குழந்தை வரம் தரும் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில்,வெட்டுவானம்

ALP Astrology

நிகழ்வு தலைப்பு
1

முன்னுரை

      

 

                                    குழந்தை வரம் தரும் எல்லையம்மன்👇

                                      https://youtu.be/x1fj-z5Kkl0?si=0JcR3I1ZKWMWS-8k

தனம் தரும், கல்வி தரும்,ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும், தெய்வ வடிவம்  தரும்,  நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும், நல்லனவெல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே கணம் தரும், பூங்குழலால் அபிராமி கடைக் கண்களே. வெட்டுவானும் எல்லையம்மன் கடைக்கண்களே! எல்லாம் வல்ல எல்லையம்மன் அனுக்கிரகத்திலே வேலூர் மாவட்டம்,  அணைக்கட்டு தாலுகா,  வெட்டுவானம் எல்லையம்மன் என்கின்ற பெயருடன் அருளாட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

தல வரலாறு:

சீதலேத்துவம் ஜகன்மாதா சீதலேத்துவம் ஜகன் பிதா சீதவேத்துபம் ஜகத்தாத்ரி சீதலாயை நமோ நமஹ.அம்பிகையினுடைய விசேஷம்:  ஒரு ராஜா ராணி. இவர்களுக்கு புத்ர சந்தானம் என்று சொல்லக் கூடிய குழந்தை பாக்கியம் இல்லா காரணத்தினால் மிகவும் மனதால் வருந்தி - தெய்வத்தை பிராத்தனை செய்து கொண்டு - எங்களுடைய குடும்பத்திற்கு வாரிசாகவும் - இந்த நாட்டையும் அரசாளக் கூடிய அளவிற்கு - ஒரு குழந்தை பாக்கியத்தை கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.அப்பொழுது அவர்களுக்கு கனவில் தோன்றி, ஒரு இடத்தை  காண்பித்து, அந்த இடத்தை தோண்டி எடுக்கும் பொழுது அதிலிருந்து சுயம்புவாக அம்பாள் ஆனவள், ஒரு குழந்தை ரூபமாக வருகிறாள்.அந்த குழந்தைக்கு,  இந்த ராஜா ராணி ரேணுகா என்கின்ற பெயரோடு அந்தக்  குழந்தையை வளர்க்கிறார்கள். அந்த குழந்தையானது நல்ல முறையிலே வளர்ந்து - அந்த குழந்தைக்கு தேவையான ஒரு அரசை ஆளக்கூடிய ஆளுமை திறமையை இருக்க வேண்டி - அவர்களுக்கு வில்வித்தை, பலவிதமான வித்தைகள் எல்லாம் தேர்ச்சி பெற்று - நல்ல ஒரு வீராங்கனை என்கின்ற அளவிலே அவர்கள் இருக்கின்றார்கள் .அப்பொழுது அவர்களுக்கு, திருமண வயது வரும் பொழுது ராஜாவும் ராணியும் ரேணுகா என்கின்ற தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள்.ரேணுகா என்கின்ற அவருடைய மகளானவள் எனக்கு திருமணம் செய்து கொள்ளக் கூடியவர்கள் என்னைவிட அதிகமான ஆளுமையாக இருக்க வேண்டும். வீரத்தில் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சரி அப்படியே ஆகட்டும் என்று அவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து சுயம்வர திருமணம் என்கின்ற திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்கிறார்கள். அரசர்களிலே யாருமே அந்த ரேணுகாவை வெற்றி கொள்ள முடியவில்லை. உடனே என்ன செய்வது தன்னைவிட வெற்றி பெறுபவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக திக்விஜயமானது செய்கிறார்கள்.செய்யும் பொழுது ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அந்த நாட்டிலே இருக்கக்கூடிய அரசர்களால் - ரேணுகாவை வெற்றி கொள்ள முடியவில்லை என்கின்ற அளவிற்கு இருக்கும் பொழுது - ஒரு நாள் படமேடு என்கின்ற இடத்தில் - ஒரு ஆசிரமம் என்று சொல்லக்கூடிய அளவிலே - ஜமதக்னி ரிஷி என்கின்ற ரிஷியானவர் - அந்த இடத்திலே அமைதியான ஒரு சூழ்நிலையிலும் இயற்கையாக இருக்கக்கூடிய இடத்தில் தவமானது செய்து கொண்டிருக்கின்றார் .

