ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
FULL VIDEO LINK :https://youtu.be/_4iobWHUIvQ?si=wAk2Yp3SvOI5J2iQ
அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பில்,
அட்சய இல்லத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
அட்சய லக்ன பத்ததியின் தந்தை. வாக்குயோகி.உயர்திரு. Dr. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள், ஜோதிட ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கலந்துரையாடல் நிகழ்வில் சில துளிகள்…….
ஐயா, வணக்கம். நான் பானுமதி காளிதாஸ். சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து வந்துள்ளேன்.
கடவுளிடம் என்ன பிரார்த்தனை வைக்க வேண்டும்?
ஐயா அவர்களின் பதில் :நல்லது.சந்தோஷம்.
படைத்தவனுக்குத் தெரியாதா? எனக்கு என்ன வேண்டுமோ, அதை நீ கொடு என்று கேட்பேன். ஒரு சில சமயங்களில் உரிமையாகக் கேட்பேன். கடவுளிடம் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம்.
பஞ்சபூதங்களோ, நவகிரகங்களோ, தெய்வங்களோ, இறைகளோ, இஷ்ட தெய்வம், குலதெய்வம், சித்தர்கள் யாரை வேண்டுமென்றாலும், உங்களுக்கு எந்த முறையில் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், வழிபடலாம். ஆனால், அந்த நிகழ்வை உரிமையுடன் கொண்டாட வேண்டும் .
இது, இந்த நட்சத்திரம், இந்த கிரகம், இந்த ராசி, இந்த பாவகம், இந்த அமைப்பு, என்ற இதெல்லாம் தாண்டி, கடவுளிடம் உரிமையுடன் கேட்க வேண்டும். அம்மா அப்பாவிடம் எப்படி கேட்பீர்களோ, அதைப் போல், எனக்கு உரிமையுடன் கொடு, இந்த மாதிரி வாய்ப்புக் கொடு, ஒரே ஒருமுறை வாய்ப்புக் கொடு, என்று கேட்க வேண்டும். www.alpastrology.com
திருமண சமயத்தில் வேண்டும் போது, ஒரே ஒருமுறை கண் முன்னே அந்தப் பெண்ணைக் காட்டு. நான் எப்படியாவது அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன். எனக்கு ஒரே ஒரு வாய்ப்புக் கொடு என்று கேட்க வேண்டும்.
23 முதல் 25 வயதில் திருமணம் ஆனவர்கள், இன்னும் இரண்டு வருடம் போகட்டும், பிறகு லேட் ஆக குழந்தை பெற்றுக் கொள்ளலாம். பொருளாதாரம் செட்டில் ஆகட்டும். வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று குழந்தைப் பேறை தள்ளிப் போடுகின்றனர். 45 வயதிலா குழந்தை பெற முடியும்? இரண்டு வருடம் தள்ளிப் போடுகிறார்கள் எனில், 20 வருஷம் குழந்தை பேறு அமையாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
அப்பொழுது யார் மேல் தவறு?
தவறு செய்வதெல்லாம் நாம்.
கடவுளிடம் இதைப் புரிந்து கொண்டு, கேட்க வேண்டும். இதைப் புரிந்து கொண்டாலே போதுமானது. குழந்தை பெறுவதற்கு இரண்டு வருடம் வாய்ப்பு உள்ளது. அந்த இரண்டு வருடத்தை நீங்கள் தள்ளிப் போடுகிறீர்கள் எனில், எப்போது தான் குழந்தை பாக்யம் கிடைக்கும்?
அந்த வாய்ப்பை தவற விட்டீர்கள் எனில், அந்த வாய்ப்பு மறுபடியும் கிடைக்காது. 10 வருடத்திற்கு வாய்ப்புகள் கிடைக்காது. அந்த வாய்ப்பை அவர்கள் தங்கள் சுக போகத்திற்காக, சந்தோஷத்திற்காக, குழந்தை வந்தால் தூங்க முடியாது, என் வேலைக்கு போக முடியாது, என் வாழ்க்கையின் அமைதி போய் விடும், அழகு போய்விடும் என்று குழந்தைப் பேறை தள்ளிப் போடுகின்றனர். இது, பிறகு 2 வருடம், 10 வருடம், 20 வருட காலம் கழித்து குழந்தைப் பேறு அமையாமல் போகக் காரணமாகிறது.
கடவுளிடம் வேண்டுவதற்கு முன், நீங்கள் செய்ய வேண்டிய செயலை, செய்ய வேண்டிய நேரத்தில், சரியான முறையில் செய்தாலே போதுமானது. நீங்கள் கடவுளிடம் என்ன கேட்டாலும், கடவுளிடம் கிடைக்கும்.
நீங்கள் செய்ய வேண்டிய செயலை சரியான முறையில் செய்யவில்லை எனில், கடவுளிடம் சென்று காலைப் பிடித்தாலும், கழுத்தைப் பிடித்தாலும், உனக்கு வாய்ப்புத் தருகிறேன், பொறுமையாக இருங்கள், என்பதே கடவுளின் பதிலாக அமையும்.www.alpastrology.org
கடவுள் ஏன் பேச மாட்டேன் என்கிறார் என்றால், கடவுள் பேசினால் அவ்வளவுதான்.
அதனால் தான் ஜோதிடர்கள் ஆகிய நம்மைப் பேச வைத்து விட்டார். காலங்களை அறிந்தவர்கள், முக்காலத்தையும் அறிந்தவர்கள் யார் என்று கேட்டால் ஜோதிடர்கள் மட்டும்தான். வேறு யாரும் கிடையாது.
நிகழ்காலத்தில் வரும் ஒரு வாய்ப்பினை, எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
கடந்த காலத்தினை எப்படி பயன்படுத்தி இருந்தோம்?
எதிர்காலத்தை எப்படிப் பயன்படுத்த போகின்றோம்?
இந்த மூன்று நிகழ்வுகளும் ஒரு ஜோதிடரிடம் மட்டும் தான் உள்ளது.
எனவே இந்த வாழ்க்கையைக் கொடுத்த கடவுளிடம், இந்த நேரத்தில், இந்த நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பமாகும்.
தயவு செய்து எனக்கு ஒரு வாய்ப்பு, ஒரு வரம் மட்டும் கொடுங்கள் என்று கேட்க வேண்டும்.நல்ல காலம் எனில் நடக்கும், நல்ல காலம் இல்லை எனில் அது நடக்காது.
தெய்வங்கள் மேல் குற்றமே சொல்லக் கூடாது. தவறு செய்வது யார்? தவறு செய்வது நான். நான் செய்யக் கூடிய தவறுகள் மட்டுமே என்னுடைய நல்லது கெட்டதைத் தீர்மானிக்கும்.
நன்றி.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology