கோபத்தைப் பற்றிய அழகான விஷயம் உங்களுக்கு தெரியுமா ? ALP ASTROLOGY

ALP Astrology

நிகழ்வு தலைப்பு
1

முன்னுரை


 கோபத்தைப் பற்றிய அழகான விஷயம் உங்களுக்குத் தெரியுமா ? - ALP Astrology 👉 https://youtu.be/Fly9g1PnTJE?si=b4LJzl86mlxTBY1K

 

வணக்கம் 🙏

நான் சாந்தகுமார் அட்சய லக்கன பத்ததி ஜோதிடர், சென்னையில் இருந்து.

கோபத்தை பற்றி பேசலாமா !!! கோபம் என்பது ரொம்ப அழகான விஷயம் .கோபத்தை பற்றி எல்லோரும் தப்பா பேசுறாங்க. நீங்க அழகான விஷயம் என்று சொல்றீங்க என்றுதானே நினைக்கிறீர்கள்?கோபம்னா என்னன்னு நாம் தெரிஞ்சுக்கணும். 

கோபத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?கோபம் ரொம்ப நல்ல விஷயமும் கூட.ஆனா எப்போ எப்படி எங்க வெளிப்படுத்தணும் ?“ரௌத்திரம் பழகு” என்று சொன்னார்,   பாரதியார் .

அவர், சும்மா சொல்லுவாரா?கோபம் என்பது ஒரு இயலாமையின் வெளிப்பாடு. 

நான் சொல்வதை எதிரில் இருக்கிறவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை எனும் போது, மற்றவர்களுக்கு உணர வைக்க முடியவில்லை எனும் போது, நான் நினைத்த மாதிரி என் எதிர்பார்ப்புகள் நடக்கவில்லை எனும் போது, எனக்கு கோபம் வருகின்றது.

உதாரணமாக, ஒரு குழந்தை உள்ளது.  குழந்தையின் தகப்பனார் ஒரு பொருளை (ஹெட்செட்) மிகவும் கஷ்டப்பட்டு, காசு இல்லாத நிலையில்,  அந்தப் பொருளை வாங்கி வருகிறார்.அன்றைக்கு அந்த குழந்தை அதனை பிய்த்து விடுகிறது. இப்போ அந்த குழந்தை மேல் அந்த கோபத்தை காண்பிக்கிறார்.

ஹெட்செட்டை  குழந்தை பிய்த்து விட்டது என்பது கோபமா? அல்லது அந்த ஹெட்செட்டை என்னால் வாங்க முடியவில்லை என்ற இயலாமை தான் கோபமா?

இதுவே ஒரு பூனை பிய்த்து விட்டது எனில் பூனையிடம் கோபத்தை காண்பிக்க முடியுமா?

அந்த குழந்தை மேல் காட்டிய அந்த வெளிப்பாடு சரியா? 

அப்போது என்னுடைய சூழ்நிலைகள் என்ன? அதை கையாளத் தெரியவில்லை என்ற இயலாமை தான் கோபமாக வெளிப்படும்.சரி, கோபத்தை சரியா பயன்படுத்தவும் செய்யணும். இயலாமையை எப்படி கையாள்வது என்பதை புரிஞ்சுக்கணும். 

கோபம் என்பது கத்தி பேசுறது அப்படிங்கிற ஒரு நிகழ்வா நிறைய   வெளிப்படுகிறது. கோபம் வரும் போது மூளை வேலை செய்யறது இல்ல.

இங்கிலீஷ்ல சொல்லும்போது “Getting Mad“அப்படின்னு சொல்லுவாங்க. Getting mad அப்படின்னா, பைத்தியமாகுதல் அப்படின்ற அர்த்தம். ஒரு தற்காலிக பைத்தியக்காரன் நிலையில்தான் உங்க மூளை சரியாக வேலை செய்யாது.

அந்த நிலையில் எதிரில் இருப்பவர்களுக்கு சத்தமா பேசினா அவருக்கு புரிஞ்சுரும் அப்படின்னு நம்புறோம்.நம்ம ரொம்ப பக்கத்துல இருக்குறவங்க கிட்ட கூட சத்தமா பேசுறதுக்கு,  கோபத்தை உறக்க குரலில் பேசுவது நமக்கு அறியாம செய்வோம்.

காரணம் நம்மளுடைய இயலாமை, கோபம் காட்டறது.தேவைப்பட்ட இடத்தில் கோபம் காட்டணும். ஆனா அந்த கோபம் உங்கள முதல்ல பாதிக்காமல் வெச்சுக்கோங்க.

கோபம் உங்களை பாதிக்காமல் இருப்பது எப்படி?நான் கோபப்பட்ட உடனே உடம்புல இருக்கின்ற நீர்த்தன்மை - வெப்பநிலை மாற்றம் - உடம்பெல்லாம் ஜில்லுனு அவர்களால் உணர முடியும். அந்த மாதிரி உடம்பு நடுங்கற அளவுக்கு கோவம் வருவதை நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள்.

கோபம் என்ன பண்ணும்? நம் உடம்பில் 70% நீர் உள்ளது. நம் கோபமானது உடலில் உள்ள நீர் தன்மையை முதலில் பாதிக்கும். இந்த பாதிப்பினுடைய உக்கிரம் என் உடம்புல இருக்கின்ற எண்ணங்கள் மூலமா வெளிப்பட்டு - நான் யார் மேல கோவப்படுகிறேனோ - அவங்க உடம்புல இருக்க தண்ணியும் பாதிக்கப்படுகிறது.இந்த  கோபமானது இருமுனை கொண்ட கூரான கத்தி மாதிரி. என்னை முதலில் டேமேஜ் பண்ணாம,  அடுத்த முனையை நான் டேமேஜ் பண்ண முடியாது. திரும்பத் திரும்ப கோபப்படுறது என் உடம்பை தான் பாதிக்கு.  நான் நிறைய பேரிடம் கோபப்பட்டு இருப்பேன். அவங்கள பாதிப்பு உருவாக்கினதை விட, என் மேல் அதிக பாதிப்பு தான் நான் முதல்ல உருவாக்குறேன். அப்படிங்கிற உணர்வு மூலம் புரிஞ்சுக்கணும்.

கோபத்தை  நான் எப்படி கையாள்வது ?கோபம் வரும்போது எதுவும் எக்ஸ்ப்ரஸ் பண்ணாதீங்க. அது ஒரு Emotional Dam,   தடுப்பணை போட்டு தடுத்து வைத்திருக்கும்.உணர்ச்சி என்பது ஒரு மழை வெள்ளம் மாதிரி - தடுப்பணை போட்டு தடுத்து வைத்திருக்கும் - அதுதான் கோபம்.இந்த கோபம் எப்பொழுதுமே டேமேஜ் மட்டுமே. ஒரு டைம் ஒடஞ்சா வெள்ளமாகி, பயிர்களை நாசம் பண்ணிடும். வீடுகளை நாசம் பண்ணிடும். நாசம் மட்டுமே பண்ணும்.

அப்படி இருக்க கோபத்தை கண்ட்ரோல் பண்ணி கொஞ்சமா தண்ணியா தொறந்து விட்டீங்கன்னா - அது பயிர் வைக்கிறதுக்கு பயன்படலாம் - கரண்ட் எடுக்கலாம் - ட்ரான்ஸ்போர்ட் பண்ணலாம் - குடிக்கத் தண்ணீராக உபயோகப்படுத்தலாம்.அந்த மாதிரி இந்த உணர்வுகளை கட்டுப்படுத்த கத்துக்கணும்.

“உணர்ச்சியற்ற ஜடமா இருங்க”, என்று சொல்லல.உணர்ச்சி உள்ள மனுஷனா இருக்கணும். கோபத்தை அழகாக வெளிப்படுத்த தெரியணும் என்பது  தான் விஷயம் .

கோபத்தை வெளிப்படுத்தணும்.  ஆனால் வெளிப்படுத்தறது -அந்த கோபம் - உங்க வார்த்தைகள்ல -அது சத்தமாகவோ - மற்ற உடல் மொழிகளாகவோ வெளிப்படுத்தாமல் - அதை நிதானத்தின் மூலமா வெளிப்படுத்தத் தெரியணும்.அப்படிங்கறதுதான் இந்த “ரௌத்திரம் பழகு” என்ற வார்த்தைக்கான அழகான அர்த்தமா சொல்றேன். அந்த கோபம் இருக்கணும். கோவம் வெளிப்படுத்தறது நிதானத்தில் இருந்து வரணும்.

நிதானம் என்பது நல்ல கையாளக் கூடிய திறனா இருக்கும் போது அந்த கோபம் கூட உங்களை முதல்ல பாதிக்காது. நீங்க சத்தமா பேச மாட்டீங்க. ஆனா வார்த்தைகள் மட்டும் தெளிவாக இருக்கும். பக்கத்தில் இருக்கும் நபருக்கு கூட உங்கள் கோபம்  தெரியும்.நீங்க பேசவே வேண்டாங்க. ஆனா,  உங்க உடல் மொழியில் - உங்க நிதானத்தில் இருந்து வெளிப்படுத்தும் போது மத்தவங்களுக்கு புரிந்து கொள்ளும் தன்மை நல்ல முறையில் இருக்கும்.

அப்போ, அங்க நிதானத்தை பழகுறது - பக்குவப்பட வேண்டும் என்பது தான் விஷயமே தவிர, கோபம் தப்பான விஷயம் இல்லை.உங்களை பக்குவப்படுத்திக்கோங்க.

உங்க வாழ்க்கை உங்கள் கையில். 

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


ALP Astrology