ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
full video link: https://youtu.be/1uo2FjsiKH8?si=NQGFlLI1i3sQbKqd
நான் சாந்தகுமார்.
அட்சய லக்கன பத்ததி ஜோதிடர், சென்னையில் இருந்து.
ஜோதிடம் பார்ப்பதன் முக்கியமான நோக்கமே, வாழ்க்கையில் இருக்கின்ற தீராத பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தேடுவது தான்.
ஜோதிடம் பார்க்க வருபவர்கள் தங்கள் பிரச்சனையை பெரிதாக நினைக்கிறாங்க.
என்னை விட, என் பிரச்சனைகள் பெரிதாக உள்ளது. அதை என்னால் கையாள முடியவில்லை என்ற நிலை வரும் போது நிலை தடுமாறிப் போகின்றோம்.
ஆனால் அந்தப் பிரச்சனை என்ன, அது எதனால் நடக்கின்றது, என்பதை புரிந்து கொள்ளும் போது, அந்தப் பிரச்சனை சிறியதாகி, நான் பெரியவனாகிறேன்.
அந்தப் பிரச்சனை எவ்வளவு உயரமோ, அவ்வளவு உயரத்திற்கு நான் வளர முடியும்.எனவே, ஒவ்வொரு பிரச்சனையும் தடைகள் அல்ல, படிக்கல்.
தடைக்கல் ஆக்குவதும் படிக்கல்லாக மாற்றுவதும் நம் கையில் தான் உள்ளது.
இதை ஒரு உதாரணத்துடன் காண்போம்.www.alpastrology.org
பிரச்சனைகளைப் பற்றி அதிகமாக சிந்திக்கிறவங்க இதை நன்றாக கவனிங்க.
கவனகர் கனக சுப்பு ரத்தினம் என்று ஒருத்தர் இருந்தார். அவருடைய சொற்பொழிவில் தான் நான் இதை கேட்டேன். அதை அப்படியே, அவருடைய வார்த்தைகளாக உங்களுக்கு சொன்னால் நல்லா இருக்கும்.
தற்கொலை பண்ணிக்கனும்னு நினைக்கிற ஒருத்தன், அந்த தற்கொலை எண்ணத்தை கொஞ்ச நேரம் தள்ளி வைத்துவிட்டு, அவருடைய பேச்சு கேட்க வந்தானாம். அந்த சொற்பொழிவை கேட்டு கேட்டு ரொம்ப உற்சாகப்பட்டு, நான் ரொம்ப உற்சாகமாகிட்டேன். தற்கொலை எண்ணத்தை, முடிவை கை விட்டுட்டேன். ஆனால், என்னுடைய காதல் தோல்வியை மட்டும் என்னால ஏத்துக்க முடியல, அப்படின்னு சொல்லி அவர் கிட்ட பேசுகிறான். அப்போ அவர் வந்து, ஆடியோ ஒன்று கொடுத்து, இந்த ஆடியோவை கேட்டு விட்டு வா. அதுக்கப்புறம் உனக்கு நான் அறிவுரை சொல்றேன், அப்படின்னு சொல்றார். அப்ப அந்த ஆடியோல என்ன இருக்குதுன்னு கேட்டுப் பார்க்கிறான். ரொம்ப ஆர்வமா கேட்கிறான். திரும்பத் திரும்ப கேட்டுப் பார்க்கிறான். ஆனா அதுல ஒரே ஒரு வரி மட்டும் தான், திரும்பத் திரும்ப ரிப்பீட் ஆகுது .
“என் ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது” என்ற அந்த ஒரு வரி மட்டுமே, ஒரு ஆயிரம் முறை ரிப்பீட் பண்ணி வச்சிருக்காங்க, அந்த டேப்ல. ரொம்ப அப்செட் ஆயிட்டான். என்ன இவ்வளவு பெரிய ஸ்பீச் கொடுக்கிறவர், நமக்கு இந்த மாதிரி ஒரு பாட்டு மட்டும் கொடுத்திருக்காரு. ஒரு வேளை டேப் மாறி போச்சா, அப்படின்னு திரும்பப் போய் அவரைப் பார்க்கிறான் ..
அவரிடம் இந்த பாட்டு மட்டும் தான் இருக்கு என்கிறான். அதற்கு அவர் ஆமாம், நீ மட்டும் என்ன பண்ற? உன் வாழ்க்கையில் நடக்கிற விஷயத்தை, பிரச்சனைகளை திரும்பத் திரும்ப, அதே ரிப்பீட் மோட்லதான கேட்டுக்கிட்டே இருக்கிறாய்.
மனசுக்குள்ள பிரச்சனைகளை கேட்டுக்கிட்டே இருந்தா, வேற என்ன வரும்? நீ அந்தப் பிரச்சனையைத் தாண்டி சிந்திக்காமல், பிரச்சனைக்குள்ள மாட்டிகிட்டு நிற்கிறாய். அப்படின்னு சொல்லி அதைப் புரிய வைக்கிறார்.
அவர் என்ன சொல்ல வரார்னா, ஒரு பிரச்சனை வந்திருச்சு. உண்மைதான். பிரச்சனைகளை சந்திக்கிறோம். ஆனால், அந்த பிரச்சனைகள் எப்ப வருது? நல்லா கவனிச்சு இருக்கீங்களா?
நமக்கு சின்ன வயசுல இருந்தே பிரச்சனைகளை நாம் கடந்துதான் வந்திருப்போம். பிரச்சனை வரும் போது எல்லாம், நமக்கு வலி இருந்தாலும், அந்தப் பிரச்சினையை தாண்டுகிற வலிமையை நம்ம உருவாக்கி கொள்ளும் போது, நாம் ஒரு மேம்பட்ட நிலைக்கு நகர்ந்து வந்திருப்போம்.
