ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
full video link: https://youtu.be/CZJ3lf70Dkc?si=VB_f3lvfqLv_8cyN
வாஸ்து பார்த்து வீடு கட்டியுள்ளார்கள். அவர்களால் வீட்டுக்கே போக முடியவில்லை. ஏன் என்பதை அட்சய லக்கன பத்ததி ஜோதிட முறையில் பார்க்கலாம். - ALP ஜோதிட ஆய்வு.
ALP ஜோதிட கண்டுபிடிப்பாளர். Dr. பொதுவுடைமூர்த்தி.
அனைவருக்கும் வணக்கம்.
ஜோதிடம் ஏன் படிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. நம் வாழ்க்கையில் வந்து அடிப்படையான சில நிகழ்வுகள் உள்ளன. ஒரு அம்மாவை பாத்து, ஒரு பெண் குழந்தை, அந்த வீட்டில் உள்ள சமையலை கற்றுக் கொள்கிறது. அவ்வளவு அழகாக கற்றுக் கொள்கிறது இதற்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்றால், கிடையாது. நம் வாழ்க்கையில் ஜோதிடம் என்பது, பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் நம் வாழ்க்கையில் அன்றாட தேவைகள், நிறைய கேள்விகள் இது நடக்குமா நடக்காதா? நான் காதல் செய்கிறேன். இந்தக் காதல் ஜெயிக்குமா? இந்தக் காதல் தோற்குமா? என் வாழ்க்கையில் இந்த நிகழ்வுகள் இருக்கிறது. நான் ஒரு வீடு வாங்கணும், இடம் வாங்கணும், சொத்து வாங்கணும், சுகம் வாங்கணும். ஆயிரம் ஆயிரம் கேள்விகள் இருக்கிறது, அன்றாட வாழ்க்கையில்.
இன்றைக்கு நீங்கள் ஒரு Google மேப்பை எப்படி பார்க்கிறீர்களோ, Google மேப்பை என் கைல வைத்துக் கொண்டு, நீங்க லெப்ட் போங்க, ரைட்டு போங்க என்று சொன்னால் எப்படி இருக்கும்? எப்படி இருக்கும் வாழ்க்கை. ஆயிரம் ஆயிரம் கேள்விகளை கேட்டுகிட்டு நாம இங்கேயே உட்கார்ந்துகிட்டு, போனில் கேட்டுக் கொண்டே போக முடியுமா? வாழ்க்கை நல்லா இருக்குமா என்றால் நல்லா இருக்காது.
வாழ்க்கையோட பயணம் என்பது, நம்மளுடைய ரூட் என்பது இந்த ஜோதிடம் என்பது, கடவுளுடைய வரம். நம்ம வாழ்க்கையில பெரிய வரமே, இந்த ஜோதிடம் தான். கண்டிப்பாக ஒவ்வொருத்தரும் ஜோதிடம் படிக்கணும் அப்படின்னு கேட்டுக்குறேன். ஏனென்றால் இந்த ரூட் மேப் நான் தான் பார்க்க முடியும். என்னுடைய ரூட் மேப் நான் தான் பார்க்க முடியும். வேற யாரும் பார்க்க முடியாது. வாழ்க்கையில நிறைய கேள்விகள் என்னன்னா, நான் ஏன் பார்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக நீங்க ஒருமுறை அந்த பாதையில் போய் பாருங்களேன். என்னன்னு தெரிஞ்சா தான், அவ்வளவு சந்தோஷமா இருக்கும். கண்டிப்பா நீங்க ஜோதிடம் படிக்கணும். என்னிடம் ஒருவர் கேட்டார் இந்த ஜோதிடத்துக்கும், வாஸ்துக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா என்று கேட்டார். என்னுடைய நேரம், என்னுடைய ஜாதகம் நல்லா இருந்தால் மட்டும் தான், இந்த வாஸ்து என்பது மிக பிரம்மாண்டமாக அமையும். இல்லை என்றால் அமையாது. என்னுடைய ஜாதகத்திற்கு தான்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல்வாதி அவர் பார்க்காத ஜோதிடம் கிடையாது. பார்க்காத வாஸ்து கிடையாது. வாஸ்து பார்த்து வீடு கட்டியாச்சு. ஆனால் அந்த ஜாதகர், அந்த வீட்டிற்கு போக முடியவில்லை ஏன்?. அந்த வீட்டிலேயே இல்ல இப்போ. தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு அரசியல்வாதி. அப்போ அவருக்கு என்னன்னா எல்லா வசதி வாய்ப்பு இருந்தது அல்லவா, போய் இருக்கலாம் அல்லவா. ஒருத்தர் இல்ல இரண்டு பேர் இல்ல மூன்று நபர்கள். www.alpastrology.com
மறைந்த முன்னாள் முதல்வர். எம்ஜிஆர் அவர்களுடைய வீடாக இருக்கலாம் ஜெயலலிதா அம்மா அவர்களுடைய வீடாக இருக்கலாம். நிறைய பேரோட வீடு, வாஸ்து அவ்ளோ அழகா பார்த்து பார்த்து கட்டுன விஷயங்கள் அவ்வளவும். அவர்கள் இருந்த வரைக்கும் அந்த வீடு செல்வ செழிப்பாகவும் அந்த வீடு முழுக்க முழுக்க அவ்வளவு அழகா இருந்தது. ஒரு நாளைக்கு எத்தனை முக்கிய பிரபலங்கள் அந்த இடத்தில் அழகா வந்து போனாங்க. அதன் பிறகு அடுத்து வர கூடிய கால கட்டங்களில் அந்த தலைவர் இல்லை என்றால், அந்த ஜாதகம் முடிவு பெற்ற நிலையில், அந்த வீட்டினுடைய வாஸ்து என்ன ஆயிற்று? அந்த வாஸ்து பேசி இருக்கணும்ல அந்த இடத்தில்? யாரையாவது ஒருத்தரை உட்கார வைத்து இருக்கணும்ல? யாரையாவது ஒருத்தரை உட்கார வைத்து அழகு பார்த்து இருக்க வேண்டும் அல்லவா?
அப்போ என்னுடைய ஜாதகத்திற்கு தான் வாஸ்து என்பது முழுமையாக பேசும். என்னுடைய நாலாம் வீடு நல்லா இருந்தால் வீடு அமையும். என்னுடைய நாலாம் வீடு நல்லா இருந்தா, என்னுடைய வீடு மனை அமையும். என்னுடைய நாலாம் வீடு நல்லா இருந்ததா, பெரிய பங்களா மாதிரி வீடு அமையும் என்பது தான் நாங்கள் சொல்வது.
அப்போ ஒரு ஜாதகத்திற்கு, சார் உங்களுக்கு செவ்வாய் நல்லா இருக்கு சார். உங்க ஜாதகத்துல செவ்வாய் நல்லா இருக்கு சார். தெற்கு பார்த்த வீடு கட்டுங்க சார். குரு நல்லா இருக்கு சார். வடகிழக்கு மனையை வந்து அமைச்சுக்கோங்க சார். ராகு நல்லா இருக்கு சார் தென் மேற்கு மனை அமைச்சுக்கோங்க சார். இது எப்படி சார் ராகு நல்லா இருக்காரா குரு நல்லா இருக்காரா? கேது நல்லா இருக்காரா? செவ்வாய் நல்லா இருக்காரா? எப்படி தெரிந்து கொள்வது?. என்றால், ஒவ்வொரு கிரகத்துடைய வேல்யூ நமக்கு தெரிஞ்சி வச்சிருக்கணும். இது ஜோதிடம் படிக்கணும் ஜோதிடம் படித்தால் தான் அழகா புரியும் இல்லாட்டி வாஸ்து சம்பந்தப்பட்டது படித்தால் தான் ஜோதிடம் புரியும். அப்போ செவ்வாய் நல்லா இருக்குயா. அப்போ உங்களுக்கு தெற்கு பார்த்த மனை அமைச்சுக்கோங்க. இல்ல சார், உங்களுக்கு சுக்கிரன் நல்லா இருக்கு. தென்கிழக்கு மனை அமைச்சுக்கோங்க. தென்கிழக்கு மனை நல்லா பயன்படுத்துங்க. தென்கிழக்கு மனையில, வெள்ளைக் கலரில் பெயிண்ட் அடிங்க. கண்டிப்பா உங்க வாழ்க்கையில பெரிய அளவுல ஒரு வாய்ப்பு இருக்கும்.
வீடெல்லாம் மாத்தாதீங்க உங்க ஜாதகத்துக்கு தகுந்தாப்ல அந்த மனையில் இருக்கக்கூடிய சில மாற்றங்கள் பண்ணுங்க. உங்க வாழ்க்கையில வாஸ்துங்கிறது அவ்வளவு பெரிய பொக்கிஷம். ஏன்னா வாஸ்துங்கிறது, ஒரு மனிதனுடைய அன்றாட நிகழ்வில், ஒரு முழு பரிணாமமே எங்க இருக்கும்னா, நாம இருக்க கூடிய இடம்தான். அது இடமா இருக்கலாம். வீடாக இருக்கலாம். ஆபீஸ் ஆக இருக்கலாம் வெளியூர் ஆக இருக்கலாம். வெளியிடமா இருக்கலாம். நீங்க எங்க போய் எந்த இடத்தில உட்கார்ந்து இருந்தாலும், முழுக்க முழுக்க 100 சதவீதம் அந்த இடத்துக்கு வாஸ்து பேசுமா என்றால் பேசும்.
இப்ப சார் எனக்கு வந்து சந்திரன் நல்லா இருக்கு சார். அப்போ நமக்கு வந்து வட மேற்கு பயன்படுத்துங்க. சார் சூரியன் நல்லா இருக்கு சார். கிழக்கு பயன்படுத்துங்க. இப்போ நம்மளுடைய கிரகங்களுடைய வால்யூ நமக்கு தெரிந்தால் மட்டும் தான் நமக்கு எந்த பக்கம் திசை நாம பயன்படுத்த முடியும் என்பது தெரியும். புதன் நல்லா இருக்கு சார். வடக்கு நல்லா பயன்படுத்தலாம். வடக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு நண்பரிடம் சொன்னேன் உங்களுக்கு புதன் கிரகம் நல்லாருக்கு. வடக்குத் திசையை நல்லா பயன்படுத்துங்க. நான் வீட்ல வடக்கு பக்கம் திசை நிறைய பயன்படுத்துறேன். வடக்கு தான் சார் உட்கார்ந்து இருக்கேன். வடக்கு தான் சார் வீட்ல முழு நேரமா வீட்டில் நான் இருக்கிறேன் என்று பதிவு செய்தார்.
சார் உங்களுக்கு ராகு நல்லா இருக்கு சார். தென்மேற்கு திசை பயன்படுத்துங்கள். அவருடைய வாழ்க்கையில, சார் நான் தென்மேற்கு திசையில் தான் சார் நிறைய பெரிய அளவில் சக்சஸ் பண்ணேன். எப்படிங்க நான் பிறந்த ஊர்ல இருந்து தென்மேற்கு திசையில் போயிருந்தேன் சார் கேரளாக்கு போயிருந்தேன் சார் அங்க போனதுக்கு பிறகு தான் வாழ்க்கை மாறியது.
சார் உங்களுக்கு வடகிழக்கு போங்க சார். குரு நல்லா இருக்கு சார். வடகிழக்கு போனதுக்கு பிறகு தான் சார் என்னோட வாழ்க்கைல மிகப் பெரிய மாற்றமே வந்தது, என்று ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு திசைகளும் திக்குகளும் மிக அழகாக பயன்படுத்தலாம். ஏன்னா அக்ஷய லக்ன பத்ததியில், பத்து வருடம் லக்னம் மாறும் போது, வீட்டின் உடைய திசைகள் மாறுமா? மாறாது. ஆனா நம்ம என்ன பண்ணுவோம் திசைகள் நம்ம பயன்படுத்த வேண்டி இருக்கு. இந்த வருஷம் நமக்கு மேற்கு திசை நல்லா. இந்த வருஷம் நமக்கு கிழக்கு திசை நல்லா இருக்கு. கிழக்கு திசை நல்லதா, கிழக்கு பக்கம் சூரியனுடைய அமைப்பு நல்லா இருக்கா. அப்ப எப்போதும் கிழக்கு திசை பயன்படுத்துங்கள்.
சார் நான் அமெரிக்கா போய் இருக்கேன் சார். அங்கேயும் கிழக்கு திசையில பயன்படுத்துங்க. ரூம் இருக்கு சார் அது எப்படி சார் பயன்படுத்துறது. அதுலயும் கிழக்கு பக்கத்தை பயன்படுத்துங்க.
இந்த கிரகங்களோட வேல்யூ எப்படி கண்டுபிடிக்கிறது? அதுக்காக தான், நான் ஒரு சாப்ட்வேரே பதிவு பண்ணினேன். ஏன்னா அந்த சாப்ட்வேர் எப்படின்னா, எல்லாருக்குமே அது பயன்படணும்னு. இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில், கிரகங்களுடைய வேல்யூ, நட்சத்திரத்தினுடைய வேல்யூ, பாவங்களோட வேல்யூ, இது எல்லாம் தெரிந்தால் மட்டும் தான் ஒரு ஜாதகத்தில் முழுமையாக நாம பதில் சொல்ல முடியும் அப்படிங்கிறது தான் நம்முடைய அட்சய வாஸ்து. இது போன்ற விஷயங்களை நாம் நிறைய இடத்தில் பதிவு பண்றோம்.
கண்டிப்பா வாஸ்து என்பது மிக பிரம்மாண்டமானது. அதில் எனக்கு அப்படிங்கிற ஒரு வாஸ்து இருக்கிறது பாருங்கள். என்னுடைய ஜாதகத்துக்கு தான் வாஸ்து. நான் இருந்தா தான் அந்த வாஸ்து பேசும். நான் இல்லைனா எப்படி அந்த வாஸ்து பேசும். வாஸ்து முறையில் வீடு கட்டி இருக்கீங்க, வீடு பெரிய வீடா, மாத்தி அமைச்சாச்சு.
என்னுடைய பிரண்டு ஒருத்தர் பெங்களூர்ல பெரிய பிரம்மாண்டமா ஏழு மாடி கட்டிடம். எல்லா வாஸ்து முறைகளையும் கூப்பிட்டு பார்த்துட்டாரு. எல்லா வாஸ்து பரிகாரமும் பண்ணிட்டாரு. பண்ணதுக்கு அப்புறம், என்னை அழைத்தார். அப்போது நான், இந்த வீடு நீங்க வித்துருவீங்க. இந்த வீடு உங்ககிட்ட இருக்காது, அப்படின்னு சொன்னேன். அதே மாதிரி அந்த வீடு வித்துட்டார். அவர் சொந்தமா, பார்த்து பார்த்து ஏழு மாடி கட்டிடத்தை, பார்த்து பார்த்து கட்டுனவரு. இந்த பரிகார முறையி எல்லாம் பண்ணிட்டாரு. வாஸ்துக்காக என்னெல்லாம் பண்ணனுமோ பண்ணிட்டாரு. தமிழ்நாட்டுல இல்ல, இந்தியால உள்ள அத்தனை ஸ்பெஷலிஸ்ட்களையும் அவர் வீட்டுக்கு கூப்பிட்டு காண்பித்துள்ளார். அவர் பேர் சொல்லக் கூடாதுன்னு சொல்லல. அவர் பெயர் சொன்னால் தமிழ்நாட்டில் மட்டுமில்லை, இந்திய அளவில் எல்லாருக்கும் தெரியும். மாடிக் கட்டடத்தை, நான் போன இந்த வீடு இடத்த வித்துருவீங்க அப்படின்னு சொன்னேன். அடுத்த மூணு நாள்ல வித்துட்டாரு. அது பக்கத்துல ஒரு மூணு மாடி ஒரு கட்டடம் ஒண்ணு. அதுல தான் நீங்க வசிப்பீங்க. அவ்வளவு அழகா வசிச்சாரு. அவ்வளவு சந்தோஷமா இருக்காரு. அவர் ராஜஸ்தான் பூர்வீகம். அப்புறம் கர்நாடகாவில் இருந்து, இப்ப பாத்தீங்கன்னா, அவர் டெல்லியில் இருக்கிறார். அவர் ஒரு அரசியல்வாதி.
ஜாதகம், முழுக்க முழுக்க என்னுடைய ஜாதகத்துக்கு தான் வீடு. என்னுடைய ஜாதத்துக்கு தான் வாஸ்து அமையும். அப்படிங்கிறத இந்த நேரத்துல பதிவு பண்றேன். கண்டிப்பா ஒவ்வொரு ஜாதகத்திலும், ஒவ்வொரு விதமான அனுபவங்கள், ஒவ்வொரு விதமான நிறைய நிகழ்வுகள் இருக்கு. கண்டிப்பா அட்சய லக்ன பத்ததி ஜோதிடம், உங்களோட வாழ்க்கைய வளமாக்கும் அப்படிங்கிறத இந்நேரத்தில் சொல்றேன். www.alpastrology.org
அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில், வாஸ்து முறைகள். நம் சென்னையில பார்த்தீர்கள் என்றால் இடமே 600 சதுர அடி தான் இருக்கும். அங்கே பார்த்தீர்கள் என்றால், 700, 1200, 2000 சதுர அடி தான் இருக்கும். அதுக்குள்ள ஒரு வீட்டை அமைக்கணும் என்றால், தென் மேற்கு திசை பயன்படுத்தக் கூடாது. வட கிழக்கு திசை பயன்படுத்தணும். இப்படி நிறைய நிகழ்வுகள் நமக்குள்ள இருக்கு. செப்டிக் டேங்க் வைக்கக்கூடாது. அங்க 1200 சதுர அடிக்குள்ள தான் நாம பயன்படுத்த முடியும். அத நாம திட்டமிட முடியும். ஆனாலும் நாங்க என்ன சொல்றோம், ஒரு ரூம் இருக்குல்ல. ஒரு ரூம்ல எட்டு திக்குகள், நாலு திசைகள். அந்த எட்டு திக்குகள்ல உதாரணத்துக்கு, உங்களுக்கு தென்கிழக்கு சுக்கிரன் நல்லா இருக்கு. நீங்க சூப்பரா பயன்படுத்துங்க தென்கிழக்கை. இல்ல சார், உங்களுக்கு வடமேற்கு நன்றாக இல்லை, வடமேற்கு நீங்க பயன்படுத்தவே பயன்படுத்தாதீங்க. சந்திரன் பலகீனமா இருக்கு. நீங்க அங்க போனா சண்டை போடுவீங்க. தயவு செய்து அந்த பக்கத்துக்கு போகாதீங்க.
என்னுடைய நண்பர் ஒருவர், ஆபீஸ் டேபிள் வடமேற்கு போட்டு வைத்திருந்தார். சார் எங்க பாத்தாலும், அங்க போனேன் என்றால், எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுட்டு இருக்கேன் சார். இந்த டேபிள கொஞ்சம் மூணு அடி தள்ளி போடுங்க சார் நல்லா இருக்கும். கொஞ்சம் முன்னாடி தள்ளி போட்டு இருந்தாரு. இப்ப கொஞ்சம் பரவாயில்லை சார், என்று சொன்னார்.
அப்போ இந்த இடத்துல இருந்து, இந்த இடம் மாறுவது. அப்ப நாங்க என்ன பண்ணனும்? அதுக்கு ஒரு காலம், இவ்வளவு தூரம் நகர்த்தணும், இவ்வளவு தூரம் நகர்த்தக் கூடாது. இதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இந்த கால அளவுகள் முக்கியம்ங்க. எப்பவுமே எனக்கு என்னுடைய ஜாதகத்திற்கு இந்த ஒரு வருடம் ஒரு மாதம் 10 நாள், இல்லை எனக்கு இந்த 405 நாள் இல்ல எனக்கு இந்த பத்து வருஷம்.
என்னோட லக்னம் மிதுன லக்னம் போகும் போது, நான் பிறப்பு லக்னம் மிதுனமாக போய், இன்னைக்கு சிம்ம லக்னமா இருக்கும்போது, இந்த சிம்ம லக்னத்திற்கு எனக்கு எப்படி பயன்படுத்துவது? செவ்வாய் நல்லா இல்ல சார். தெற்குத் திசை பயன்படுத்தக் கூடாது. தெற்கு பார்த்து உட்கார்ந்து போன் பேசினால் சண்டை தான் வரும். நீங்க உலகத்துல எத்தனை பேரு, எந்த ஊரா இருக்கட்டும். யார் வேணாலும் இருக்கட்டும். ஜாதகத்தை வைத்து வாஸ்துங்கிற ஒரு விஷயத்தை முதன் முறையாக நாம அதிகமா பேசுவது யார் என்றால், அட்சய லக்ன பத்ததி ஜோதிடம்.
கண்டிப்பா ஒவ்வொருத்தரும் இதை தெரிஞ்சுக்கணும். ஏன்னா நாம வீட்டை உடைக்காதீங்க, வீட்டை மாத்தாதீங்க. வீட்டுல அந்தப் பொருளை வாங்கி வைங்க. இந்தப் பொருளை வாங்கி வைங்க. இப்படி பண்ணுங்க. இந்தக் கலர் பயன்படுத்துங்க, இந்தக் கலர் வெள்ளை பயன்படுத்துங்க. மஞ்சள் பயன்படுத்துங்க. பச்சையை பயன்படுத்துங்க. பச்சை பயன்படுத்தவே பயன்படுத்தாதிங்க. முழுக்க முழுக்க வெளிர் மஞ்சளை பயன்படுத்துங்க நல்லா இருக்கும். கருமஞ்சளை பயன்படுத்துங்க நல்லா இருக்கும். அப்படின்னு வண்ணங்களைத் தான் நாங்கள் நிறைய பயன்படுத்த சொல்கிறோம்.
வேற என்ன சொல்றோம் ஐயா குரு நல்லா இருக்கு. உங்களுக்கு வடகிழக்கு நல்லா இருக்கு. வடகிழக்குல ஒரு பாக்ஸ் மாதிரி கருமஞ்சளை பயன்படுத்துங்க கருப்பு மஞ்சளும் சேர்ந்து, கருமஞ்சளா பயன்படுத்துங்க, சூப்பரா இருக்கும். தென்மேற்குல ராகு இருக்கு. பல வண்ண கலர். நீலம், கருப்பு, பச்சை, மஞ்சள், நீலம் எல்லாத்துலயும் ஒரு கோடு போடுங்க, சூப்பரா இருக்கும். தென்மேற்கு திசை பயன்படுத்துங்க நல்லாவே இருக்கும்.
சார் உங்களுக்கு செவ்வாய் நல்லா இருக்கு சார். ஒரு சுவத்துல தென் பக்கத்துல சிவப்பு கலர், ஒரே ஒரு மூன்று அடிக்கு மட்டும். ஒரு மூணு அடிக்கு மட்டும். அந்த ரூமின் நீளம் அகலம் நமக்கு தெரியணும். ரூமினுடைய நீளம் அகலம் தெரியணும். ஒரு மனையோட நீளம் அகலம் தெரியணும். வீட்டோட நீளம் அகலம் தெரியும். உள் கூடு என்ன, வெளிக்கூடு என்ன, நமக்கு தெரிஞ்சுதான் சொல்ல முடியும்.
நான் உதாரணத்துக்கு மூன்றடி சிவப்பு கலர்ல ஒரு பெயிண்ட் அடிங்க. அது பக்கத்துல பயன்படுத்துங்க. வடக்கு பார்க்க உட்காருங்கள். கண்டிப்பா பெரிய அளவுல மாற்றம் வரும். மிக பெரிய அளவுல யோகம் வரும் என்று நாங்க சொல்றோம். இப்ப இதுக்கு எவ்வளவு செலவு வந்துரப் போது. நாம ஜன்னலை மாத்தல. வீட்டை மாத்தல. வாஸ்து உயரமா இருக்கு, பள்ளமா இருக்கு, அப்படி எல்லாம் கிடையாது. ராகு பலமாய் இருந்து, ராகு எண்பது சதவீதம் உங்கள் ஜாதகத்தில் இருந்தால், தென்மேற்கு திசை வளர்ந்து தான் இருக்கும். தென்மேற்கு திசை உயர்ந்து தான் இருக்கும். தென்மேற்கு திசையில் ஒரு கோவில் இருக்கும். தென்மேற்கு திசையில் உயரமாகதான் இருக்கும். தென்மேற்கு திசை ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தொழில் செய்தே தீரணும், இதுதாங்க வாஸ்து. ராகு நல்லா இருந்தால் உங்களை அப்படித்தான் தூண்டும்.
அதே வடகிழக்கு நல்லா இருந்தால் எல்லாமே செய்வீங்க முழுமையா செய்ய மாட்டீங்க. எல்லாமே வாங்குவீங்க அந்த நிகழ்வுகளை கண்டிப்பா மிகப்பெரிய அளவுல ஒரு இறுக்கமும் தாக்கமும் உங்களுக்குள்ள இருக்கும். அட்சய லக்ன பத்ததி ஜோதிடமும், இந்த வாஸ்தும் மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு நாளும் உங்களுடைய வாழ்க்கையில் இந்த ஜோதிடம் என்பது பயன்படுது. எல்லாரும் பயன்படுத்துங்கள். ஏன்னா வாழ்க்கையில யாரை நம்பி, நாம யாரும் இருக்கக்கூடாது. அடிப்படையான ஜோதிடத்தை நாம் கத்துக்கிடுவோம். ஏன் அப்படின்னா நமக்கு ஒரு பைக் ஓட்ட தெரியல ஒரு கார் ஓட்ட தெரியல. ஒரு சைக்கிள் ஓட்ட தெரியல. யாராவது ஒருத்தரை அண்ணே அங்கன கொண்டு இறக்கி விடுங்கனு சொல்லுவோம். அதே, எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சதுனா, பைக் ஓட்டத் தெரிஞ்சதுனா, கார் ஓட்டத் தெரிஞ்சதுனா, நான் வந்து சைக்கிள் நகர்ந்து போய்விட முடியும். வாழ்க்கையில வந்து நாம யாரை நம்பி இருக்கணும்னு அவசியம் இல்லை.
ஏன்னா எல்லாருக்கும் பொதுவானது காலம், நேரம். இந்த காலமும், நேரமும், ஒவ்வொருத்தருக்கும் தெரிஞ்சு இருக்கணும். தெரிஞ்சி இருந்தா தான் இந்தப் பாதை, நல்ல பாதை. இந்தப் பாதை, கெட்ட பாதை. இந்தப் பாதையில வேகமா போகலாம். மெதுவா போகலாம். இந்த குறுகலான ரோடு மெதுவா போங்க. இந்த ரோடு அகலமான ரோடு. நல்லா போங்க. இந்த ஜோதிடம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் அழகா வழி காட்டக் கூடிய இடம். உங்க வாழ்க்கையில், அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் ஒரு வரமாக அமையட்டும்.
நன்றி. வணக்கம்.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology