ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
full video link: https://youtu.be/_4iobWHUIvQ?si=Ic4XytYCd--D41AM
அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பில் அட்சய இல்லத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தின் தந்தை. வாக்குயோகி. உயர்திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள், ஜோதிட ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்..
கலந்துரையாடல் நிகழ்வில், சில துளிகள்…….
வணக்கம், ஐயா.
இன்றைய மனித வாழ்க்கையில், அறிவியல் பூர்வமாக கிரகங்களை பார்க்கின்றோம். இன்னொரு பக்கம், ஆன்மீக வழியில் கிரகங்களை சனிபகவான், சூரிய பகவான், செவ்வாய் பகவான் என்று பார்க்கின்றோம். ஸ்தலங்கள், கோயில்கள், பரிகார முறைகள், மந்திரங்கள், என்று பார்க்கின்றோம்.. www.alpastrology.org
பக்தி மார்க்கம் மற்றும் அறிவியல் மார்க்கம், இதனை எப்படிப் பார்ப்பது?
ஐயாவின் பதில்:
கிரகங்கள், நட்சத்திரங்கள் பற்றிய விளக்கம் தேவைப்படுகிறது.
ஒரு சாரார் லக்னம் மட்டும் வைத்து பலன் சொல்வார்கள் .
ஒரு சாரார் லக்னமே இல்லாமல் பலன் சொல்வார்கள்.
சிலர், கிரகங்களை மட்டும் வைத்து, பலன் பார்ப்பார்கள்.
சிலர், நட்சத்திரங்களை மட்டுமே வைத்து பலன் பார்ப்பார்கள்.
மேஷ லக்னம், அஸ்வினி நட்சத்திரமா, இந்த பலன் என்று சொல்லக் கூடிய அமைப்பு உள்ளது.
மிதுன லக்னம், இப்படித் தான் பேசும்,என்று சொல்லக் கூடிய அமைப்பு உள்ளது.
புதன் நல்ல அமைப்பில் உள்ளதா, நல்லா பேசுகிறாய் என்று சொல்லக் கூடிய அமைப்பு உள்ளது.
குரு சனி இணைவு உள்ளது. எனவே தொழில் ஆகாது என்று சொல்லக் கூடிய நாடி ஜோதிட அமைப்பு உள்ளது.
இந்த அனைத்து முறைகளையும் கற்று, கடந்து வந்துள்ளேன்.
நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றன? கிரகங்கள் எப்படி இயங்குகின்றன?
நட்சத்திரங்களும், கிரகங்களும் எப்படி மனித வாழ்க்கையை ஆட்டிப் படைக்கின்றன? இந்த மூன்றும், தனித் தனியானவை. ஒன்றோடு ஒன்று எப்படி இணைகின்றது என்பதைப் பார்ப்போம். www.alpastrology.com
உதாரணமாக, ஏதோ ஒரு காரணமாக கோபம் (உணர்வு) வெளிப்பாடு வருகின்றது. கையை ஓங்குகிறேன்.
கோபம் வருகிறதால், கையை ஓங்குகின்றேன். ஆனால், கையால் அடிக்கிறேன். அடிக்கவில்லை. இந்த மூன்று நிகழ்வுகளையும் நம் வாழ்க்கையில் ஒப்பீடு செய்தால் பதில் கிடைக்கும்.
மேலும் ஒரு உதாரணமாக, ஒரு பாதை உள்ளது. பாதையின் மேல் ஒரு வாகனம் செல்கிறது. வாகனத்தை இயக்கக் கூடியவர் உள்ளார்.
பாதை ஒன்று இருக்கணும். அதற்கு மேல் ஒரு வாகனம் இருக்க வேண்டும். வாகனத்தின் மேல் ஒரு இயக்குனர் இருக்க வேண்டும்.
இப்போது பாதை என்று சொல்கிறோமே, அந்தப் பாதை என்பது, உங்களை இயக்கக் கூடிய முக்கியமான காரணியாகும்.
இந்தப் பாதை என்பது, நட்சத்திரங்கள். அந்தப் பாதையின் மேல் செல்லும் வாகனங்கள் தான் கிரகங்கள். நாம் எப்போதுமே பாதையைப் பார்க்க மாட்டோம். வாகனங்களை மட்டுமே கவனிக்கின்றோம். வாகனங்கள் தான் கிரகங்கள். அந்த வாகனங்களை இயக்குபவர் தான் பாவகங்கள். அதில் மகிழ்ச்சியாக பயணிக்கின்றீர்களா, சங்கடமாக பயணிக்கின்றீர்களா, மிகவும் மகிழ்ச்சியோடு பயணிக்கின்றீர்களா, என்பது தான் ஜாதகர் நிலை .
இப்போது பாதையில்லாமல், வாகனம் இருந்து என்ன பயன்?
பாதை இருந்து, வாகனம் இல்லாமல் இருந்தால், என்ன பயன்?
வாகனமும் இருந்து, பாதையும் இருந்து, ஜாதகர் இல்லை என்றால், பாவகம் இல்லை என்றால், என்ன பலன்? இதுதான் வாழ்க்கை. இதனை நாம் புரிந்து கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக பயணிக்க வேண்டும். இந்த மூன்றும் வாழ்க்கையில் முக்கியமானவை.
கையை ஓங்குகிறார் - அடிக்கிறார் - அடிக்கவில்லை, இது தான் வாழ்க்கை.
கோபம் என்கின்ற குணம் (உணர்ச்சிகள்), மூளையில் உள்ள செல்களில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த நட்சத்திரங்கள் போகும் போது, இந்த செல்களெல்லாம் ஒரு கூட்டமைப்பாக மாறுகிறது. இந்த செல்களெல்லாம் என்ன செய்கின்றன எனில், கோபம் என்னும் வெளிப்பாடானது எப்படி பரிணமிக்கும் என்றால், அன்று நீங்கள் இப்படி செய்தீர்கள் - அப்படி சொன்னீர்கள் என்று ஞாபகம் வைத்துக் கொள்ளும். சில நேரங்களில் மறந்து விடும். சில நேரங்களில் கோபப்படும். சில நேரங்களில் வேண்டும் என்றும், சில நேரங்களில் வேண்டாம் என்றும், உணர்வுகளை வெளிப்படுத்தும்
உணர்வுகளாக வெளிப்படுத்தும் போது, மூளை இயங்கி கட்டளையிடுகின்றது.
மூளை என்பது, ஒரு சென்சார் போல - கையை உயர்த்து என்று கைக்கு கட்டளையிடுகிறது.
பெரிய ஆச்சரியம்.
கையை உயர்த்தச் சொன்னவுடன் கை உயர்கின்றது.
அடிப்பதா - அடிக்க வேண்டாமா, எனும் போது, என் கையை நானே அடித்துக் கொள்கின்றேன் எனில் வலிக்கின்றது. அந்த வலியானது தான் பாவகம்.
ஒன்று முதல் 12 கட்டங்கள் வரை உள்ளவையே பாவகங்கள். இதுதான் வாழ்க்கை. பெயர், புகழ், ஆரோக்கியம், நல்லவை - கெட்டவை, எப்படி உள்ளது என்பதை காட்டுபவையே பாவகங்கள். மூளையும் கையும் சேர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
உடல் இயக்கங்களாக இருந்தாலும், புற இயக்கங்களாக இருந்தாலும் நட்சத்திரங்கள், கிரகங்கள், பாவகங்கள் மூன்றும் ஒருங்கிணைந்தவையே.
எல்லாமே கிரகங்களின் வேலை என எடுத்து கொள்வதோ, நட்சத்திரங்களின் வேலை என எடுத்துக் கொள்வதோ கூடாது.
முட்டையில் இருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா? எனும் கேள்வி போல, நட்சத்திரங்கள் இல்லாமல் கிரகங்களோ, கிரகங்கள் இல்லாமல் நட்சத்திரங்களோ வேலை செய்வதில்லை.
ஒரு பெண்டுலம் இயங்குவது போல, கிரகங்கள், நட்சத்திரங்கள், பாவகங்கள் மூன்றுமே ஒரு அலை வரிசையில் இயங்குகின்றது. மூன்றுக்குமே உள்ள அலைவரிசை, ஒரு நட்சத்திரத்தை கடக்கும் போது, அலைவரிசை கூடுதலாகவும், அலைவரிசை குறைந்தும் இருக்கும். இந்த நட்சத்திரங்களை தாண்டும் போது, நட்சத்திரமும், கிரகங்களும், பாவகங்களான எனக்கு நல்ல விதமாக இருப்பின் நல்ல பலனையும், மறைந்து இருப்பின் பலன் குறைவாகவும் இருக்கும்.
பாவகங்கள் ஆகிய நான், 12 கட்டங்கள் நம்மை வைத்து இயக்குகிறது.
12 ராசிக் கட்டங்கள், 12 நவாம்சக் கட்டங்கள், கிரகங்களின் சாரம், இவை மூன்றும் கவனிக்கப்பட வேண்டும்.
சூரியன் - சந்திரன் - சுக்கிரன் - செவ்வாய் - புதன் - ராகு - கேது - சனி செவ்வாய் - கிரகங்களின் தன்மைகளைப் பார்க்க வேண்டும்.
நட்சத்திரங்கள், கிரகங்கள், பாவகங்கள், இவை மூன்றைப் பற்றியும், தனித்தனியாக ஜோதிட ஆய்வுகள் வெளியாக உள்ளன.
நட்சத்திரங்களின் தன்மைகள், மனித வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய ஒரு பதிவு வெளியாக உள்ளது.
எதைப் பேச வேண்டும், எங்கு பேச வேண்டும், எங்கு சிரிக்க வேண்டும் என்று தெரிகிறது அல்லவா.
நாம் வலிமையாக இருக்கும் இடத்தில், கோபத்தை, உணர்வுகளை, வெளிக் காட்டுகிறோம்.
நாம் வலிமை இல்லாத இடத்தில், உணர்வுகளை, கோபத்தைக் காட்டுவதில்லை.
எனவே கிரகங்கள், நட்சத்திரங்கள், பாவகங்களின் தன்மையே, அனைத்தையும் தீர்மானிக்ககின்றது.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology