதாரணத்துக்கு, நாங்க எல்லோரையும் ஜோதிடம் படிக்க சொல்றதுக்கு காரணமே இது தான். யாரோ ஒருத்தருடைய வாழ்க்கை மாறிடும். நான் 15 நிமிஷத்துல  என்ன சொல்லிட முடியும்? ஒரு 20 நிமிஷம் ஜோதிடம் பார்ப்பாங்களா? 25 நிமிஷம் ஜோதிடம் பார்ப்பாங்களா? 

 

 

இந்த ஒரு அடிப்படையான அறிவுகள், ஒரு விஷயம் வேணும். இந்த கிரகம்னா என்ன, நட்சத்திரங்கள்னா என்ன, பாவகங்கள்னா என்ன, கிரகம் என்றால் என்ன? அவற்றை புரிஞ்சி கிட்டு நான் எப்படி பயன்படுத்துவது? நான் என்ன பயன்படுத்துவது?  எனக்கு எது வேணும்? என் பாதை எப்படி?

 

இப்ப உங்க பாதை வேற, என் பாதை வேற, போன்ற அடிப்படையான புரிதல் வேணும்.

 

இப்ப உதாரணமா ஒருத்தர், கேது திசை நடந்து இருக்கும். உங்களுக்கு கேது திசை கஷ்டப்படுத்தும்னு நினைப்பீங்க. உங்களுக்கு  ஓஹோன்னு இருக்கும்.

 

உங்களுக்கு சுக்கிர திசை ஓஹோன்னு இருக்கும்பாங்க. சுக்கிர திசையில் தான் நமக்கு வர்ற அத்தனையும் வினையாக வந்திருக்கும். 

 

ஒருத்தருக்கு  ராகு திசை நடக்கவே கூடாது. இன்னொருத்ததுகு, ராகு திசை ஒஹோ என்று இருக்கும்.

 

இப்ப போன வாரம் அப்படித்தாங்க, அதை சேர்த்து சொல்கிறேன்,  பாருங்கள். இப்பொழுது அவருடைய ஜென்ம லக்னம் சிம்ம லக்னம், சிம்மத்தில் ராகு, திசை ஓஹோன்னு இருக்கும்,  அப்படிங்கிறார் ஒரு ஜோசியர். அந்த அம்மா, இருக்கிறதெல்லாம் போயிருச்சு, மொத்தமா காலி ஆயிடுச்சு, என்ன பண்றது தெரியல என்று புலம்புகிறது.  

 

அந்த அம்மாவின் ALP லக்னம் மகர லக்னம், மகர லக்னத்துகு, அஷ்டமத்துல ராகு திசை நடத்துனா, இருக்கிறதெல்லாம் மொத்தமாக போய்விட்டது. மகர லக்னத்திற்கு, மகரத்துக்கு அஷ்டமாதிபதி வீடு,  சிம்மத்தோட வீட்ல ராகு நின்று திசை நடத்தினால் அப்புறம் என்ன பண்ணும்? சிம்ம லக்னம் ஜென்ம லக்னம் அதுல ராகு தசை ஓஹோன்னு இருக்குங்குறாரு ஜோசியர். ALP -ல் நம்ம என்ன சொல்றோம், எவ்வளவு ஈசியா முடிஞ்சிருச்சு. இதை புரிஞ்சுகிட்டா, எப்படி. அஷ்டமத்துல இருக்கக்கூடிய ராகு தசை என்ன பண்ணும் புரிஞ்சுகிட்டா, அப்ப நீங்க என்ன பண்ணுவீங்க? கவனமாக என்னமோ பிரம்மாண்டமான விஷயத்தை செய்ய மாட்டீங்க, சுருக்கி செய்வீங்க. www.alpastrology.org

 

அதை நீங்கள் உணர்ந்தாதான் நீங்க புரிஞ்சுக்க முடியுமே தவிர, மாத்த முடியுமே தவிர, உணராத வரைக்கும், ஏதோ ஒரு ஜோசியர் சொல்றாரு,  

 

இந்த விஷயம் செய்யலாம், செய்யக் கூடாது அப்படின்னு நினைத்து அலட்சியப்படுத்துவீங்க.

 

இப்ப வந்து ஒரு ஹோட்டலில் போய் சாப்பிடுறோம், டெய்லி ஹோட்டல்ல சாப்பிட முடியுமா? வீடு, அடுப்புன்னு ஒண்ணு இருக்குல்ல. அதெல்லாம் சமைச்சு தான் சாப்பிடுறோம். அது மாதிரி தான் இந்த ஜோதிடம் படிக்கிறது.

 

ஆனால் ஒரு நாள் ஹோட்டல்ல போய் சாப்பிடலாம். ஏதோ ஒரு கேள்வி இருக்கு. முக்கியமான ஒரு கேள்வி இருக்கு. அவசரமான ஒரு கேள்வி இருக்கு. ஒரு 50 லட்சம் முதலீடு பண்ண போறேன், ஏதோ ஒரு ஜோசியர், இரண்டு ஜோசியர் வேணும்னா கேட்டுக்கலாம்  பாருங்க. அந்த ஜோசியர் கேட்டால் நல்லா இருக்குன்னு முடிவு செய்யலாம். ஆனால் உங்களுக்கு ஜோதிடம்னு ஒரு அறிவு இருந்துச்சுன்னா, ஜோசியம் படிச்சிருந்தா, இவர் சொல்றது சரி, இவர் சொல்றது தவறு, இவர் இதை கரெக்டா தான் சொல்றாரு என்று  உங்களுக்கு தெரியுமா தெரியாதா?

 

ஜோசியம் படிச்சிருந்தா, நீங்க ஒரு ஜோசியரா இருந்தா, நான் சொல்றது சரியா தவறா என்று உங்களால் உணர முடியும்ல. அதுக்குத்தான் ஜோதிடம் படிங்கன்னு சொல்றது.

 

இவ்வளவு விஷயம் படிச்சு இருக்கீங்க, ஒரு 50 லட்சம் ரூபாய் முதலீடு பண்ணப் போறீங்க, என்னை நம்பி ஏன் முதலீடு பண்றீங்க? உங்களை நம்பி முதலீடு பண்ணலாம்ல.

 

நான் கல்யாணத்தை இப்படித்தான் சொல்லுவேன். இத்தனை வருஷம் நீ பார்த்து, பார்த்து, அதான் சொல்றேன்ல, நமக்கு டிரஸ் எடுக்கும் போது நாம பார்க்க மாட்டோம்ங்க. பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கும் போது போய் பாருங்க. ஒரு தடவைக்கு பெரட்டுவாங்க,  பெரட்டுவாங்க, பெரட்டுவாங்க,  பெரட்டுவாங்க. அந்த பொண்ணுக்கு அப்படி  டிரஸ் எடுப்பாங்க. அப்படி பாப்பாங்க. அப்படி படிக்க வைப்பாரு. அப்படி உயரமா இருப்பாரு. 

 

கல்யாணம் வரும் போது ஏன் என் கிட்ட வர்றீங்க? ஏன் வரீங்க? நீங்க படிங்க. உன் பொண்ணுக்கு, உன் மருமகனுக்கு எப்படி ஜாதகம் அமைப்பு வரணும்,  எப்படி உன் பொண்ணோட வாழ்க்கையை எப்படி நீ புரிந்து கொள்ள வேண்டும்? இது என்ன, நாங்களா தலையெழுத்தை மாத்துறோம்? 

 

அதுக்காகத் தான் ஜோதிடம் பாக்காதீங்க, ஜோதிடம் படிங்கன்னு என்று சொல்றதுக்கு காரணமே.

 

அட்சய லக்கன பத்ததியில் இந்த லக்னம் வளருகிறது. நீங்க புரியுது,  புரியல. ஆனா ஜோதிடம் மட்டும் படிச்சுக்கிட்டா என்னைக்கோ ஒரு நாள் லக்னம் வளருதுன்னு நீங்க புரிஞ்சுக்க முடியும்ல. நீங்க ஒரு வயசுல இருந்த  குழந்தையை பாக்குறீங்க. நான் 45 வயசு குழந்தையை  பாருங்கன்னு சொல்றேன்.  இந்த உடம்புக்கு இப்போது 45 வயசாயிப்  போச்சு இல்ல. இதில் இருந்து பாருங்க. அதான்  லக்னம் வளருதுங்க,  அதுதான் படியுங்கள், என்று சொல்றதுக்கு காரணம். 

 

படிச்சாதான் உணர முடியும். படிக்காத வரைக்கும் உணர முடியாது. புரியாத புதிராக தான் இருக்கும் இந்த ஜோதிடம். அப்ப தான் நீங்க என் கிட்ட கேள்வி கேட்க முடியும்.  படிச்சிருந்தா தானே ஜோதிடமே கேட்க முடியும். படிக்காத வரைக்கும் நம்ம வாழ்க்கையில என்ன பண்ணுவோம்? அந்த ஜோசியர் சொல்லிட்டாரு, நடந்துரும்னு இருப்போம். எப்படி நடக்கும்? நடக்கவே நடக்காது.

 

நீங்க படிச்சிருந்தா, உங்க ஜாதகத்துல, உங்களுக்கு இது கரெக்டாக அஷ்டமத்துல ராகு இருக்கு, ராகு தசை நடத்தும் போது, ரொம்ப கவனமாக நீங்க  பார்த்து போய் இருக்கலாம்ல.

 

நாங்க சொல்றத நம்பி ஏன் போறீங்க? அது சரியா, தவறா என்று  நீங்க வெரிஃபிகேஷன் பண்ணனும்ல. எல்லாத்தையும் வெரிஃபிகேஷன் பண்ண வேண்டியதில்லை. நீங்க சின்ன செயலா இருக்கட்டும், 

 

பெரிய செயலாக இருக்கட்டும், நல்லதாக இருக்கட்டும், கெட்டதாக இருக்கட்டும்,  எல்லாத்துக்கும் காலம்  பொதுவானது. அதனால தான் பார்த்து பார்த்து போறதுக்கு,  இந்த ஜோதிடமும், ஜாதகமும், வாழ்க்கையில அடிப்படையாக பிறந்ததிலிருந்து கடைசி காலம் வரைக்கும், இந்த ஜாதகம் தேவை தான். இது வேணும்னாலும் வேணாம்னாலும் இதுதான் உண்மை. அதற்குத் தான் ஜோதிடம் படிங்கன்னு சொல்றது.

 

ஏதோ இன்னைக்கு வருமானத்துக்காகவோ, இல்ல வாய்ப்புக்காகவோ, 

 

நல்ல பெயருக்காகவோ, புகழுக்காகவோ  இந்த ஜோதிடம் படிங்கன்னு சொல்லல.

 

உங்க வாழ்க்கையை நீங்க தீர்மானிக்கணும். உங்க வாழ்க்கை, உங்க கையில் இருக்கணும்கிறதுக்குத் தான், இந்த ஜோதிடம் படிங்கன்னு சொன்னேன். வேற ஒண்ணுமே கிடையாது. அதுக்காகத் தான் ஜோதிடம்  படிச்சா உங்க வாழ்க்கை மாறும் அப்படிங்கறது. ஜோதிடம் அத்தியாவசியமானதும், அவசியமானதும் ஆகும். 

 

சந்தோஷம். நன்றி. 

 

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


ALP Astrology