ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
திருமணம்
SASTI TV YOUTUBE 👉https://youtu.be/pH8mSsNqvkU?si=CzkhMlOB78BCoV8f
ALP ஜோதிடம் வழியாக, திருமண உறவுப் பிரச்சினைகளை, எளிதாகத் தீர்க்கலாம்.
வணக்கம். நான், உங்கள் அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆசிரியர் ஶ்ரீ குரு உமா வெங்கட். திருமண உறவுகள் ஏன் பிரச்சனை வருது அப்படிங்கிற கேள்வி தான் நிறைய வருது. திருமணம் பார்க்கும் போது, பெற்றோர்களாக இருந்தாலும் சரி, அந்த குழந்தைகளாக இருந்தாலும் சரி, மனசுக்கு பிடித்த திருமணம் அப்படிங்கிறத அவுங்க பண்ணிக்கிறாங்க. ஆனால் அதுல நிறைய பிராப்ளம் திருமணத்திற்கு பிறகு. இந்த பிராப்ளம் சால்வ் பண்றாங்களானா கண்டிப்பாக நிறைய பிரச்சனைகள் அப்படிங்கிறது, இங்க கொடுக்குது. இப்போ பாத்திங்கனா, இது ஒரு பெண் ஜாதகம்.
ALP ASTROLOGY BASIC ONLINE CLASSES 📲 9363035656
ALP ASTROLOGY CONSULTATION 📲 9786556156
ALP ASTROLOGY BOOKS 📲 9962315656
இந்த பெண்ணிற்கு வயது முப்பது. இவங்களுக்கு காதல் திருமணம் அப்படிங்கிறது தான் இங்கு நடந்திருக்கு அப்படின்னு சொல்லலாம். ரேவதி நட்சத்திர முதல் பாதம் மீன லக்னமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த 2018 ல இந்த மீன லக்னம் ஆரம்பிச்சது. 2028 வரைக்கும் அட்சய லக்னம் மீன லக்னம் தான். இந்த லக்ன அதிபதின்னு சொல்லக் கூடிய கிரகம் எங்க இருக்கிறார்னா எட்டாம் இடத்தில். ஏன் இந்த 2018-ஐ, இந்த இடத்தில பதிவு பண்ணினேன்னா, இந்த எட்டாம் இடத்தில் இருக்கிறது அவ்வளவு சிறப்பு கிடையாது. இந்த லக்ன அதிபதினு சொல்லக்கூடிய கிரகம், திருமண உறவுல எப்போதுமே நம்ம பார்க்கும்போது லக்னாதிபதியும் சரி ஏழாம் அதிபதியும் சரி அந்த எட்டாம் இடங்களில் இருக்கிறது, இரண்டாம் இடத்தில் இருக்கிறது அவ்வளவு சிறப்பு அப்படின்கிறது அமையாது. இங்க பார்த்தா குரு பகவான் இந்த எட்டாம் இடத்தில் இருப்பது அவ்வளவு சிறப்பான ஒரு நிலையானு பாத்திங்கன்னா திருமணமான பின், கணவருக்கு பார்க்கும் போது ஒரு அழுத்தத்தை கண்டிப்பாக கொடுக்கும். ஜாதகருக்கு ஒரு அழுத்தத்தை ஒரு பிரச்சனைகளை உருவாக்குமானா உருவாக்கும். 2018-ல ஆரம்பிச்சுருச்சுன்னா, 2018 ல ஆரம்பிச்சிருச்சு. ரேவதி நட்சத்திரம் முதல் பாதம் சென்று கொண்டு இருக்கிறது. இங்க ஏழாம் இடத்து கிரகம்னு சொல்ல கூடியது கணவர் ஸ்தானம். ஜாதகருடைய தன்மை அப்படிங்கிற இங்க அவ்வளோ சிறப்பா இல்லை. ஏழாம் இடம் களத்திர ஸ்தானம். இந்த களத்திர ஸ்தானதிபதினு சொல்லக்கூடிய கிரகம் புதன் 4 ல் இருக்கு. 4 ல் இருக்கலாமானா, இந்த கணவர் எப்பவுமே தன்னுடைய தேவை தன்னுடைய சுகம் தன்னுடைய கம்ஃபோர்ட் அப்படிங்கிறத மட்டும் தான் இவர் விரும்புவார். தனக்கு தேவையானதை மட்டும் தான் இவர் செய்வார். தனக்கு ஃபேவரபிளா உள்ளது மட்டும் தான், இந்த ஜாதகர், அதாவது பெண்ணோட கணவர் அப்டிங்கிறவர் செய்வார். அது பிராப்ளத்தை கொடுக்குமா என்றால் கண்டிப்பாக. இந்த மனைவிக்கு அது பிரச்சனையை அதிகமாகக் கொடுக்கும். வேலையில் ஆனாலும் சரி. வீட்லயா இருந்தாலும் சரி. அவருக்கு எது தேவையோ எதை செய்யனும்னு நினைக்கிறாரோ அது மட்டும் தான், இந்த ஜாதகர் செய்து கொண்டு வருகிறார். இவங்க ரெண்டு பேருக்கும் உறவு நிலை எப்படி இருக்குன்னு பாதீங்கனா, அவ்வளவு சிறப்பாக இல்ல அப்படிங்கறது தான் உண்மை.
சரி, தற்பொழுது இந்த நட்சத்திர புள்ளினு சொல்லக் கூடியவர் யாருன்னா அவரும் புதன் தான். அப்போதும் சரியா இருக்குமானா, சரியில்லை. இந்த பெண் என்ன விரும்புறாங்கன்னா கணவர் கிட்ட இருந்து நல்ல ஒரு எதிர்பார்ப்பு அன்பு, பாசம், அது எப்ப கிடைக்கும் அப்படிங்கிறது தான் அவுங்களோட தேவை, தேடுதல். நம்முடைய கம்பஃர்ட் ஸோன். அவங்க எப்ப நிம்மதியா இருப்பாங்க. நான் எப்போ வீடு வண்டி வாகனங்கள் குழந்தைகள் சார்ந்து, அது சார்ந்த நிகழ்வுகள்ல நான் நிம்மதியா இருப்பேன் அப்படிங்கிற கேள்விய தான் இந்த ஜாதகர் நமக்கு முன் வைத்தார். சரி இதுக்கு முன்னாடி லக்னம் எப்படி இருந்ததுன்னு பார்த்தீங்கன்னா ALP லக்னம் கும்ப லக்னமாக இருந்தது. ஏழாம் இடத்து கிரகம்னு சொல்லக்கூடியது எங்க இருந்ததுன்னா 4 ஆம் இடத்தில. 4 ஆம் இடத்தில் இருக்கலாமானா, சூரியன் வந்து இந்த லக்னத்திற்கு 4 ஆம் இடத்தில் இருப்பது அப்படிங்குறது அவ்வளவு சிறப்பு கிடையாது. அப்பவே அந்த கணவர் எப்ப கல்யாணம் ஆனாங்களோ, அப்பத்தில் இருந்தே இதுல வந்து ஒரு பிரச்சனைகள் இருக்குதான்னா, பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யுது. இதுல என்ன விசேஷம் பாத்தீங்கன்னா, அவங்களுக்கு மனதுக்கு பிடித்த திருமணம் அப்படிங்கிறது தான் இங்க நடந்திருக்கு. ஏன்னா இந்த லக்னத்திற்கு 11 ஆம் அதிபதின்னு சொல்லக்கூடிய குரு பகவான் இந்த லக்னத்தை, அதாவது இந்த லக்னத்துக்கு எங்கே இருக்கிறார் அப்படின்னா, 9 ஆம் இடத்தில். அங்கு இருக்கிறதுனால மனதுக்கு பிடித்த திருமணம் அமையறதுக்கு உண்டான ஒரு வாய்ப்பாக இந்த ஜாதகருக்கு அமைந்தது அப்டிங்கிறது தான் சொல்ல முடியும். இந்த ஜாதகம் பொருத்த வரைக்கும், இந்த திருமண வாழ்க்கை அப்படிங்கிறது 2028 வரைக்குமே ஒரு அழுத்தத்தை தரக்கூடிய ஒரு ஜாதகமாக தான் இருக்கிறது. இந்த கணவருடைய ஜாதகம் அவ்வளவாக ஒரு சிறப்பான நிலையில இல்ல அப்படிங்கிறது தான் அவுங்களுக்கு சொன்னோம். அந்த பெண்ணிடத்தில சொன்னது, நீங்களும் கொஞ்சம் ஜாதகம் கத்துக்கோங்க. ஏன்னா நம்ம சொன்னாலும் இதை ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை அப்படிங்கிறது அந்த பெண்ணுக்கு இருக்காது. ஜாதகத்தை கற்றுக்கோங்க. கணவரோடு நிலை இப்படி இருக்குதுன்னு தெரியும் போது அதற்கடுத்து வரக்கூடிய காலங்கள் சிறப்பாக இருக்கிறது. அப்போ அவர் சரியாயிடுவாரு. இப்ப வந்து தன்னுடைய தேவை, தன்னுடைய எண்ணம், தன்னுடைய ஆசை அப்படிங்கிறதை மட்டும் தான், இந்த ஜாதகருடைய நிலை அதை, நம்மளால மாற்றிக் கொள்ள முடியாது. அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அப்படிங்கிறத தான் அவருக்கு நாம் சொன்ன அறிவுரை. இந்த கணவருடைய ஜாதகம் சரியாகணும் அப்படினா, ஒரு தடவை குருவாயூர் கோவிலுக்கு போயிட்டு வாங்க. உங்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுக்கும், அப்படிங்கிறத இவுங்களுக்கு பரிகாரமாக சொல்லப்பட்டது.
ஏன் குருவாயூர் கோவில் அப்படிங்கறது இந்த லக்ன நட்சத்திர புள்ளி அனுசரித்து சொல்லப்பட்ட ஒரு பரிகாரம் அப்படிங்கிறத இந்த இடத்தில பதிவு பண்ணிக்கிறேன். இது எல்லாருக்குமா, அப்படின்னா கண்டிப்பாக கிடையாது. இவுங்க லக்ன நட்சத்திர புள்ளி அமர்ந்த நிலை அனுசரித்து தான். இல்லனா அந்த கிரகங்கள் அனுசரித்து அந்த பரிகாரம் அப்படிங்கிறத அவுங்களுக்கு சொன்னேன்.
மீண்டும் ஒரு ஜாதக ஆய்வில் சந்திக்கலாம். நன்றி.🙏
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology