ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிடம், என்றால், என்ன?
ALP ASTROLOGY VIDEOS: https://youtu.be/Bd4avsc1YG4?si=nVlLenj_8AX2cgX0
வணக்கம், மூர்த்தி ஐயா. ஸ்வஸ்திக் டிவிக்கு ஜோதிட விளக்கம் கொடுப்பதற்கு நன்றி. உங்களைப் பற்றியும் உங்களுடைய ஜோதிட முறையை பற்றியும் ஒரு சிறு அறிமுகத்துடன் நம்ம நேயர்களுக்கு சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ALP ஜோதிட கண்டுபிடிப்பாளர். Dr. பொதுவுடைமூர்த்தி, ஐயா
ஸ்வஸ்திக் டிவி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி அட்சய லக்கன பத்ததி ஜோதிட ஆராய்ச்சியாளர். இன்னைக்கு நாம என்ன பாக்க போறோம்னா, இது நாள் வரைக்கும், ஒரு குழந்தை பிறந்த போது எழுதக்கூடிய ஜாதகத்தில், மிக முக்கியமானது லக்னம். இந்த லக்னம் வந்து ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் மாறும், அப்படிங்கிறது தான் என்னுடைய ஆய்வு. இது தான் நான் வந்து ஆய்வு நூலா வெளியிட்டு இருக்கேன்.
இந்த அட்சய லக்ன பத்ததி என்னவென்றால், அட்சயம் என்றால் வளருதல், லக்னம் என்றால் தோற்றம், பத்ததி என்றால் வரிசைப்படுத்துதல். நம்மளுடைய உடல் வளரக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, லக்னம் என்பது என்ன அப்படின்னா, ஜாதகர் இந்த உலகத்துல என்னவா பிறக்கிறார். ஜாதகர் இந்த உலகத்துல என்னவா வந்து நிர்ணயிக்கப் போகிறார். இந்த உலகத்துல நான் வந்து எதுக்காக பொறந்திருக்கேன், அப்படிங்கிறது தான் லக்னம். அது எப்படி என்கிற சூழ்நிலைக்கு தான் இந்த அட்சய லக்னம். இந்த அட்சய லக்ன பத்ததிங்கிற ஒரு விஷயமே நம்மளுடைய உடல் தோற்றங்களை வரிசைப்படுத்தி, இந்த உலகத்துல, இந்த கால கட்டத்துல, இந்த நிகழ்வுகள் மூலமாக, யோகத்தையும் அவயோகத்தையும் பெற வேண்டும் என்பது தான் விதி.
அது மூன்று விதமான கர்மா. இது எல்லாருக்குமே தெரியும். இதைத்தான் நான் என்ன சொல்றேன், இந்த கர்ம பதிவை தான் நான் என்ன சொல்றேன், உலகத்துல ஒரே நேரத்துல ஒரு குழந்தை பிறக்குது. அதே நேரத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கும், ஒரே மாதிரியான பலன் இல்லை. ஏன் அப்படின்னா, அந்த கர்மா பதிவுகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உடல் தோற்றத்தில் இருக்கக்கூடிய கர்மா வேற. மனத் தோற்றத்தில் இருக்கக்கூடிய கர்மா வேற.
இதைத்தான், அப்பா வழி கர்மா, அம்மா வழி கர்மா, ஜாதகரோட சுய கர்மா, எனும் மூன்று விதமான கர்மாவாக சொல்கிறேன். இந்த மூன்று விதமான கர்மாக்களை கொண்டு தான், நாம இந்த அட்சய லக்ன பத்ததி அப்படிங்கற ஒரு விஷயத்தை எடுக்கிறோம்.
நம்ம 12 ராசிக் கட்டங்கள் உங்களுக்கு தெரியும். 12 ராசிக் கட்டங்கள், நம்மளுடைய விம்சோத்ரி தசா வரிசைகள் அல்லது மனிதனுடைய ஆயுட்காலம் அப்படிங்கறது 120. இதையே நாங்க சொல்லிடுறோம் அப்படின்னா அடுத்ததா வரக்கூடிய ஒவ்வொரு பதிவுகளுக்கும் நாம எப்படி பலன் பாக்க போறோம், அப்படிங்கறத பத்தி தான் நாம பேச போறோம் அதுக்கு முன்னோட்டமா வந்து, இந்த 12 ராசி கட்டங்களுக்கும் அந்த 120 அப்படின்னு பாத்திங்கன்னா, ஒரு ராசி கட்டத்துக்கு ஒரு லக்ன பாவகத்துக்கு பத்து வருடம். நான் இதுதான் ஆய்வு பண்ணி இருக்கேன். மூர்த்தியோட ஆய்வு அப்படிங்கிற விஷயங்கள் வந்து இன்னைக்கு பரவலா பேசப்பட்டாலும், கண்டிப்பா வந்து ஒவ்வொரு ராசி கட்டத்துக்கும் பத்து வருஷம். 12 ராசி கட்டங்களுக்கு 120 வருஷம். அப்போ 12 ராசி கட்டங்களுக்கு, மொத்தமா அளவு எவ்வளவுன்னா 360. இந்த 360 டிவைடட் பை எவ்வளவுன்னு பார்த்திங்கன்னா அந்த ஒவ்வொரு ராசி கட்டத்திற்கும் 30 டிகிரி. இந்த முப்பது டிகிரியை நாம வந்து பத்து வருடங்களா பிரிக்கும்போது, ஒன்பது நட்சத்திர பாதங்கள் இருக்கும். ஒரு நட்சத்திர பாதம் ஒரு வருடம் ஒரு மாதம் 10 நாட்கள். இந்த உடல் நகர்ந்து அந்த நட்சத்திர பாதத்தைக் கடக்கும். அதே மாதிரி ஒவ்வொரு வயதுக்கும் 3 டிகிரி நகரும். இதுதான் வேற ஒண்ணுமே சொல்லல. 360-ஐ வகுத்தால்,/120 மூன்று டிகிரி - மூணு பாகை. ஒரு ஜாதகர் ஒரு லக்னத்தில் இருந்து பிறந்து, அவருடைய ஆயுள் காலம் முடியும் வரை. இந்த லக்னம்கிறது என்னன்னா, மூர்த்தி பொதுவுடை மூர்த்தி அப்படிங்கறவரு என்னன்னா இந்த காலகட்டத்துல இவர் என்ன அனுபவிக்கப் போறார் அப்படிங்கறத சொல்றதுதான் இந்த ஜாதகத்துல லக்னம். ஆனா இந்த அட்சய லக்னங்கிறது என்னன்னா, இந்தெந்த கால கட்டங்களில், இவர் இன்னென்ன வகையில இவர் யோகத்தை பெறணும். இன்னென்ன வகையில, இவர் அவயோகத்தை பெறணும். இந்த நல்லது செஞ்சதுக்காக, இந்த யோகங்கள் எப்படி மாறுது அப்படிங்கிறது தான் அட்சய லக்னம். லக்னம் மாறும்போது ஆதிபத்தியம் மாறும். ஆதிபத்தியம் மாறும் போது கிரகங்களோட நிலைகள் மாறும். கிரகங்கள் நிலை மாறும் போது, இந்த ஜாதகருடைய பலன் மாறும், அப்படிங்கறது தான் அட்சய லக்ன பத்ததி அப்படிங்கிற ஜோதிட முறை.
அத பத்தி தான் நான் உங்களோட பேச வந்து இருக்கிறேன். நிறைய பேர் கேட்பாங்க என்கிட்ட, சார் உண்மையிலேயே இந்த லக்னம் நகருமா? லக்னம் நகர்வது எப்படி ஒரு குழந்தை பிறந்த மாதிரி இன்னைக்கு இருக்கா? அதுதான் கான்செப்ட். வேற ஒன்னும் இல்ல. எனக்கு தோன்றுகின்ற விஷயம் என்னன்னா, பிறக்கும்போது ஒரு குழந்தையோட அளவு பாத்திங்கன்னா நாலு கிலோ - மூணு கிலோ - ரெண்டே கால் கிலோ - 2 1/2 kg இருக்கும். அதே குழந்தை, இன்னைக்கு 60 வயசுல அதே 2 1/2 kg இருக்கா? உடல் எப்படி வளருது, அதே மாதிரி இந்த லக்னம் வளரும்போது, அதாவது அந்த சூழ்நிலைகளுக்கு தகுந்த மாதிரி நகரும்போது, அதோட உடலோட தன்மைகள், 20 வயசுல ஒரு ஜாதகருக்கு நோய்வாய் படல. அதே 60 வயசு வரும்போது, அந்த ஜாதகர் நோய்வாய் படுகிறார். ஏன்னா, அவரோட உடல் முதிர்ச்சி. அப்போ ஜாதகத்துல, இந்த காலகட்டத்துல, இந்த நட்சத்திரப் புள்ளி போகும் போது, இவர் உடல் முதிர்ச்சி வரணும், அந்த முதிர்ச்சியில இவர் என்ன செஞ்சிருக்காரு, அது நல்லதா கெட்டதா அப்படிங்கறத சொல்றது தான் அட்சய லக்ன பத்ததி.
ஐயா, அட்சய லக்னத்தை பற்றி விளக்கம் கொடுத்தீர்கள். ஜோதிடம் தெரியாத பல நேயர்கள், கற்றுக்கொண்டு இருப்பவர்கள், அவர்கள் புரிந்து கொள்ளும்படி, இந்த அட்சய லக்னத்தை அவர்கள் ஜாதகத்தில் எவ்வாறு கணிப்பது என்பதை விளக்கவும்.
ALP ஜோதிட கண்டுபிடிப்பாளர். Dr. பொதுவுடைமூர்த்தி, ஐயா
நம்மளோட காலகட்டத்துல, இப்போ வந்து மேஷ லக்னத்தை எடுத்துக்கொள்வோம். மேஷ லக்னத்தில் அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாதத்தில் ஒரு குழந்தை பிறக்கும்னா, அஸ்வினி ஒன்னாம் பாதத்தில் குழந்தை பிறக்குதுன்னா, அந்த பத்து வருடம் இருக்குது பாருங்க, அஸ்வினி ஒன்னுல இருந்து கார்த்திகை ஒன்னு வரைக்கும் 9 நட்சத்திரப் பாதங்களை, பத்து வருஷம் இயக்கும்.
இல்ல சார், இப்ப வந்து கார்த்திகை நட்சத்திரம் ஒன்னாம் பாதத்தில், ஒரு குழந்தை பிறந்திருக்குனா, இந்த காலகட்டத்தில் அதாவது கடைசியா ஒரு வருஷம் ஒரு மாதம் பத்து நாள் மட்டும்தான் அங்கு இருக்கும். மீதி எல்லாமே என்ன பண்ணிடும், அடுத்து ரிஷபத்துக்கு வந்துரும். அப்போ ஒரு வருடம் ஒரு மாதம் பத்து நாள் அப்படிங்கிறது, ஒரு நட்சத்திர புள்ளி. இப்ப வந்து உதாரணமா மேஷ லக்னம் அஸ்வினி நட்சத்திரம் ஒன்னாம் பாதம் குழந்தை பிறக்குது. ஒருத்தருக்கு 41 வயசு. சார், என்னுடைய அட்சய லக்னத்தை கண்டுபிடிக்கணும் சாப்ட்வேர் இல்லாம, அப்படின்னா, ஒன்னும் இல்ல முன்னாடியே என்ன சொல்லி இருக்கேன், ஒரு வயசுக்கு எத்தனை டிகிரி மூன்று டிகிரி. அப்போ 41 வயசு. 40 வயசுக்கு 40 * 3 = 120 + 3 டிகிரியா அப்போ 123 டிகிரி. 000 ஒரு ஒரு டிகிரியில வச்சிருக்காங்க அப்படின்னா இப்போ அப்படியே 123 கூட்டிக்கிட வேண்டியதுதான். ஒன்னுல இருந்து 123 கூட்டிகிட்டுடா எங்க வரும்? கரெக்டா எங்க வரும் மேஷத்துல 30 டிகிரி ரிஷபத்தில் ஒரு 30 டிகிரி மிதுனத்தில் ஒரு 30 டிகிரி கடகத்துல ஒரு 30 டிகிரி அப்போ 120 டிகிரி முடிஞ்சு போச்சு. 120 டிகிரி முடிஞ்சா, அப்போ இதுல எவ்வளவு இருக்குன்னா 123 சொன்னனா, 41 வயசுக்கு 123 டிகிரி நகர்ந்து விட்டது. ஆட்டோமேட்டிக்கா எங்க வந்து இருக்கேன் இப்போ, சிம்மத்துக்கு வந்து இருக்கேன். அப்போ 3 டிகிரி அப்படிங்கிறது எங்க வரும்னா, அஸ்வினில ஆரம்பிச்சது எங்க வந்து நிக்குது அப்படின்னா, மக நட்சத்திரத்தில் வந்து நிக்குது. மக நட்சத்திரம் இன்னைக்கு அட்சய லக்ன புள்ளி. அட்சய லக்னம் சிம்ம லக்கனம். நட்சத்திர புள்ளிங்கிறது மக நட்சத்திரத்தில இயங்குது, அப்படிங்கறது தான் கண்டுபிடிக்கணும். நம்மளுடைய வயது * 3 டிகிரியை பெருக்கிக்கிட்டோம்னா, நிக்கக்கூடிய நட்சத்திரத்தில் இருந்து நிற்கக்கூடிய பாகையில் இருந்து, நாம எடுத்துக்கணும்.
முன்னாடி முடிஞ்சது, நாம விட்டுறனும். உதாரணமா வந்து மேஷ லக்னம் ஒரு 15 டிகிரியில வந்து லக்கனம் இருந்தது அப்படின்னா, 15 டிகிரி முடிஞ்சு போச்சு எங்க முடிஞ்சு போச்சுன்னா, போன ஜென்மத்திலே, இந்த உடல் அழிஞ்சு போச்சு. இந்த ஜென்மத்துல இந்த உடல் எதுக்காக இந்த இடத்தில் பிறக்கணும். எல்லாரும் மேஷத்துல இருந்து ஒன்னுல இருந்து ஆரம்பிக்கலாமே. ஆரம்பிக்க மாட்டாங்க. கடவுளுடைய அமைப்பு என்ன அப்படின்னா, எங்க இருந்து விட்டியோ அங்க இருந்து தொடரு. எங்க இருந்து விட்டியோ அங்க இருந்து நீங்க தொடரனும்கிறது தான் விதி. ஒருத்தர் நல்ல லக்னத்தில் பிறக்கணும். ஒருத்தர் வந்து அசுப லக்னத்தில் பொறக்கணும். இந்த லக்னத்தில், இந்த காலகட்டங்களில், இவரோட பாவப் புண்ணியங்களுக்கு, இந்த கணக்கு. இவரோட பாவப் புண்ணியங்களுக்கு இவரோட கணக்கு அப்படிங்கிறது, அந்த லக்னம் இருக்கு பாருங்க அந்த லக்னம் தான். இந்த லக்னம் பிறக்கும்போது அம்மா, அப்பா, குடும்பம், படிப்பு எல்லாமே தீர்மானிக்கப்படுகிறது. தீர்மானிக்கப்படும் போது அவருடைய சூழ்நிலைகள், அவருடைய ஒவ்வொரு காலகட்டத்துக்கும் கண்டிப்பா வந்து, இந்த காலகட்டத்துக்கும் இதுதான் நீ அனுபவிக்க போற, அப்படிங்கிறதுதான் அட்சய லக்னம். ஒவ்வொரு வயதுக்கும் மூன்று டிகிரியாக பெருக்கிட்டோம்னாலே உங்களோட அட்சய லக்னம் கண்டுபிடித்துவிடலாம்.
தனுசு லக்கனம், இப்ப வந்து மூல நட்சத்திரம் ஒன்னாம் பாதத்தில் இருந்ததுனா, 60 வயசு ஆகுது. அதாவது 60 *3 = 180 டிகிரி. இப்போ தனுசுல ஒரு 30 டிகிரி, மகரத்தில் ஒரு 30 டிகிரி, அடுத்து கும்பத்துல ஒரு 30 டிகிரி, அடுத்தது மீனத்தில் ஒரு 30 டிகிரி,அடுத்து மேஷத்துல ஒரு 30 டிகுரி, அடுத்து ரிஷபத்தில் ஒரு 30 டிகிரி. இப்போ, 6 * 30 டிகிரி = 180 டிகிரி முடிஞ்சு போச்சா. அடுத்தது இப்போ எங்க லக்னப் புள்ளி இயங்கும் அப்படின்னா நேரா மிதுனத்தில் வந்து இயங்கும். 61 வது வயசு எங்க வந்து இயங்கும். கரெக்டா எங்க வரும், நேரா மிதுன லக்னம். மிதுன லக்னத்திற்கு நீங்க தசா புத்தி எடுத்திங்கன்னா, நான் என்ன சொல்றேன், மிதுன லக்னத்திற்கு சுக்கிர திசை அப்படின்னா 5 க்கும் 12க்கும் உடையவர் தசா அவ்வளவுதான். ஆனால், இந்த சுக்கிரன் எங்க இருந்து இயக்குது, நட்சத்திரங்கள் எங்கிருந்து இயக்குது அப்படிங்கறதுதான் அடுத்தடுத்த வீடியோல நம்ம பாக்க போறோம்.
கண்டிப்பா உங்களுடைய லக்னம் உங்களுடைய ராசியை இங்க பதிவு பண்ணுங்க. உங்களுடைய பிறந்த டிகிரியில் இருந்து, இதுக்கு முன்னாடி எந்த டிகிரி இருக்கோ மீதமுள்ள டிகிரிய நாம எடுத்துக்கணும். ரொம்ப கவனமா எடுத்து நீங்க ஆய்வு பண்ணிங்கன்னா, கண்டிப்பா உங்களுடைய அட்சய லக்னம் எதுன்னு தெரியும்.
இந்த அட்சய லக்னம் தசா புத்தி பார்த்திங்கன்னா, உங்க வாழ்க்கையில என்னென்ன நடக்கப் போகுது, எப்படி நடக்கப் போகுது அப்படிங்கிறது கண்டிப்பா கண்டுபிடிக்க முடியும். எப்ப இடம் வாங்னிங்க, எப்ப வீடு கட்னிங்க, எப்ப வெளிநாடு போனிங்க, எப்ப குழந்தை பிறந்துச்சு, நீங்க இந்த காலகட்டத்தில் என்னவா இருக்கீங்க, நீங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க. இன்னைக்கு காலத்துல அடுத்தடுத்த நிகழ்வுகளில் வந்து, ஒரு நாள் நடக்கக்கூடிய நிகழ்வுகள் எப்படி நடந்து இருக்கும்? அப்படிங்கிற வீடியோ கண்டிப்பா அடுத்தடுத்த வீடியோ பதிவு பண்றேன். அதே மாதிரி ஒவ்வொரு காரகத் தன்மைகளுக்கும், கண்டிப்பா வந்து இந்த காலகட்டத்தில், இவர் வீடு வாங்குவாரு, இந்த காலகட்டத்துல இவர் வீட்ல பிரச்சினை வரும். இந்த காலகட்டத்துல இவருக்கு கடன் சார்ந்த பிரச்சினைகள் வரும், என நிறைய விஷயங்கள் பாக்க போறோம்.
கண்டிப்பா வந்து இந்த அட்சய லக்னத்தை, உங்களுடைய அட்சய லக்னம் என்ன அப்படிங்கிறத பதிவு பண்ணுங்க. இதுக்கு வந்து நாம என்ன பண்றோம்னா ALP Astrology அப்படீன்னு, Google Play Store-ல, நம்ம ஃப்ரீ சாஃப்ட்வேர் இருக்கு. உங்களுக்கு வேணும் அப்படின்னா, அதை டவுன்லோட் பண்ணி, உங்களுடைய அட்சய லக்கனம் எதுன்னு பாத்துக்கலாம். கண்டிப்பா அது உங்களுக்கு பயன்படும் அப்படின்னு நினைக்கிறேன். கண்டிப்பா வந்து உங்களுடைய கேள்விகளை, இந்த ப்ளாகோட பின்பகுதியில, பின்னூட்ட பதிவுகள்ல, நிறைய கேள்விகளை கண்டிப்பா கேளுங்க. அதுக்கான பதில நான் தரேன்.
அதாவது ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொரு காலகட்டத்தில புரியும். ஒரு காலகட்டத்தில் வந்து பூமி உலகத்தில் உருண்டைன்னு சொன்னப்போ, நாம நம்பல. அதே மாதிரி இந்த லக்னம் நகருங்க போது யாரும் நம்பல. இதுவே 15 வருஷம் கழிச்சு நீங்க பார்த்திங்க அப்படின்னா, இந்த அட்சய லக்ன பத்ததி அப்படிங்கிற ஒரு முறை, இன்னைக்கு உலக அளவில் எடுத்துட்டு போறாங்க. கண்டிப்பா வந்து உங்களுடைய கேள்விகளை, இந்த அட்சய லக்ன பத்ததி இன்னும் மெருகேற்றம் செய்யும்.
நன்றி. வணக்கம்.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology