திருமணத்திற்குப் பிறகு பிரிவு எதற்கு | ALP ASTROLOGY

ALP Astrology

நிகழ்வு தலைப்பு
1

முன்னுரை

 

 

திருமணத்திற்குப் பிறகு பிரிவு எதற்கு 👉 https://youtu.be/iC1DgPjKwzk?si=SKTM48_opaSAEvOA

 

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP ஜோதிட முறையில், திருமணத்திற்குப் பிறகு பிரிவு எதற்கு, என்பதைப் பற்றி பார்ப்போம். 

 

அனைவருக்கும், வணக்கம்:

 

ALP ஜோதிட முறையில் திருமண வாழ்க்கை என்பது எவ்வளவு முக்கியம் என்பதும், திருமணம் செய்தவருக்கு இருக்கும் பிராப்ளம்ஸ் அதில் என்ன ஃபேஸ் பண்றாங்க அப்படிங்கிறதும், நன்றாகத் தெரியும். அதிலும் ALP ஜோதிட  மாணவர்களுக்கு, திருமண வாழ்க்கை எப்படி அமைத்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதும் நன்றாகத்  தெரியும். 

 

சமீபத்தில் பார்த்த ஒரு  ஜாதகத்தில் இருந்து ஒரு ஆய்வு. 

 

இந்த ஜாதகருக்கு மிதுன லக்னம் புனர்பூசம் -2 ஆம் பாதம் செல்கிறது. நட்சத்திர அதிபதி குரு. ஏழாம் அதிபதியும் குரு.  குரு லக்னத்துக்கு 12-ல், ரிஷபத்தில் இருக்கிறார்.

 

 

 

ஜாதகரின் கேள்வி?

 

என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். நான் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு எம் என் சி கம்பெனிக்கு வேலை செய்து கொண்டிருக்கிறேன். நாங்கள் இருவரும் இரண்டு வருடமாக பிரிந்து இருக்கிறோம். திரும்பி போய் நான் வெளிநாட்டில் அவர் கூட வேலை பார்ப்பதற்கு, சேர்ந்து தங்கி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டார். 

 

நம் ALP ஜோதிட முறை படித்தவர்களுக்கு தெரியும். ஏழாம் அதிபதி லக்கினத்திற்கு 12 ல் இருக்கும் பொழுது, கணவன் மனைவி பிரிவு இருக்கும். இங்கு ஆட்டோமேட்டிக்கா அது நல்ல விதமாக அமைந்திருக்கிறது. இதை சந்தோசமாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

 

பிரிவு என்பது தவறு, சரி இல்லை என்று நாம்  நினைக்கிறோம். அப்படிக்  கிடையாது. ஏனென்றால், சில நேரங்களில், கணவன் மனைவி வேறு  வேறு இடத்தில் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும் போது, அது ஜாதகரீதியாக அவர்களுக்கு சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டால், அது சரியாக இருக்கும் பட்சத்தில்,  ஏற்றுக்கொண்டு, முடிகின்ற காலம் வரை அப்படியே இருப்பது தான்,  சரியான ஒரு தீர்வு. 

 

இவர்களுக்கு நாம் சொன்னது,  புனர்பூசம் -3  முடிகிற வரைக்குமே, அவர் அங்கு வெளிநாட்டில் வேலை பார்க்கட்டும். நீங்கள் இங்கேயே  இருங்கள். லீவ் கிடைக்கும்பொழுது, அங்கு சென்று வாருங்கள். ஆனால் ஒரே இடத்தில் இருப்பது, தற்சமயம்  திருமண வாழ்க்கையில் சரியாக இருக்காது என்று சொன்னோம். 

 

ஏன் சொல்கிறோம் என்றால், நிறைய பேர் நினைக்கிறார்கள் தனித்தனியாக இருக்கிறோம். இல்லை சேர்ந்திருக்கும் பொழுது பிரச்சனை வருகிறது என்று டிவோர்ஸ்க்கு அப்ளை செய்வது, குழந்தைகள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தும் டிவோர்ஸ் அப்ளை செய்வது நடக்கிறது. 

 

அதற்குக் காரணம் என்னவென்றால்,  இதுபோல காலகட்டங்களில், நாம் எப்படி பேஸ் பண்ணனும் என்று தெரியாத விஷயம் தான் அந்த அளவுக்குக் கொண்டு விடுகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் நாம் பிரிந்திருந்தால்,  இந்த ரிலேஷன்ஷிப்பை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும் எனும் பட்சத்தில், வேலைக்காகப் பிரிந்து இருப்பது என்ற முடிவு, சரியாக இருக்கும். 

 

திருமண உறவு என்று வந்தால், எந்த முடிவு எடுப்பதாக  இருந்தாலும், குழப்பமான மனநிலை இருக்கிறது,  அடுத்து என்ன செய்வது என்று தெரியாத பட்சத்தில், ஒரு ALP ஜோதிடரிடம் ஜாதகம் பார்ப்பது  அல்லது ALP ஜோதிட வகுப்பில் சேர்வதோ உங்களுக்கு ஒரு தெளிவான மனநிலையைக் கொடுக்கும். அடுத்து என்ன முடிவு எடுக்கிறது, என்பதற்கு ஒரு வழி கிடைக்கும். 

 

ஏனென்றால், திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்று சொல்வார்கள். அதை சொர்க்கமாக மாற்றிக் கொள்வதும் நரகமாக மாற்றிக் கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது என்பதற்கு ALP ஜோதிடம் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. 

 

ALP ஜோதிடம் கத்துக்கோங்க. உங்க வாழ்க்கையிலும் இனிமையான நல்ல திருமண வாழ்க்கை அமைவதற்கு நாங்கள் வாழ்த்துக்கள் சொல்கிறோம். நன்றி. 

 

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


ALP Astrology