ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
full video link: https://youtu.be/i1T9q6cr0F8?si=h_IL_N-44tdP8Bse
மருத்துவமனை சென்றும் தீராத பிரச்சினை, திசை தெரியாமல் போகும். - ALP ஜோதிட ஆய்வு. ALP ஸ்ரீ குரு. சாந்தகுமார், ALP ஜோதிடர்.
வணக்கம்.
நான், சாந்தகுமார், அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் மற்றும் நியுட்ரிஷனிஸ்ட்.
எனக்கு, 20 வருட அனுபவம் நியூட்ரிஷன் துறையில் உள்ளது. அந்த அனுபவத்தையும், ஜோதிடத்தையும் கலந்து, இன்று ஒரு ஆய்வு ஜாதகம் பார்க்கப் போகிறோம்.
ஜாதக ஆய்வு:
இந்த ஜாதகருக்கு தலைசுற்றல் உள்ளது. எல்லா மெடிக்கல் டெஸ்ட்டையும் எடுத்து விட்டார். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை. எல்லாமே நன்றாக உள்ளது, என்று டாக்டர்கள் கூறி விட்டனர். ஆனால் பிரச்சனை எங்கு தான் உள்ளது என்று கண்டு பிடிக்க முடியவில்லை. அது மாதிரியான குழப்பமான மன நிலையில், பய உணர்வோடு என்னிடம் வந்தார்.
எனக்கு பயமாக உள்ளது. தலை சுற்றி ஏதாவது விபத்து ஏற்பட்டு விடும், வண்டி ஓட்டும் போது மயக்கம், தலை சுற்றல் வந்து விடுமோ என்று பயம் அவருக்கு இருப்பதாகப் பகிர்ந்து கொண்டார்.
ALP முறையில், அவருக்கு என்ன பிரச்சனை என்பதை மிகத் துல்லியமாகச் சொன்னோம் .www.alpastrology.org
அதனை, காண்போம்.
ஜாதகரின் ஜென்ம லக்னம்: ரிஷபம்.
தற்போது 40 வயது கடந்தவர்.
தற்போதைய வயது வளர்ச்சிக்கேற்ப அட்சய லக்ன பத்ததி முறையில், அவருடைய லக்னம், கன்னி லக்னமாக உள்ளது .
இந்த கன்னியை, ALP லக்னமாக வைத்துக் கொண்டு, பலன்களை பார்ப்போம். அவருக்கு ஹஸ்தம் ஒன்றாம் பாதம் போய்க் கொண்டிருக்கிறது. ஹஸ்தம் ஒன்றாம் பாதம், சந்திரனை குறிக்கின்றது.
சந்திரன் 6-ல். எனவே அவருக்கு ஆரோக்கிய குறைபாடு, அதுவும் வயிறு சம்மந்தப்பட்ட ஆரோக்கிய குறைபாடுகள் உள்ளதை பார்க்கின்றோம்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தலை சுற்றல் வருமா? ஆம். வரும்.
வயிற்றில் குறிப்பிட்ட அளவு பாக்டீரியாக்கள் கிடைக்கவில்லை
எனில், தலை சுற்றல் வரும். மூளையின் செயல்பாட்டை பாதிக்கக் கூடிய, தன்மை கொண்டது .
லக்னம் என்பது தலை. ஜென்ம லக்னப்படி எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஜாதகர்
அவஸ்தைப்படுவது உண்மைதானே.
ஆனால், இந்த ALP லக்னத்தில் சனி பகவான், செவ்வாய் பகவான் உள்ளனர்.
செவ்வாய் என்பது, சூடு, வேகம். சனி என்பது குளிர்ச்சி, நிதானம். இது, இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள போராட்டம்.
தலையில் உள்ள ரத்தத்தின் வேகம், சில நேரங்களில் வேகமாகவும், சில நேரங்களில் நிதானமாகவும் செல்வதால், மாறி, மாறி நிகழ்வதால் ஏற்படும் போராட்டங்கள், அவருடைய தலை சுற்றலுக்கு காரணம்.
கன்னி லக்னத்தின், ஆறாம் அதிபதி சனி பகவான் லக்னத்தில் உள்ளதால்,
இந்தப் பிரச்சனை உறுதியாகிறது.
எட்டாம் அதிபதி செவ்வாய் மற்றும் ஆறாம் அதிபதி, இவர்கள் இருவருக்கும் உள்ள போராட்டம் அவரின் தலைக்குள்.
மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை எவ்வாறு பார்ப்பது?
மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம், நம் உடலுக்கு தகுந்த மாதிரி, வேகமாகவும் மெதுவாகவும் செல்வதற்கு உதவுவது கழுத்துப் பகுதி.
கன்னி லக்கன அதிபதி புதன், 3-ல் இருக்கிறார். பிரச்சனையை கொடுக்கின்றார். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை தருகிறார். இந்த பாதிப்பின் விளைவுகள், தலை சுற்றல் ஆக வெளிப்படுகிறது. எனவே இவரை காது மூக்கு தொண்டை நிபுணரிடம் சென்று, காதை சரி பார்க்குமாறு அறுவுறுத்தினோம்.
காதுக்குள் உள்ள ஏர் ட்ரம் என்னும் பகுதி, நிதானம் இழப்பதால் தலை சுற்றல் ஏற்படும்.
நம் உடல் இயக்கமானது, எப்படி ALP மூலம் எதிரொலிக்கிறது என்பதை நாம் தெளிவாகக், கூற முடிகிறது.
லக்ன அதிபதி, 3 -ல் இருப்பது, லக்னத்தை பாதிக்கிறது .
எட்டுக்கு எட்டு ஆக மூன்றில் உள்ளதால், ஜாதகர் பயந்து உயிர் பயம் ஏற்பட்டுள்ளது.
இவருக்கு சில உணவு முறை ஆலோசனை கூறினேன்.
வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் குறைவாக இருப்பதால், உங்களுக்கு பிரச்சனை. நீங்கள் முன்பு எடுத்துக் கொண்ட மருந்துகளின் பக்க விளைவுகளால், வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிந்துள்ளது. வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் இல்லாதது, உங்களுக்கு இந்த விளைவுகளைத் தந்துள்ளது.
எனவே நீங்கள் யோகர்ட் அல்லது தயிர் சாப்பிடுமாறு அறிவுறுத்தினேன். ENT காது மூக்கு தொண்டை நிபுணரிடம் ஆலோசனை பெறச் சொன்னேன்.
கழுத்து எலும்பு தேய்மானமாக இருந்தாலும், இந்த தலை சுற்றல் பிரச்சனை இருக்கும். எனவே அதற்கு பிசியோதெரபி செல்லுமாறு அறிவுறுத்தினேன்.
இதெல்லாம் மிக மிக எளிய வழிமுறைகளே.
பல லட்சங்கள் செலவு செய்தும், அவருக்கு கண்டு பிடிக்க முடியாத பிரச்சனைகளை, அட்சய லக்ன பத்ததி முறையில், துல்லியமாக, எளிமையாக ரசிக்கக் கூடிய முறையில், பலன்களை கண்டெடுத்தோம்.
இந்த மாதிரி, நம்ம வாழ்க்கையில் என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது?
என்ன பிரச்சனைகள்? அதற்கான வழிமுறைகள், அதனை கடைபிடிக்கும் வழிகளை பார்த்துக் கொள்ள முடியும்.www.alpastrology.com
இதுவே ALP -ன் சிறப்பு.
இதனை உருவாக்கி கொடுத்து, நம்மை வழி நடத்தி இது தான் நிகழ்வுகள் என கற்றுக் கொடுத்து, அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக, எளிமையான படைப்பினை கொடுத்த உயர்திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology