பெண்கள் ஒவ்வொருவரும் படித்து அறிய வேண்டிய ஒரு ஜோதிடக் கல்வி ( ALP ASTROLOGY )

ALP Astrology

நிகழ்வு தலைப்பு
1

முன்னுரை

ALP ஜோதிட வகுப்பில் பயின்ற, 49 வயது, குடும்பத் தலைவி ஒருவரின் அனுபவப் பகிர்வு…… 

 

அட்சய லக்ன பத்ததி - உணர்வதும் உணர்த்துவதும்…..

 

எண்கள் பற்றி படித்திருந்தாலே போதும். 

 

வீட்டின் கண்களாகிய பெண்கள் ஒவ்வொருவரும்  படித்து அறிய வேண்டிய ஒரு ஜோதிடக் கல்வி. 

 

பாரம்பரிய ஜோதிட முறைகளைப் படித்து அறிந்து ஆராய்ந்து பின், கால வளர்ச்சிக்குத் தகுந்தவாறு, ஒவ்வொரு பரிணாமமாக பார்த்து, பின் அதனை தொடர்ந்து பரிணாம வளர்ச்சியாக “ஆல மரவிழுதுகள் வேரூன்றி வேர்பிடிப்பது போல்,” ஏரென உழுது, களை களைந்து, பயிர்களை விளைவிப்பதுபோல், வான் நீர் ஆசி பெற்று திரு. பொதுவுடைமூர்த்தி ஆசான் அவர்கள், இவ்வுலகிற்கு கொடுத்த, “அட்சய லக்னம் வளரும் வளரும்.”

 

அறிமுகம் :

 

என்னுடைய பெயர் பா. உமா பார்வதி.      

 

என்னுடைய தொழில், குடும்ப மேலாண்மை ஆகும். 

 

எனது நீண்ட நாள் ஆர்வத் தேடல்,  ஜோதிடத்தை முழுமையாக படிப்பது எப்படி? ஆனால், இது எப்படி யாரிடம்,  எங்கிருந்து தொடங்கி படிப்பது, இது குருகுலக் கல்வியாக இருப்பின் எனக்கு எப்படி சாத்தியம்? 

 

இதற்கு விடையாக, எனது 49 வயதில்,  2024 /2025-ல், இறையருள் எனக்களித்த பிச்சை, அட்சய லக்ன பத்ததி என்னும் ஜோதிடக் கல்வி. அதுவும் அடிப்படை வகுப்பு, உயர்நிலை வகுப்பு, இரண்டும் சேர்த்து மொத்தமாக 55 நாட்களில்.    இதற்கு கால வரைமுறை என்பது, 15-15 மொத்தம் 30 நாட்கள். ஆனால் படித்துக் கொண்டிருந்த அத்தனை பேரையும்,  கை பிடித்து கற்றுக் கொடுத்து, ஒரு சேர வைப்பதே,  இந்த கல்வியைக் கற்றுக் கொடுத்த ஆசான்கள் திரு. பொதுவுடைமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலில், ஐயா. ரங்கநாதன் அவர்கள்,  ஐயா முத்துவிஜயகுமார் அவர்கள், ஐயா சத்யநாராயணன் அவர்கள், ஐயா சாந்தகுமார் அவர்கள், அம்மா  சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்கள், அம்மா உமா வெங்கட் அவர்கள், அம்மா நித்யா அவர்கள், அம்மா அமுதா அவர்கள், அம்மா அருளரசி பொதுவுடைமூர்த்தி அவர்கள்,  ஐயா ராஜ் அருளானந்தம் அவர்கள், மற்றும் பயிற்றுநர்கள், அனைவரின் நோக்கமாகும்.www.alpastrology.org

 

அதுவும் வீட்டிலிருந்தே கற்றுக் கொண்டோம். எத்தனை மணிக்கு? அதிகாலை 4.32 -லிருந்து. ஆரம்பமே அமர்க்களம் என்பது போல், யாருக்கும் எந்த விதத்திலும் தொந்தரவு இல்லாமல் நவகோள்களின் ஆசியுடன் பிரபஞ்ச ஆற்றலோடு, ALP எனும் ஜோதிட முறையை, மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து வகுப்பு நடத்துகிறார்கள்.

 

எல்லாவற்றிற்கும் முன்,  முதல் தொட்டு, அடிவரை, 64 காணொளிகளாக, வகுப்பில் சேரும் அனைவருக்கும் கொடுத்து, பின் கூடுதல் விளக்கங்களோடு, வகுப்பு நடத்துகிறார்கள். பயிற்றுநர்கள் தங்கள் மாணவர்களை நன்முறையில் பயிற்றுவிக்கிறார்கள். இது ஜோதிடக்கல்வி மட்டுமன்று, வாழ்வியல் கல்வியுமாகும். 

 

கோள்கள், நட்சத்திரங்கள், இதனைப் பற்றி அரிச்சுவடி  அறியாதவர்கள் கூட,  எளிதாகப் படிக்கும் வகையில்,  வரைமுறைப் படுத்தி, ஒவ்வொரு எண்களின் காரகத்துவங்களுக்கும்,  அழகான, தெளிவான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி,  விளக்குகிறார்கள். தமிழ் மட்டுமல்லாது கன்னடம், இந்தி, ஆங்கில மொழி  வாயிலாகவும் கற்றுத் தருகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும், பெண்கள் இதனை கற்றுக் கொண்டால், தங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்தி வழி நடத்த, இந்த ALP  ஜோதிடக் கல்வி பேருதவி புரியும்.

 

ஏனெனில், நாம் உணர்ந்து, பிறருக்கு (பிள்ளைகள்) வழிகாட்ட உதவும். எந்த காலத்தில், எப்படி செயல்பட வேண்டும், நன்றியுணர்வோடு இருக்க வேண்டும், பிறர் தவறுகளை மன்னித்து, நம் தவறுக்கு மன்னிப்பு கேட்பதோடு,  வாழ்வின் மேடு பள்ளங்களை, எப்படி கடந்து செல்ல வேண்டும் என்றும், இன்றைய உறவு நாளைய பகை, இன்றைய தோற்றம் நாளைய  மறைவு,  என்று உணர்ந்தும், வாழ வழி காட்டும், நமக்கு விதித்த விதி என்ன, நம் நடப்பு மதி என்ன, என்பதைத் தெரிந்து கொள்ளலாம் .

 

என்னுடைய அனுபவம் என்னவென்றால், எனக்கு ஏற்கனவே வீட்டுக் கடன் இருக்கிறது. என் எண்ணமாவது, நாம் எதையாவது சாதிக்க வேண்டும் என்று  எண்ணி, மறுபடியும் கடனுக்கு வங்கியின்  உதவியை நாடியது. சிறு கடன் பெரும் கடனாக மாற இருந்தது. இது என் மதி,  ஆனால் விதியல்ல என்பதை, இந்த வகுப்பில் படித்து தெரிந்து கொண்டு, அந்த நினைப்பை அப்படியே நிறுத்தி விட்டேன். ஆழமறியாமல் காலை விட இருந்தேன், தப்பித்துவிட்டேன்.www.alpastrology.com

 

இந்த ALP முறையில், மென்பொருள் அமைப்பை, ஆசிரியர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள், இணைந்து,  அரும்பாடு பட்டு உருவாக்கி அளித்துள்ளார்கள். அடிப்படை மென்பொருள் தகவலை, இலவசமாக வழங்கியுள்ளார்கள். நம் அலைபேசியிலேயே, வாழ்வின் வரைமுறையை அறிந்து கொள்ளும் வகையில், ஜோதிடத்தின் அனைத்து படி நிலைகளையும், சதவிகிதத்தோடு தெரிந்து கொள்ளலாம். என்ன படிக்கலாம், எப்படி படிக்கலாம்? வருமானம் வர வழி என்ன? யார் உறவு,  யார் பகை? திருமணம் எப்போது, யாரால்? எப்படி ? வீடு, வண்டி,  வாங்கலாமா, விற்கலாமா? சுற்றுலா செல்லும் நேரமா? போட்டித் தேர்வு எழுதலாமா? எப்படிப்பட்ட வேலை (அ) தொழில், தொழில் தொடங்கலாமா? தொழில் மாறலாமா, என்று அனைத்தையும் அறிந்து கொண்டு நடந்து கொள்ள ஏதுவாக மென் பொருள் அமைந்துள்ளது. புதிய அரிய முயற்சி வெகு சிறப்பு.

 

திரு. பொதுவுடைமூர்த்தி அவர்கள்,  இந்த ALP என்னும் ஜோதிட முறையை,  தெளிவு படுத்தவும், ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் மத்தியில், இதைக் கொண்டு சேர்க்கவும் அரும்பாடு பட்டிருக்கிறார்.

 

இறையருளால், திரு. பொதுவுடைமூர்த்தி அவர்களுக்கு கிடைத்த, ஜோதிட இணையாளர்கள், இவர்கள் அனைவரின் சேவை அர்ப்பணிப்பு, நம் அனைவருக்கும் கிடைத்த தித்திப்பு. 

 

வளருது ,வளருது, அட்சய லக்னம்  வளருது…..  

 

சுபம்.

 

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


ALP Astrology