கடவுள் நமக்கு வாழ்க்கை முழுக்க, இந்த மாதிரி சின்னச் சின்ன பிரச்சனைகளைக் கொடுத்து, நம்மை வலிமைப் படுத்திக் கொண்டு இருக்கிறார். அடுத்த நிலைக்கு நகர்த்துகிறார் என்ற புரிதல், நமக்கு வந்துருச்சுன்னா, நாம் வாழ்க்கையை அணுகும் முறையே மாறிடுது.
பிரச்சனை வரும் போது எல்லாம், எனக்கு ஒரு டாஸ்க் கொடுத்துட்டாரு கடவுள். நான் இதை வந்து தாண்டும் போது, நான் இன்னும் மேம்பட்ட ஒரு மனுஷனா இருக்க போறேன், என்ற பார்வை இருக்கு இல்லையா, அது தான் வாழ்க்கை.
முன்னேற்றத்திற்கான அடிப்படை, பிரச்சனைகள் வரணும், அவற்றை சமாளிக்க பழகணும்.
உதாரணம், ஒரு டாக்டர் கிட்ட போறாங்க ஒரு லேடி. அவங்க டாக்டர் கிட்ட சொல்றாங்க, எனக்கு தலை சுற்றலா இருக்கு, வாந்தி வருகிறது, இந்த இடத்துல வயிற்றில் இந்த பக்கத்துலையும் அப்பப்போ வலி வருது. தூங்கவே, முடியல, எனக்கு படபடப்பு இருக்குது.
அமைதியாகக் கேட்ட டாக்டர், இதெல்லாம் நோட் பண்ணிட்டாங்க. அதன் பின் அந்த டாக்டர் சொன்னாங்க, இதெல்லாம் அப்சலூட்லி நார்மல், ப்ரக்னண்டா இருந்தா, இதெல்லாம் வரத்தான் செய்யும். இதெல்லாம் இருந்தா தானே பிரகனண்ட்னு அர்த்தம். அப்போ பிரக்னன்ட், ஒரு டெலிவரி வர்றதுக்கு, அடுத்த ஒரு மகிழ்ச்சியான நிலவரத்துக்கு, இந்த பிரச்சனைகள் எல்லாம் ஹேண்டில் பண்ணி தானே ஆகணும்.
அப்படித்தான் வாழ்க்கை ஒரு நல்ல நிகழ்வுக்கு முன்னாடி, அதற்கு முன்னாடியே இருக்கிற தயார் படுத்துதல் தான், இந்த பிரச்சனைகள். இதை இந்த நோக்கத்தோடு கையாளும் போது, அது ரசனையாக மாறிடும்.
பிரச்சனைகளை ரசிக்கத் தெரிந்தால் தான், வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும், அப்படிங்கிறது தான் இங்கு இருக்கிற படிப்பினையா, நம்ம எடுத்துக்கணும்.
பாரதப்போர் முடிவில், கிருஷ்ணர் பாரதப் போர் எல்லாம் முடிஞ்சு கிளம்புறார். தன்னுடைய ஊருக்கு திரும்பி போறாரு. போறதுக்கு முன்னாடி, அவங்க எல்லாருக்கும், என்ன வரம் வேணும்னு கேட்டுக் கிட்டே வரார்.
அப்போ குந்தி தேவி கிட்ட கேட்கிறார். அத்தை நீங்க வாழ்க்கை ஃபுல்லா கஷ்டங்களை பார்த்து இருக்கிங்க. உங்களுக்கு என்ன வரம் வேணும், அப்படின்னு கேட்கிறார். www.alpastrology.com
அதற்கு குந்தி தேவி, எனக்கு இன்னும் நிறைய கஷ்டம் குடு என்று கேக்குறாங்க.
அப்போ, கிருஷ்ணர் கேட்கிறார், வாழ்நாள் ஃபுல்லா பிரச்சனைகளை மட்டுமே பார்த்துட்டு இருந்த நீங்க, ஏன் இன்னும் கஷ்டம் கொடு என்று கேட்கிறீர்கள், என்கிறார்.
அத்தை குந்திதேவி சொல்றாங்க. கஷ்டம் வந்த போதெல்லாம் நீ என் கூட இருந்த. அப்ப நீ என் கூட இருக்கணும்னா, இன்னும் கொஞ்சம் கஷ்டங்களை அனுபவிக்கலாமே, அப்படின்னு சொன்னாங்களாம்.
கஷ்டம் கொடுக்கும் போதெல்லாம், கடவுள் உங்க கூட இருக்காரு. இதனை, நீங்க புரிஞ்சுக்கிட்டீங்கன்னா, அந்த கஷ்டங்களை கடந்து போவதற்கான அடுத்த நிலைக்கு நீங்க வளருவீங்க.
இப்ப ஜோதிடம் எங்க பயன்படுது? இந்த கஷ்டங்கள் எதனால் வருகிறது? அடுத்த கஷ்டங்கள் முடிந்து, அடுத்து என்ன மேம்பட்ட நிலைக்கு நாம் நகர முடியும்? மாற்றம் எப்போது வரும்? அப்படிங்கற புரிதல் வந்துருச்சுன்னா, கஷ்டத்துக்கு அப்புறம் இருக்கிற சுகம் என்னன்னு தெரிஞ்சுருச்சுன்னா, இந்த கஷ்டத்தை தாங்கறதும், அதை ஏற்றுக் கொள்வதும், அதை மேற்கொள்ளும் வலிமையும் நமக்கும் கிடைக்கும்.
அதுக்குத் தான் ஜோதிடம் தேவைப்படுகிறது.
ஜோதிடம் படிங்க. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology