ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
full video link👉 https://youtu.be/ZJYXrUX_Jf0?si=KnRSLQUmmwhuIdu4
கணவன் - மனைவிக்குள் பொருளாதார நிர்வாகமும், உறவுச் சிக்கல்களும் - ALP ஜோதிட ஆய்வு.
~ திரு. சாந்தகுமார்,
ALP ஆசிரியர் மற்றும் ஜோதிடர்.
வணக்கம்.
இன்றைக்கு கணவன் மனைவி உறவுகள் இடையே அதிகமான சிக்கல்கள், பணம் நிர்வாகம் சம்பந்தப்பட்டு இருக்கிறது. கணவனுக்காக மனைவி சம்பாத்தியம் செய்கிறாரா? அல்லது மனைவிக்காக கணவன் சம்பாத்தியம் செய்கிறாரா? அல்லது குடும்பத்திற்காக இரண்டு பேரும் சம்பாத்தியம் செய்கிறார்களா? இந்தக் கேள்வியை முதலில் கேட்டுக் கொள்ளுங்கள்.
ஏனென்றால், நிறைய சூழ்நிலைகளில் என்ன நடக்கிறது என்றால், இது என் பணம், இது உன் பணம் என்ற பேச்சு இன்றைக்கு குடும்பங்களில் அதிகமாக இருப்பதைப் பார்க்கிறோம். என் கடன், உன் கடன், என் வருமானம், உன் வருமானம் என்று இல்லாமல், குடும்பத்திற்காக இரண்டு பேரும் சம்பாத்தியம் செய்கிறோம் என்கின்ற நிகழ்வுகள் தான் சரி.
பண நிர்வாகம் என்று வரும்பொழுது இரண்டு பேருமே நிர்வாகம் செய்ய வேண்டும். ரெண்டு பேருக்குமே வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் தன்மை வேண்டும். நிறைய நேரங்களில் வெளிப்படையாக இல்லாத நிலை. நம் முந்தின தலைமுறையில், ஆண் சம்பாத்தியம் செய்ய வேண்டும். அந்த சம்பாத்யத்தை வைத்து, வீட்டை பெண் நிர்வகிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்பொழுது ஆண், கடனை மனைவிக்கு காட்ட மாட்டார். மனைவி செலவுகளை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். சம்பாத்தியம் செய்யும் பொறுப்பு இல்லை என்கின்ற நிலை இருந்தது. அந்தக் காலகட்டங்களில் அதற்கான நிகழ்வுகள் வேறு இன்றைய காலகட்டங்களில் இரண்டு பேருக்கும் வருமானமும் இருக்கு. இரண்டு பேருக்கும் செலவுகளும் இருக்கு. ஆனால் சம்பாத்தியம் செய்வதற்கான நோக்கம் குடும்பத்திற்காக என்கின்ற நிகழ்வு முதலில் தெளிவாக வேண்டும். முதலில் இலக்குகளும் தெளிவுகளும் இருந்தால் தான், அடுத்தடுத்து செல்ல முடியும். www.alpastrology.org
செலவு என்பது இருவரும் தான் செய்கிறார்கள். ஒழுக்கம் என்பது இரண்டு பேருக்கும் வர வேண்டி இருக்கிறது. எவ்வளவு சம்பாத்தியம் செய்கிறோம் என்று இரண்டு பேருக்கும் தெரிய வேண்டும். கடனும் இரண்டு பேருக்கும் தெரிய வேண்டும். இது வெளிப்படையான புத்தகமாக வரவேண்டும். கணக்கு என்பது இரண்டு பேரும் சேர்ந்து எழுத வேண்டிய நிகழ்வுகள். நாம் ஏற்கனவே பேசி இருந்தோம், முதலீடு செய்வதாக இருந்தாலும் இரண்டு பேரும் பேசி தான் முடிவு செய்ய வேண்டும். எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதையும் இரண்டு பேரும் சேர்ந்து தான் முடிவு செய்ய வேண்டும்.
வேண்டுமென்றால் ஒரு பர்சனல் பட்ஜெட்டிங் கொடுக்கலாம். ஒருத்தர் ஒரு லட்ச ரூபா சம்பாத்தியம் செய்கிறார் இன்னொருவரும் ஒரு லட்ச ரூபாய் சம்பாத்தியம் செய்கிறார். இந்த இரண்டு லட்சம் சேர்த்து குடும்பத்திற்கு என்று சேர்த்தாகி விட்டது. எனக்கு பர்சனல் பட்ஜெட் பத்தாயிரம் உனக்கு பர்சனல் பட்ஜெட் 15000 என்று தனியாக பணம் எடுத்து வைத்து அதை பர்சனல் எக்ஸ்பெண்டிச்சர் என்று வைப்பது தவறு கிடையாது. ஆனால் குடும்ப செலவு என்பது ஒன்றாகத் தான் செய்ய வேண்டும். ரெண்டு பேருக்கும் தெரிந்து செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியம்.
பர்சனல் மணி என்று தனியாக வைத்துக் கொள்வது தவறு இல்லை. ஆனால், பட்ஜெட் என்பது குடும்ப பட்ஜெட் ஆகத் தான் வரவேண்டும். இந்த பர்சனல் மணியை, பர்சனல் பட்ஜெட்டிங் செய்யலாம், தவறு கிடையாது. குடும்பம் அப்படிங்கற கான்செப்ட் முதலில் புரியும். இது உறவுகளுக்கு இடையே எமோஷனல் ஸ்டெபிலிட்டி முக்கியம் என்று பேசியதை, இந்த இடத்தில் மறுபடியும் வலியுறுத்துகிறேன்.
கணவன் மனைவி இரண்டு பேரின் வருமானத்தை, ஜோதிட ரீதியாக புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
கணவருடைய வருமானம், லக்னத்திற்கு இரண்டாம் பாவகம் என்றால், மனைவி ஏழாம் பாவகத்திற்கு இந்த இரண்டாம் பாவகம், எட்டாம் பாவகம். கணவன் சம்பாத்தியம் செய்வது மனைவிக்கு சிக்கல். மனைவி சம்பாதிப்பது கணவனுக்கு சிக்கல். இப்படிப்பட்ட நிகழ்வு தான் இருக்கும். குடும்பம் என்று சொல்லும் போது, கணவன் மனைவிக்கு நடுவில் சிக்கல் இல்லை. கணவனும் மனைவியும் ஒரு பக்கம். சிக்கல் இன்னொரு பக்கம் என்று வைத்துக் கையாள வேண்டும். www.alpastrology.com
அந்த குணத்திற்கு கொண்டு வருவதற்கு தான் நாம் முதலில் சொல்கிறோம். இதில் என்ன நடக்கும் என்றால், கணவரின் வருமானம் அடிபடுகிறது. அப்போது, மனைவி பேக்கப் செய்ய வேண்டும். மனைவி வருமானம் வருது கணவன் பேக்கப் செய்ய வேண்டும் என்கின்ற நிலையே தவறு. ஏனென்றால், இது தனிப்பட்ட வருமானம், தனிப்பட்ட சேமிப்பு, தனிப்பட்ட முதலீடு என்று போவதினால் வரும் சிக்கல். ஆனால் கணவன் மனைவி உறவு என்று வரும் பொழுது, குடும்பத்திற்கு வருமானம் என்று வந்தால், இந்த பேலன்ஸ் எப்பொழுதும் சரியாகவே போகும். அப்போ எப்போ டவுன் ஆகும் அப்போ தான் சப்போர்ட் பண்றதுக்கு தான் இந்த கணவன் மனைவி உறவு. மனைவிக்கு வருமானம் குறைந்து விட்டது, இல்லை வேலையில் இல்லாத சூழ்நிலை வந்துவிட்டது என்றால், அந்த நேரத்தில் கணவர் எமோஷனலாக பேக்கப் செய்ய வேண்டிய இடத்தில் தான் இருக்கிறார். அப்போது, இரண்டு பேரும் எமோஷனலாக, ஒரு இலக்கை நோக்கி நகர வேண்டும். இரண்டு பேருக்கும் வேறு வேறு இலக்குகள் இருப்பதினால் தான் கணவன் மனைவி உறவின் இடையே சிக்கல்கள் வருகிறது.
பொருளாதாரக் காரணங்களால் பிரியக்கூடிய கணவன் மனைவிகள் இன்று அதிகம். இதனை, சரி செய்ய வேண்டுமென்றால், முதலில் குடும்ப வருமானம் என்கின்ற கான்செப்ட்டிற்குள் எல்லோரும் வருவது, மிகவும் முக்கியம்.
பணம் நண்பர்களுக்காக கொடுப்பது, இதுவும் ஏழாம் பாவகம் சம்பந்தப்பட்டதாகவே உள்ளது. ஒரு நண்பர் கடன் கேட்கிறார். நான் கொடுக்கலாமா, கொடுக்க கூடாதா? நாம் எமோஷனல் ஸ்டேபிளாக இருக்க வேண்டும் என்று பேசினோம். என்னுடைய பிளானிங் இருக்கிறது பட்ஜெட்டிங் இருக்கிறது இதில் நண்பருக்கு கொடுப்பதற்கு என்று நான் பட்ஜெட் தனியாக ஒதுக்கி வைக்க முடியணும். அந்த அளவிற்கு என் பொருளாதாரம் வலுவாக இருந்தால், நான் கொடுக்கலாம். இல்லை என்றால் கொடுக்கக் கூடாது. என்னிடம் இல்லாத பணத்தை, நான் எப்படிக் கொடுப்பேன்? கடன் வாங்கிக் கொடுப்பேன். இந்த எண்ணம் முட்டாள்தனமானது. பொருளாதாரத்தில் இது செய்யக்கூடாத நிகழ்வு. என்னிடம் இல்லை என்றால் இல்லை என்று சொல்ல வேண்டும். யாருக்கு பற்றாக்குறை இருக்கிறதோ அவர் தேட வேண்டும். இது நட்பு நான் செய்தேன் என்றால், நான் உயிரையே கொடுப்பேன். இந்த உறவு முக்கியமானது. எல்லாம் சரிதான். ஆனால் அதனுடைய பின் விளைவுகள் என்று வரும் போது, இந்த நட்பையே பகையாக மாற்றியும் வைக்கிறோம். யார் வைத்தார்? நான் தான் வைத்தேன். கொடுக்கக் கூடாத நேரத்தில், கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காததுனால், அந்த உறவை நானே வெட்டிக் கொள்கிறேன்.
என் உயிர், என் நட்பு என்றெல்லாம் பேசியது, எங்கு போனது? இந்தப் பணம் கொடுத்து, நட்பு உறவை கெடுக்கப் போகிறோமா இல்லை கொடுக்காமல் கெடுக்க போகிறோமா என்று யோசித்து பாருங்கள், நான் சொல்வது முக்கியம் என்று உங்களுக்குப் புரியும். கொடுக்கவில்லை என்றாலும், அந்த நேரத்தில் அவருக்கு சங்கடமாக கூட இருக்கலாம். ஆனால் வேற ஏதாவது ரூபத்தில் பணத்தைத் தேடிக் கொள்ளப் போகிறார். அந்த உறவு அப்படியேதான் இருக்கும்.
அப்படி அந்த உறவு இருந்தால் மட்டும்தான் உறவு. இல்லை என்றால் உண்மையிலேயே அது நல்ல உறவே கிடையாது. உங்க சூழ்நிலை புரிந்து கொள்ளாமல் உங்களிடம் இல்லாத பணத்தை கடன் வாங்கியாவது கொடு கேட்கிறார் என்றால், அங்கு வேறு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அப்போது கொடுக்கலாமா, என்றால் கொடுக்கலாம். எப்போது கொடுக்கலாம்? என்னிடம் பத்தாயிரம் ரூபாய் உள்ளது. என்னுடைய பர்சனல் எக்ஸ்பென்சஸ் பத்தாயிரம் ரூபாய் உள்ளது. என்னுடைய நண்பர் 2000 ரூபாய் கேட்கிறார் என்றால், அந்த 2000 ரூபாய் எனக்கு திருப்பி வராது என்று நம்பி கொடுக்க வேண்டும்.
ALP ASTROLOGY YOUTUBE CHANNEL👉 https://youtube.com/@alpastrology?si=taxZpKxmf6oz3HJ4
அந்த பணம் திருப்பித் தர மாட்டார் என்கின்ற பட்சத்திலும் எனக்கு பரவாயில்லை என்றால் 2000 ரூபாய் கொடுக்கலாம். நீ திருப்பிக் கொடுத்தால், அந்த நட்பு இன்னும் சந்தோஷமாக இருக்கும். திருப்பித் தரவில்லை என்றாலும், எதிர்பார்ப்பு இல்லாததனால், அந்த உறவு வலுவாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் மட்டும் தான், நீங்கள் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கொடுக்க வேண்டாம். பணத்தைக் கொடுத்து, உறவை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
பணம் கொடுப்பதினாலே, உறவு கெட்டுப் போகும் என்கின்ற நிகழ்வை புரிந்து கொள்ள வேண்டும். ஜோதிட ரீதியாக சொல்ல வேண்டும் என்றால், ஏழாம் பாவகமாக இருக்கிறது தான் லக்னம் மாறும்போது ஆறாம் பாவகமாக மாறுகிறது. நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். இன்றைக்கு 7, நாளைக்கு 6. இன்றைக்கு நட்பு, அதுதான் நாளைக்கு பகையாவும் மாறுகிறது. பகையாய் யார் மாற்றுவது என்று பார்த்தால், நாம் தான் மாற்றுகிறோம் என்பதை புரிந்து கொண்டால், ஜோதிடம் உங்களுக்கு வழி சரியாக காட்டிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
நன்றி.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology