ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
FULL VIDEO👉https://youtu.be/qVEgHs4X1yE?si=vqcKaOkUgIxUnefI
அனைவருக்கும் வணக்கம்.
என்னுடைய பெயர் சுந்தர். நான் ஒரு தனியார் வங்கியில், மேனேஜராக வேலை செய்கிறேன். ALP அஸ்ட்ரோலஜி அடிப்படை வகுப்பு சேர்வதற்கு என்னுடைய அனுபவம் என்ன, உந்துதல் என்ன, என்னுடைய அனுபவங்கள் எப்படி என்னை இந்த வகுப்பிற்கு உந்துதல் செய்தது என்று பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு வணக்கம். ஆசிரியர்களான சாந்தகுமார் சார், சத்தியநாராயணன் சார், முத்து விஜயகுமார் சார், சாந்தி தேவி அம்மா, உமா வெங்கட் அம்மா, பிரியா அம்மா, என்னுடைய கோச் வனிதா மணி அம்மா, எல்லோருக்கும் நன்றி.
என்னுடைய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய வாழ்க்கையில் மன ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும், குடும்பத்தில் பிரச்சனை இருக்காது, ஆனால் மனரீதியாக மிகவும் அழுத்தத்தில் இருந்தேன். அழுத்தம் என்றால் எக்ஸ்ட்ரீம் அழுத்தம். போய் சைக்காலஜி டாக்டரை பார்ப்பது. அங்க போய் பார்த்த உடனே உனக்கு ஒன்னும் இல்ல போயா அப்படின்னு சொல்லி அனுப்பி விடுவாங்க. சரி, நம் ஜாதகத்தை ஒரு முறை பார்ப்போம் என்று ஜாதகத்தை பார்க்கும் போது, எதுக்காக பார்க்கிறீர்கள் என்று அந்த ஜோதிடர் நம்மிடம் கேட்டார்.
அதற்கு நான் ஐயா, வேலையால் ஒரு அழுத்தம் இருந்து கொண்டிருக்கிறது அது எப்பொழுது சரியாகும் என்று கேட்டபோது, அந்த ஜோதிடர், நீங்க வேலையில் இருக்கிற வரைக்கும் இந்த மாதிரி இருக்கும். நீங்க வேலையை விட்டுட்டு வேற ஏதாவது பிசினஸ் தொடங்கலாம் அப்படிங்கிறது போல சொன்னாங்க.
அழுத்தம் ஏன் எனக்கு வந்தது? இரண்டு வருடத்திற்கு முன்பு தான் ப்ரோமோஷனுக்கு அப்ளை செய்து, முதலில் அசிஸ்டன்ட் மேனேஜராக இருந்து பிரமோஷன் வாங்கி மேனேஜராக வந்தேன். ஜோசியரை போய் பார்த்தோம்னா ஏதாவது ஒரு பலன் சொல்லுவாரு. ஏதாவது ஒன்னு போய் பண்ண சொல்வாரு அப்படின்னு பார்த்தா, வேலைய விட்டு விடு அப்படின்னு சொல்லி சொல்றாரே, என நினைத்தேன். ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கிறேன். வேலைனால தான் அழுத்தம் அப்படின்னு இருந்தது. எங்க வீட்டில் வந்து கேட்கிறேன் என்னம்மா நான் வேலையை விட்டுறவா? அதனாலதான் நெஞ்சுவலி வந்து ஏதாவது ஆயிடும் போல இருக்கு எனக்கு அதனாலதான் அழுத்தம் என்னால ஹேண்டில் பண்ண முடியல வெளியில வந்துடறேன். ஏதாவது ஒன்னு பாத்துக்கலாம். அப்படின்னு வீட்லயும் கன்வின்ஸ் பண்றேன். ஒரு இடத்துல உட்கார்றேன். என்ன நமக்கு இப்படி நடக்குது, ஏன் இப்படி நடக்குது, அப்படின்னு யோசிக்கிறேன். இப்ப நாம நல்ல சம்பளம் வாங்கிட்டு இருக்கோம். அடுத்து விட்டுட்டு வந்தா நாம என்ன செய்வோம்? வருமானம் என்ன இருக்கு அப்படிங்கிறது போல முதலில் நான் யோசித்தேன். சரி ஒரு வருடம் போகட்டும் என்ன என்பதை நாம் பார்க்கலாம் என்று இருந்தேன்.
வரிசையாக யூடியூபில் போட்டு இன்னைக்கு ராசிபலன் எப்படி இருக்கு அப்படின்னு தொடர்ச்சியா யூட்யூப்ல பாத்துக்கிட்டே இருக்கேன். யூட்யூபில் ஒரு விஷயத்தை தேடினால் உடனே அது சார்ந்த விஷயங்கள் வந்துட்டே இருக்கு. நானும் வரிசையாக அதை பார்த்துகிட்டே இருக்கேன். பாத்துகிட்டே வந்தா தினமும் நல்லா சொல்றாங்களா சரி இன்னைக்கு நல்லா இருக்கும். மகர ராசிக்கு நல்லா இருக்கு அப்படின்னா சரி மகர ராசிக்கு நல்லா இருக்கும். நான் மகர ராசி அதனால் மகர ராசி வச்சு தான் பார்ப்பேன். இப்படியே ஒரு ஒன்றரை வருடம் போனது. ஆனால் அழுத்தங்கள் குறையவில்லை.
என்னுடைய நண்பர் முரளி கிருஷ்ணன் அவருக்கு நன்றி சொல்லணும். அவர் அட்வான்ஸ் வகுப்பு முடித்து இருக்கிறார். அவர்தான் முதலில் எனக்கு ALP பற்றி அறிமுகம் செய்தார். இதைப் பாருங்கள். இதைப் படியுங்கள் என்று சொன்னார். இது என்ன ALP புதிதாக இருக்கிறதே என்று, நண்பரிடம் எனக்கு மகர ராசி போய்கிட்டு இருக்கு. நீங்க பாக்குறேன்னு சொன்னீங்க. என்ன பண்ணலாம்னு, எனக்கு ஜாதகம் பார்த்து சொல்லுங்கள் என்று சொன்னேன். அவர், இல்ல இல்ல, நான் ஜாதகம் பார்க்கல. நீங்க முதல்ல அந்த வகுப்பில் போய் படிங்க என்று சொன்னார்.
அப்பதான், வலைதளத்தில் முதலில் ALP பற்றி சர்ச் செய்து பார்த்தேன். இது என்ன புதிதாக லக்னம் வளருது, லக்னம் நகருது, அப்படின்னு சொல்றாங்களே. இது என்ன புதிதாக இருக்கிறதே என்று முதன் முதலில் உள்ள வந்தேன். வந்ததும் அடிப்படை வகுப்பு அட்டென்ட் செய்தேன். ஜாதகம் பார்க்கிறார்கள். வகுப்புகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் போய்க்கிட்டே இருக்கு. என்னைக்கு கட்டம் போட ஆரம்பிச்சாங்களோ அன்னைக்கு எனக்கு புரிதல் வந்தது.
நான் எனக்காகத் தான் உள்ள வந்தேன். என்ன இவ்வளவு மன அழுத்தமாக இருக்கிறது. என்ன இருக்கு அப்படின்னு என்னோட ஜாதகத்தை வைத்து ஆய்வு செய்ய முடிவு செய்தேன். எனக்கு முக்கியமாக தொழில் ரீதியாக வேலை ரீதியாக அழுத்தம்தான் எனக்கு அப்படின்னு என் ஜாதகத்திலே காட்டுது. அப்போ பத்து வருடத்திற்கு இந்த லக்னம் போய்கிட்டு இருக்கு. இந்த லக்னம் இப்படித்தான் இருக்கும். அப்படிங்கற விஷயத்தை புரிந்த உடனே என்னுடைய அழுத்தம் பாதியாக மாறியது. சரி அடுத்து இது தானே நடக்க போகுது, அடுத்து இதுதான நடக்கப்போகுது. பாத்துக்கலாம். அப்படியே கொண்டு போலாம். ஒன்றும் பிரச்சனை இல்லை, என்று புரிய வைத்தது.
பொதுவுடைமூர்த்தி ஐயா எப்போதும் சொல்லுவார்கள். ALP யோட தாரக மந்திரமே, உணர்வதும், உணர்த்துவதும். நம்ம ஜாதகத்தை நாம் போட்டு பார்க்கும்போது, உண்மையிலேயே கிரகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. கிரகங்கள் தான், நம்மை பார்க்கின்றன. கிரகங்கள் தான், நம்மை உந்துதல் செய்கின்றன. கிரகங்கள் தான், நம்மை செய்ய வைக்கின்றன. கிரகங்கள் தான், நம்மை இந்த வழியில் போகாதே, இந்த வழியில் இப்படி இருக்கிறது, என்று காட்டுகின்றன.
அப்போ, நாம் அதை அறிந்தால், இது இப்படி இருக்கு என்று தெரிந்து விட்டது அப்படின்னாலே, நமக்கு அந்த அழுத்தம் சுத்தமா காலி ஆகிறது. இந்த ஒரு மாதமாக காலைல நாலரை மணிக்கு எழுந்து, இந்த வகுப்பில் உட்கார்ந்துதோம்னா, சரியாக 6:45 வரைக்கும் மட்டும் தான் வகுப்பில் கவனம் செலுத்த முடிகிறது. அதற்குப் பின் வேலை ரீதியாகவும், குடும்பத்தில் அவர்களும் வேலையில் இருப்பதாலும். பிள்ளைகளை பார்க்க வேண்டும், பிள்ளைகளை ரெடி செய்ய வேண்டும், என்று காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு, வேலையும் செய்து கொண்டிருப்பேன்.
ஜாதகத்தை முதலில் ஆய்வு செய்யும் போது, நம்மை முதலில் உணர்கிறோம். இந்த வகுப்பே முதலில் நம்மை நாம் உணர வைக்கிறது. நான் உணர்ந்தேன். முன்பு எவ்வளவு எக்ஸ்ட்ரீம் அழுத்தத்தில் இருந்தேனோ, இப்பவே வீட்டிலேயே என்னை டிஃபரண்டாக பார்க்கிறார்கள். வாரத்திற்கு ஒரு முறை மாறிக்கொண்டே வருகிறாரே என்று. உண்மையிலேயே அதற்கு முழு காரணமும் ALP தான். எல்லாருக்கும் நன்றி. பொதுவுடை மூர்த்தி ஐயாவிற்கு நன்றி.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology