விதியை மதியால் வெல்ல முடியுமா? ALP ஜோதிடர். சிம்மம் ரங்க நாதன்.

ALP Astrology

நிகழ்வு தலைப்பு
1

முன்னுரை

 

விதியை மதியால் வெல்ல முடியுமா? - ALP Astrology👉 https://youtu.be/kafjFJmdPEg?si=NvIL1CI0vReELVI2

ஸ்ரீ குரூப்யோ நமஹ ......

 ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ ....... 

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி நமஹ .......  

எனது அருமை குருநாதர், பொதுவுடைமை ஐயாவை வணங்கி, ஜோதிடம் பற்றிய  புதிய தகவலை நம்ம இன்னைக்கு தெரிஞ்சுக்க போகிறோம்.மனித வாழ்வில் ஏகப்பட்ட ரகசியங்கள்.  நம்ம வாழ்க்கை பெரிய ரகசியமாகத்தான் இருக்கு. நாளைக்கு என்ன என்பது ஒரு கேள்விதான்?

மனித ஜீவன் கருவாக ஒரு இடத்தில் உருவாகிறோம். கருவாகி, உருவாகி தான் நாம் வருகிறோம். அப்படி தோன்றிய உடனேயே, நம்மளுடைய விதி பிரம்மதேவனால் உடனே நிர்ணயம் செய்யப்படுகிறது. எல்லாத்தையும் நிர்ணயம் பண்ணித்தான் நாம் இந்த பூமிக்கு வந்திருக்கோம்.  அதன்படி தான் நம்ம வாழ்க்கை எல்லாமே நடக்குது .

விதி என்பது தான் தலையெழுத்து.அந்தத் தலையெழுத்தை படிக்கத் தெரிந்தவர்கள் தான் ஜோதிடர்கள்.அப்ப என் தலையெழுத்து என் கையிலா? வேற ஒருத்தர்கையிலா? அப்படிங்கிற ஒரு கேள்வி நமக்கு வரும்.

இந்த விதியை மதியால் வென்று விடலாம் என்றெல்லாம் சொல்கின்றோம்.நம்மளுடைய தலை எழுத்தை, நாம் தெரிந்து கொள்ள உதவியாக இருப்பது  இந்த ஜோதிட சாஸ்திரம்.விதியை வெல்ல முடியாமல் போய், ஒரு சில சமயங்களில், மதியும் மௌனம் காத்து விடும்.விதியை வெல்ல முடியாமல் போகிறபோது, மதியும் மௌனம் காத்து அமைதியாக இருக்கும்.

மௌனத்தை கலைப்பது எது ?விதியும் செயல்படவில்லை. மதியும் செயல்படவில்லை. அப்பொழுது, என்னுடைய வயது ஓட்டத்திற்கு தேவையான பதில்கள் கிடைக்குமா?இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது எப்படி ?ஜோதிடத்தை கற்றுக் கொள்வதே,  முழுமையான ஒரு பரிகாரம்.உங்கள் வாழ்வில் எங்கு தவறு ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது, எனநீங்களே தெரிந்து, உங்களை தன் நிலை உணர்ந்து சரி செய்து கொள்வதற்கு உதவுவதுதான் ஜோதிடம். 

 

 

ஒரு சிறந்த ஜோதிடராக இருக்கிறவரோட பணி என்ன ?சிறந்த ஜோதிடர், உங்களுக்கு சரியான வழிகாட்டியாக இருப்பார்.வழிகாட்டுதல் இருந்தாலுமே, அந்த வழிகாட்டலை நீங்கள் பின்பற்றுவது, உங்கள் கையில் தான் உள்ளது.அதன் பிறகு, உங்கள் வழியில் சரியான முறையில் செல்வது, உங்கள் கையில் தான் உள்ளது. ஜோதிடர்கள், உங்களை பின்தொடர்ந்து கண்காணிக்க முடியாது.உங்கள் வாழ்க்கையின் முடிவெடுக்கக் கூடிய இடத்தில் இருக்கக் கூடியவங்க நீங்கதான்.உங்களுடைய தலைவிதி எப்படி உள்ளது என்பதை  நீங்களே கற்றுக்கொண்டு, நீங்களே உங்களுடைய வாழ்க்கையை செவ்வனே நல்ல முறையில் நடத்திட,  ஜோதிடம் கற்று கொள்ளலாம்

அட்சய  லக்ன பத்ததி ஜோதிடம்:உங்களுக்கு மாதம் தோறும், ஒவ்வொரு மாதமும் அடிப்படை ஜோதிட வகுப்புகள்  இருக்கும். நீங்கள் இன்று உங்களுடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ள அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தை கற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.உங்கள் விதியை, உங்கள் மதியால் தான் வெல்ல முடியும்.

நன்றி வணக்கம்.

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


ALP Astrology