மலை அடிவாரத்திலே அவர்கள் அந்த தவத்தையும் ஜபமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.அப்படியாக இருக்கும் பொழுது - அந்த வழியாக வருகின்ற ரேணுகா - நீண்ட நேரமாக காலம் கடந்த காலத்தினால் - அந்த இடத்தில் இரவு தங்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. அப்பொழுது  யானைப்படை, குதிரைப் படை சத்தத்தால் - அந்தத்  தவம் கலைகின்றது. கோபம் அதிகமாகி சபித்து விடுகிறார். அப்பொழுது பார்த்தவுடன் ரேணுகா அவர்களுக்கு நம்மை  மீறி ஒரு பெரிய ஒரு சக்தி இவர்கிட்ட இருக்கு. அதாவது இவரைத்தான்  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் கேட்க - மானசீக முறையிலே திருமணம் நடக்கின்றது.

திருமணம் நடந்து முடிந்தவுடன் மானசீக  முறை என்றால், அந்த ஜமதக்னி  ரிஷி எப்படி இருக்கின்றாரோ - அந்த ரிஷி தத்துவத்திற்கு மாறுகிறார்கள். ஒரு தவ வலிமையோடு - அந்த காவி உடை அணிந்து - அந்த சுவாமிகளுக்காகவே - தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள்.அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கின்றது. ஐந்தாவது குழந்தை பரசுராமன் என்கின்ற குழந்தையாக இருக்கிறார்.தினசரி நித்யபடி பூஜைக்காக மணலால் குடம் செய்து - அந்த பூரணி ஆறு என்கின்ற ஆறிலிருந்து - ஜலத்தை கொண்டு வந்து - சிவ பூஜை கொடுப்பது வழக்கம். அங்கே இருக்கக்கூடிய புஷ்பங்களும் அந்த தீர்த்தம் என்று சொல்லக்கூடிய ஜலத்தையும் கொண்டு வந்து - அந்த ஜமதக்னி முனிவருடைய சிவ பூஜைக்கு கொடுப்பது வழக்கம். அப்படியாக ஒவ்வொரு நாளும் கொடுக்கும் பொழுது - அந்த மணல் குடம் செய்யும் பொழுது - மேலே கந்தர்வன் செல்கின்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மன சஞ்சலம் ஏற்படுகிறது. அவருடைய வாழ்க்கையில் ராஜகுமாரி எல்லாவிதமான சுகபோகங்களோடு இருக்கக்கூடியவர்கள்,  இந்தத் தன்மையைப்  பார்க்கையில், ஒரு மன சஞ்சலம் ஏற்படுகிறது.

அந்த மன சஞ்சலத்தை அடைந்தவுடன் மனதை ஏதோ ஒரு காரணத்தினால் - அப்படி இருக்கும் பொழுது - என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் - உடனே இங்கு நடந்த நிகழ்ச்சியை மனக்கண்ணில் தோன்றியதனால் - தன்னுடைய மகன்களை அழைத்து - அதிலே பரசுராமரை குறிப்பாக அழைத்து - உன்னுடைய தாயை சிரச்சேதம் - செய்து விட்டு வா என்று சொல்கிறார்.

எவ்வளவு கஷ்டப்படுவான் என்பது இருந்தாலும் - தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்கின்ற ஒரே வார்த்தையிலே - தன்னுடைய தந்தை சொன்ன சொல்லிற்காக அங்கிருந்து புறப்படுகிறார். அப்படி புறப்பட்டு வரும்பொழுது தாயாக இருக்கக்கூடிய ரேணுகா பரமேஸ்வரி தன்னுடைய இடத்தை விட்டு நகர்ந்து ஒவ்வொரு இடமாக நகர்ந்து செல்கிறார். 

வேலையத்தூர் என்கின்ற கிராமத்திலே தஞ்சம் அடைந்து அந்த இடத்திலே ஒரு மறைவான ஒரு இடத்தில் இருக்கின்றார்கள். அதற்கு காரணம் தன் மகன் வந்து தன்னை வெட்டப் போகிறான் என்ற பயத்திற்காக இல்லை. தன்னை வெட்டினால் அவனுக்கு ஒரு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுமே என்கின்ற காரணத்தினால் தான், அந்த இடத்தை விட்டு மறைமுகமாக இருக்கிறார்கள். இருந்தாலும் பரசுராமன் தேடி வந்து அந்த தாயை வெட்டுவதற்காக செல்லும் பொழுது எல்லோரும் தடுத்து நிறுத்துகிறார்கள்.

ஒரு தாயை வெட்டக் கூடாது என்று அறிவுரைகள் சொல்கிறார்கள்.  இருந்தாலும் அவருடைய தந்தை சொன்ன சொல் மட்டுமே அவர் மனதில் இருந்ததனால் - தன்னுடைய தாயின் தலையை வெட்டி விடுகிறார்.பரசுராமர்  தன்னுடைய தந்தையை நோக்கி செல்கிறார். நீங்க சொன்ன பிரகாரம் செய்து விட்டேன். நீங்க சொன்ன ஆணையை செஞ்சிட்டேன்.சரி என்ன வரம் வேண்டும் கேள் - தருகிறேன் என்று  வாக்கு கொடுக்கிறார்.  அப்படிச்  சொன்னவுடனே, சரி - அப்படின்னு உடனே முதல் வரமாக என்னுடைய தாய் வேண்டுமென்று கேட்கிறார்.

உலக நலன் வேண்டியும் - பல விஷயங்கள் அடங்கி இருக்கின்றது என்பதற்காகவும் கமண்டல ஜலத்தை எடுத்து தன்னுடைய மகன் பரசுராமரிடம் கொடுத்து, உன்னுடைய தாயின் உடலையும் தலையும் ஒன்று சேர்த்து அந்த கமண்டல ஜலத்தை தெளித்தால் உன் தாய் எழுந்து வருவாள. தன்னுடைய தாயை எழுப்ப வேண்டும் என்கின்ற தாய்ப்பாசம் என்கின்ற வகையிலே ஓடோடி வருகிறார் - வந்து உடனே எழுப்பனும் - அவசரமாக வேறு உடலுடன் தன் தாயின் தலையை பொருத்தி - கமண்டல ஜலத்தை எடுத்து தெளித்தார்.

எண் சாண் உடம்புக்கு சிரசு பிரதானம் என்று சொல்வார்கள்.  வெட்டினது ஒரு தவறு - சேர்ப்பதிலும் சரியான முறையில் செய்யவில்லையே என்று மனம் வருந்துகிறார். அப்பொழுது பரசுராமர் தன்னுடைய தந்தையிடம் திரும்பவும் செல்கிறார். அடுத்த ஒரு வரம் கேட்கிறார். எனக்கு திரும்பவும் நீங்க என்னுடைய தாயை முழுமையாக சரியான முறையில் செய்வதற்கான பலனை கொடுக்க வேண்டும். அது முடியாத கதை - நடந்தது நடந்ததுதான் - உடல் மாறினதனால மாரியம்மன் என்கின்ற பெயரோடு விளங்குவார் என்று சொல்கிறார்.

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை - என் தாயின்  கோவில் எல்லா இடத்திலும் இருக்கணும். உலகம் முழுவதும் என் தாயை அனைவரும் வணங்க வேண்டும். அந்த அளவுக்கு ஒரு சக்தி வாய்ந்த அந்த தாய்க்கு அந்த வரத்தை கொடுக்க வேண்டும். சரி அப்படியே ஆகட்டும் என்று சொல்லிட - மன சஞ்சலத்தினால் ரொம்ப வேதனைப்பட்டு இதற்கெல்லாம்  காரணம் யார் என்பதை தெரிந்து கொண்டு உடனே வேகவேகமாக அந்த கந்தர்வ வம்சத்தை அழித்து விடுகிறார்.

தாயைத் திரும்ப மறுபடியும் நாம் சென்று பார்ப்பதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை என அந்த அம்மாவை பார்க்கும் போது தான் செய்த குறைகள் மட்டுமே தெரிகிறது. அந்த அம்மாவை நாம் இப்படி பண்ணிட்டோமே - அப்படிங்கற ஒரு காரணத்தினால் விலகிச் செல்கிறார். தன் தாயிடம் இருந்து விலகி சோட்டானிக்கரை பகவதி அம்மன் என்று சொல்லக்கூடிய அம்பாள் ஆலயத்திலே தவம் செய்கிறார். செய்த பாவத்தை, அந்த பாவ விமோசனம் செய்வதற்காக தவம் செய்து தன்னுடைய உடலையும் உள்ளத்தையும் வருத்தி தவம் செய்ததால் மூன்று சக்திகளாக இச்சா கிரியா - ஞானம் என்று மூன்று சக்திகளும் மும்மூர்த்தியாக ராஜராஜேஸ்வரி லட்சுமி சரஸ்வதி முப்பெரும் தேவிகளாக அவர்களுக்கு அந்த பரசுராமருக்கு பாவ விமோசனத்தை - பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி - அவருக்கு அருள் செய்கிறார். 

என்னை நோக்கி தவம் இருந்ததனால் உனக்கு ஒரு பலன் தர வேண்டும் என்பதற்கு உடனே அந்த பரசுராமர் சொல்றார் என்னுடைய தாயை நான் மறுபடியும் பார்க்க முடியவில்லை. என் மனம் வருந்துகிறது. ஆகையால் நீங்கள் மூன்று சக்திகளும் ஒன்று சேர்ந்து என் தாயுடனே இருக்க வேண்டும் .அந்த மூன்று சக்திகளாக இருக்கக்கூடிய அந்த லட்சுமி சரஸ்வதி ராஜராஜேஸ்வரி ஆக விளங்கக்கூடிய முப்பெரும் தேவியரும் - அந்த அம்பாள் இடத்திலே -அந்த ஆலயத்தில் மானசீக முறையிலே மானசீகமாக அங்கே இருந்து வருகின்ற பக்தர்களுக்கு பலன் தந்து கொண்டிருக்கின்றார்.

பரசுராமர் தன்னுடைய தாயாரை வெட்டப்பட்ட இடம் வெட்டுவானம் என்கின்ற பெயர் மருவி மேலேவித்துர் என்கின்ற கிராமம் வெட்டுவானம் என்கின்ற பெயரோடு விளங்குகிறது. ரேணுகா பரமேஸ்வரி பெயர் எல்லையம்மன் என்கின்ற பெயராக மாறியது. எல்லையை காக்கக் கூடிய சக்தியாக, எல்லை அம்மன் என்கின்ற பெயரோடு விளங்குகிறார். எட்டு திக்கிலும் ஒவ்வொரு தேவதையை நிர்மாணம் செய்து பூஜை செய்து அந்த எல்லையை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறார் எல்லையம்மன்.இப்படியாக அம்பாளுடைய விசேஷமான ஒரு ஆலயம் வெட்டுவானம்.

தல விருட்சம் என்கின்ற வீர மரம் பல நூறு ஆண்டு காலமானதினால் கசப்பு தன்மை இழந்து அதை சிவசக்தி சொரூபமாக ஒரு சிவபெருமானுடைய வில்வ இலையும் அம்பாளுடைய விசேஷமாகி விளங்கக்கூடிய வேப்ப இலை அதை ஒன்று சேர்ந்து சாப்பிட்டால் பலன் அதிகம்.வேப்பமரம், அந்த இடத்தில் வந்து குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டில் கட்டுவார்கள் திருமணம் வேண்டி மாங்கல்ய கயிறு கட்டுவார்கள் .அம்மை மஞ்சள் தீர்த்தம் அபிஷேக தீர்த்தமாக பிரசாதம் மருந்தாக கொடுக்கப்படுகிறது.

ஒரு கையில் வேப்பிலையும், ஒரு கையில் முந்தானையும் எடுத்து வீசிக்கொண்டே வருவாளாம். அம்மை மண்டபம்னு ஒரு இடம் இருக்கு. அங்க தங்குவாங்க. ஈரக்  காற்று, அம்பாளுடைய முந்தானையில் வரக்கூடிய இந்த வேப்பிலையில் சுற்றி வரும் பொழுது அந்த வேம்பினுடைய காற்றும் பட்டவுடன் அது நன்றாக குணமாகிவிடும்.

மேலும் இங்கு  ஆடித்  திருவிழாவில் பிரார்த்தனைகள் - அம்பாளுக்கு பொங்கல் வைக்கிறது - அங்க பிரதட்சணம் - அடிப்  பிரதட்சணம், மா விளக்கேத்துறது - கூழ் வார்க்கிறது - பால் அபிஷேகம் செய்வது - மஞ்சள் அபிஷேகம் - குளிர்ச்சியான இளநீர் முதற் கொண்டு குளிர்ச்சியான அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதற்காக அபிஷேகங்கள் செய்வது வழக்கம் விசேஷம்.

நாக வாகனம் என்கின்ற பிரம்மோற்சவத்தில் நாக வாகன உற்சவத்தில் அம்பாள் சயன கோலத்தில் ரொம்ப அருமையான முறையிலே காட்சி கொடுத்து - அந்த நாக வாகனத்தில் நாகத்தினால் ஏற்படக்கூடிய தோஷங்கள் எது இருந்தாலும் அம்பாளுடைய கால சர்ப்ப தோஷம் நாகதோஷங்கள் அனைத்துமே அந்த இடத்தை விட்டு விலகிச் செல்கின்றது.இவ்வாலயத்தினுடைய விசேஷமான பூஜைகள் திருமணம் நடைபெறும் என்பதற்காக சர்வ மங்கள கௌரி பூஜை என்கின்ற பூஜையை செய்கிறோம்.

குழந்தைப் பேறுக்காக,  செவ்வாழையும்,  வெண்ணெயும்,  தருவார்கள். நினைத்தபடியே அவர்கள் திருமணம் செய்வதற்காக ஆலயத்தில் சர்வ மங்கள கௌரி பூஜை என்று சொல்லக்கூடிய சுயம்வர பார்வதி பூஜை பெண்களுக்காகவும் ஆண்களுக்கு கந்தர்வராஜன் பூஜையாகவும் அங்கே சிறப்பாக நடைபெறுகிறது.

ஒவ்வொரு அமாவாசை செய்யப்படும் யாகத்திலே ஆதிசார தோஷம் என்று சொல்லக்கூடிய பில்லி சூனியம் ஏவல் செய்வினை என்று சொல்லக்கூடிய தீய சக்திகள் விலகி இறை சக்தியோடு இருக்கக் கூடிய பலன் பெறுகிறார்கள்.

எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி என்கின்ற அம்பாள் ஆனவள் பரிபூரணமான அனுகிரகத்தை செய்கிறார்கள். ராஜராஜேஸ்வரி என்று சொல்லக்கூடியவர் நவராத்திரியில்   விசேஷமான  அலங்காரம் செய்து யானை வாகனத்தில் ராஜராஜேஸ்வரி ஆக வலம் வந்து அருளாட்சியானது செய்கிறார்கள்.

சோடச மகாலட்சுமி - லக்ஷ்மி சம்பந்தப்பட்ட விஷயமாக ஷோடச மகாலட்சுமி என்று சொல்லக்கூடிய 16 செல்வங்களானது நோயின்மை கல்வி,  தனம், தான்யம், அழகு,  புகழ், பெருமை,  இளமை, அறிவு, சந்தானம், வழித்  துணிவு, வாழ்நாள் வெற்றி ஆகும். நல்லூர் நுகற்றுத்தொகை தரும் 16 பேரும் என்று சொல்லக்கூடிய 16 செல்வங்களும் அந்த அம்பாளை வணங்கி பூஜை செய்து தீபத்தை ஏற்றி வணங்கினால் அந்த பலன் கிடைக்கிறது.மேலும் இங்கே நாகதேவதையை வழிபட்டால் அவர்களுடைய மனதில் இருக்கக்கூடிய குறைகளை நிவர்த்தி பெறலாம்.

அப்படிப்பட்ட மகாலட்சுமி பூஜை ஹோமங்கள் நடைபெறும் அதே இடத்தில் ஒரு காமாட்சி தீபத்தை வாங்கி அந்த காமாட்சி தீபத்திலே நாம் நெய்விட்டு திரியேற்றி அம்பாளை வணங்கி வளம் பெறலாம்.அப்படிப்பட்ட அம்பாள் எல்லாவிதமான பலன்களையும் பரிபூரணமாக உலகம் சேமமாக இருக்க வேண்டும் - பக்தர்களுக்கு பரிபூரண அனுக்கிரகம் கிடைக்க வேண்டும் என்பதை பிரார்த்தனை செய்து கொண்டு வணங்குவதனால் எல்லாவிதமான பலன்களும் கிடைக்கின்றது,  என்பதை அன்போடு தெரிவித்துக் கொண்டு,  மேலும் இந்த பெங்களூர்ல இருக்குறவங்க எல்லாருக்குமே ராஜராஜேஸ்வரி என்கின்ற நமது அம்பிகா பரமேஸ்வரி குலதெய்வமாக விளங்குகிறார்கள்.அப்படிப்பட்ட குலதெய்வத்தை வணங்கி பூஜை செய்கிறார்கள்  என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். 

இதுவரை உங்களிடம் பேசிய சிவாச்சாரியார் டி எஸ் சந்திர சேகர சிவாச்சாரியார்.  40 வருட காலமாக பூஜை செய்து அம்பாளுடைய அருளை அனைவரும் பரிபூரணமாக பெற்றிருக்கின்றார்கள் என்பதை அனுபவபூர்வமாக உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் 

 

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


ALP Astrology