ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
FULL VIDEO LINK👉https://youtu.be/Y4cINmtSX3A?si=k9XEUgK-K4UDKGEa
அனைவருக்கும் வணக்கம்.
எல்லோரும் எப்படி இருக்கீங்க? நான் ரொம்ப நல்லா இருக்கேன். எல்லோரும் நல்லா இருக்கீங்கனு நம்புறேன்.
அட்சய லக்ன பத்ததி அடிப்படை ஜோதிட வகுப்பு ரீசண்டா அட்டென்ட் பண்ணி இருந்தேன். என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ் ஷேர் பண்றேன்.
இந்த வகுப்பை எனக்கு அறிமுகப்படுத்திய என்னுடைய ரேக்கி கிராண்ட் மாஸ்டர். டாக்டர். ரீனா மணிகண்டன் அவர்களுக்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய ஜோதிட முறையை உருவாக்கின டாக்டர் பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய வாழ்க்கையில், நாம் எங்கு சென்றாலும், எவ்வளவு பெரிய பெரிய கோர்சஸ் கிளாஸ் எல்லாம் போனாலும், கடைசியில் ஒரு விஷயம் நமக்கு புரியும். நம்முடைய லைஃபை நாம் தான் கிரியேட் செய்கிறோம். We are the Co-Creators. இந்த விஷயம் நமக்கு புரியும் போது நமக்கு பலவிதமான நிகழ்வுகள் நம்மளுடைய வாழ்க்கையில் நடக்கும் பொழுது, இதை நாம் தான் உருவாக்குகிறோம் என்கின்ற புரிதல் நமக்குள் பெரிய ரிலீஃப் கொடுக்கிறது. அதை நம் ஆழ் மனம், ஆன்மா சப்கான்சியஸ் மைண்ட் இப்படியாக பெயர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் ரியாலிட்டி என்னவென்றால், நாம் தான் ஒவ்வொரு நிகழ்வுகளையும், உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொருத்தர் ஆன்மா தான் முடிவு செய்கிறது. இந்த நேரம் கிரகங்கள் அனைத்தும் இந்த அமைப்பில் உள்ளது. அப்படி இருக்கிற நேரத்தில் நமக்கு ஒத்துப் போகிற கர்மவினை பதிவுகளுக்கு ஏற்றது போல, அப்பா அம்மா சூழ்நிலைகள் இது எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து, இந்த பூமிக்கு, ஒவ்வொரு ஆன்மாக்களும் முடிவு செய்து வருகிறோம். நாம் தான் உருவாக்குகிறோம் என்கிற ரியாலிட்டியோட இந்த வகுப்பு தொடங்குகிறது.
மார்னிங் செஷன் பிரம்ம முகூர்த்த நேரத்துல 4.32 மணியில் இருந்து 6.32 மணி வரைக்கும். அதற்குப்பின் கேள்வி பதில் என்று 8:30 மணி வரைக்கும் வகுப்பு தொடர்கிறது.
இந்த வகுப்புகள் அனைத்தும் நம் காதுகளை ஓபன் செய்து வைத்து, அட்டென்ஷன் உடன், கவனம் செலுத்தினால் போதும் ஆசிரியர்கள் அனைவரும் நமக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அந்த கான்செப்ட் அனைத்தையும் ரொம்ப அழகா நமக்குள்ள இறக்கிடுவாங்க.
இதில் யாருமே சொல்லாத புதிய கான்செப்ட் என்னவென்றால், லக்னம் வளரும். அட்சயம் என்பது வளரும். அதனால் லக்னம் என்பது பத்து வருடங்களுக்கு ஒரு முறை வளரும் என்கின்ற புதிய கான்செப்ட்டை பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். வயதுக்கு ஏற்ப லக்னங்கள் மாறும் அதற்கு ஏற்றார் போல நாம் பலன் எடுத்தால் துல்லியமான முறையில் பலன் சொல்ல முடியும் என்று சொல்கிறார்கள்.
என்னுடைய அனுபவத்தில், நானும் ஒரு சில அடிப்படை புரிதல்களோடு, ஜாதகங்களை பார்க்கும் பொழுது துல்லியமான பலன்களை எடுக்க முடிகிறது.
அடுத்து சாஃப்ட்வேர் பத்தி சொல்ல வேண்டும் என்றால், அதில் ALP app என்று கூகுள் பிளே ஸ்டோரில் நாம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதில் நிறைய கேட்டகிரிஸ் கொடுத்து இருப்பாங்க. பஞ்சாங்கம், ஜாதகம், மேரேஜ் மேட்சிங், ஷேர் டிரேடிங் இப்படியாக தனித்தனியாக விதவிதமான கேட்டகிரிஸ் கொடுத்திருப்பார்கள். அடிப்படையில் நாம் படித்ததை வைத்து எளிதாக இதை உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். மிகவும் எளிமையாக பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது போலத் தான், வடிவமைத்து உள்ளார்கள்.
ஆசிரியர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்த அழகான, அட்சயம் வளரும் என்ற, இந்த லக்னம் அப்படின்னு ஒரு புது கான்செப்ட்டை உருவாக்கிய டாக்டர் பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள், ஐயா மிகவும் பாசிட்டிவாக, ஆராவே மிகவும் பாசிட்டிவான ஆற்றல் இருக்கின்ற மனிதரை பார்க்கும் பொழுது, நமக்கு எந்த அளவு மகிழ்ச்சி ஏற்படுமோ, அது போல ஐயாவை பார்க்கும் பொழுது உள்ளுக்குள் இருந்து ஒரு ஆனந்தம் வெளிப்படும். அவருடைய பாசிட்டிவ் ஆரா பார்க்கிறதற்கும், அவர் பேசுகின்ற வார்த்தைகள் பார்த்தால் மிகவும் நுட்பமாகவும் குறிப்பாகவும் பேசுவார்கள். ரொம்ப செலெக்ட்டிவாகவும் இருக்கும். அந்த வார்த்தைகள் கண்டிப்பாக வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு யாருக்கும் எங்கேயும் பயன்படக்கூடிய அளவிற்கு உள்ள வார்த்தைகளாகத் தான் ஐயா பேசுவார்கள். அதிலும் கண்ணை மூடிக்கொண்டு அவர் ஒரு சில விஷயங்களை ஒரு ஃப்ளோவில் பேசுவார்கள். அது அவர் பேசுவது போல இருக்காது. அங்கு ஒரு டிவைன் ஃப்ளோ போல இருக்கும் வார்த்தைகள் எல்லாமே. பிரபஞ்சத்திலிருந்து அந்த தெய்வீக வார்த்தைகள் வந்து அந்த குரூப்பில் யாருக்கு என்ன வேண்டுமோ அன்றைக்கு என்ன தேவையோ அதை டெலிவர் செய்வது போல இருக்கும். அன்றைக்கு யாருக்கு என்ன வேண்டுமோ அது ஒரு ஃப்ளோவில் வரும்போது, நாம் அதை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
என்னுடைய கோச் புஷ்பராணி கோவிந்தராஜ் மேடம் அவர்களுக்கு, என்னுடைய தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவு தான் ஆசிரியர்கள் கான்செப்ட்சை சொல்லிக் கொடுத்திருந்தாலும், அதிலிருந்து நமக்கு நல்ல புரிதல் கிடைத்திருக்கிறதா என்பதை தினமும் ஹோம் வொர்க் அனுப்பும் பொழுது, அதற்கும் ஒரு கிளாரிஃபிகேஷன் கொடுத்து, சரி பார்த்து, அதை இன்னும் மேம்படுத்தி, நம்மளுடைய புரிதலை அதிகப்படுத்தி கொடுத்தது என்னுடைய கோச் புஷ்பராணி கோவிந்தராஜ் மேடம். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அஸ்ட்ராலஜி கோர்ஸ் படி என்று எனக்கு கை காமித்து கொடுத்த ரேக்கி கிராண்ட் மாஸ்டர் ரீனா மணிகண்டன் அவர்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் தேங்க்ஸ் அண்ட் கிராட்டிடியுட் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா ஆசிரியர்களும், சாந்தகுமார் சார், உமா வெங்கட் மேடம், சாந்தி தேவி மேடம், பிரியா மேடம், ராதாகிருஷ்ணன் சார் சத்யநாராயணன் சார், முத்து விஜயகுமார் சார், ரங்கநாதன் சார், அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வகுப்பு கண்டிப்பாக ஒரு செல்ப் டெவெலப்மென்ட் கோர்ஸ் போல, அஸ்ட்ராலஜி என்றால் வாழ்க்கைக்கு எங்கேயோ கிடையாது. வாழ்க்கை கிட்டயே தான் இருக்கிறது. நாம் எங்கே போக வேண்டும், எப்படிப் போக வேண்டும், ஒரு தொழில் தொடங்கலாமா, அல்லது வெளியில் வேறு யாரிடமாவது வேலை செய்யலாமா, இந்த நேரத்தில் நாம் செய்யும் முதலீடு சரிதானா, நாம் வேகமாக செல்லலாமா அல்லது இப்போதைக்கு நாம் மெதுவாக செல்ல வேண்டும் என்று இருக்கிறதா, இதில் மேடு இருக்கிறதா அல்லது பள்ளம் இருக்கிறதா, இப்படியாக ஒவ்வொரு விஷயங்களும் நாம் தெரிந்து கொண்டு, நம் வாழ்க்கையை நாம் நகர்த்திச் சென்றால் மிகவும் சுலபமாக நம் வாழ்க்கையை நாம் வாழ முடியும்.
அதிலும் இந்த ஜோதிடம் கற்பது ஒரு பரிகாரம் என்பதையும் சொல்கிறார்கள். இது அடையாளப் பலகை (sign board) போல நாம் செல்லும் இந்த பாதையில் பள்ளம் இருக்கிறது. அதனால் நீங்கள் ஒதுங்கிப் போவது நல்லது என்று சொல்லும் பொழுது, நாம் அந்த அடையாளத்தை (Sign) மதித்து நாம் ஒதுங்கிப் போனால், அடுத்த சரியான பாதையை நோக்கி நாம் போக முடியும். இதுபோல ஒவ்வொரு நிகழ்வுகளையும், இந்த இடத்தில் இப்படி இருக்கிறது. அதனால் கொஞ்சம் கவனமாகப் போ. கொஞ்சம் மெதுவாக போ. கொஞ்சம் வேகமாக போ. அப்படி சொல்லக் கூடிய ஒரு அற்புதமான கலை, வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். செல்ப் டெவலப்மெண்ட் கோர்ஸ் என்றும் இதை சொல்லலாம். இது ஒரு சயின்ஸும் கூட. அஸ்ட்ராலஜி கண்டிப்பாக இந்த காலகட்டத்தில் மக்கள் எல்லோருக்கும் தெரிந்து கொள்ளக்கூடிய, படிக்க வேண்டிய, அற்புதமான கோர்ஸ். எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த, எல்லா ஆசிரியர்களுக்கும் என்னுடைய ரேக்கி கிராண்ட் மாஸ்டர் ரீனா மணிகண்டன் மேடம் அவர்களுக்கும், இந்த அற்புதமான கலையை தோற்றுவித்த டாக்டர் பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும், ரொம்ப ரொம்ப நன்றி. வாழ்க வளமுடன்.
~ செல்வ சுந்தரி, அட்சய லக்ன பத்ததி - அடிப்படை வகுப்பு பயின்ற மாணவி, சென்னை.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology