ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
எண்கணிதம்(ALP ASTROLOGY)
👉SASTI TV YOUTUBE: https://youtu.be/mYSDdtv-et8?si=tFkZGZL5nKpZSvRu
எண்கள் என்ன செய்யும்?எண் கணிதம் மூலம் எதிர்காலம். 🙂🙏 அனைவருக்கும் வணக்கம்🙏
நான் உங்கள் அட்சயலக்ன பத்ததி ஜோதிடர் டாக்டர் .சாந்தி தேவி ராஜேஷ்குமார்.
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
எண் கணிதம் நிறைய பேர் கேட்கிறார்கள். நியூமராலஜி, எண்கணிதத்தின் மேல் ஒரு அதீதமான நம்பிக்கை இருக்கு.இந்த எண் கணிதம் நமக்கு நல்ல விதமாக செயல்படக்கூடிய ஆற்றலையும், தடங்கல்களையும் கண்டிப்பாக கொடுக்கும்.எண்கள் தான் நம்முடைய நிறைய நிகழ்வுகளில் பலன் தர கூடியது.
ஜோதிடத்திலும் 1 ஆம் பாவகம், 2 ஆம் பாவகம், என 12 பாவகங்களையும் எண்களாகத் தான் பார்க்கின்றோம்.மொபைல் நம்பர் - கார் நம்பர் - வீடு நம்பர்- இப்படி நம்மளுடைய அன்றாட வாழ்க்கையில ஒவ்வொரு நிகழ்வும் எண் கணிதத்தோடு இணைந்து இருக்கிறது.
ஒவ்வொரு எண்களுக்கும் அதிர்வுகள் உண்டு (vibration).பிறந்த தேதி எந்த இயக்கத்தில் இருக்கு? எந்த கிரக இயக்கமானது அங்க இருக்கு?நம்ம பிறந்த மாதம் எந்த கிரகத்தோட இயங்குகின்றது?நாம் பிறந்த வருடம் எந்த கிரகத்தோட இயங்குகின்றது?இப்படி ஒவ்வொரு தனித்தனி நிகழ்வுகள் குறிக்கப்படுகிறது.
உதாரணமாக ஐந்தாம் எண் எனில் பஞ்சமம் இது நவத்தின் மையம். பார் உலகில் கிரகமாகிய புதன் மையமே விசாலம் அறிவதன் சாரம். இயங்கி இயக்குவதில் இவர் ஒரு பல்கலைக்கழகம். இசைந்ததில் பிறப்பவர் கணிதத்திலே புலி என்று சொல்லி இருக்காங்க. அந்த அளவுக்கு அந்த 5 ஆம் எண் - அப்படின்னா கணிதம் என்று நமக்கு தெரியும். அந்த கிரகம் - புதன். அந்த கிரகங்களை நாம் எண்களால் புரிந்து கொள்கிறோம்.
👉ALP SASTI OFFICIAL INSTAGRAM PAGE: https://www.instagram.com/alp_sasti_tv_official?igsh=MWs4OWJobWVwazM3dg==
புதனுடைய தன்மை - ஒரு வினை செய்து தாக்கினால் கூட நற்கருமம் புரிந்தே மாற்றிக் கொள்ளக்கூடிய வல்லமை அவர்களுக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.அந்த அளவுக்கு இந்த 5 ஆம் நம்பருக்குன்னு உள்ள வலிமை இருக்கு .எட்டு எனில் "அஷ்டமம் இது கரிய சனி அண்டபிண்ட காரக கனி. அஷ்டமத்திலே பிறப்பவர் அள்ளல் பாவம் போக்குவர்.அஷ்டமத்திலிருந்து - மற்றவர்களுடைய கர்மாவை கழிக்க உதவி செய்யக் கூடியவர் யாருன்னா இந்த எட்டாம் நம்பர் இருக்கக்கூடியவங்க - அப்படின்னு எடுத்துக்கலாம்.
நான் எட்டில் பிறந்து கஷ்டப்படுறேன் என்ற புலம்பல் தேவையில்லை - மற்றவர்களின் கர்மாவை சரி செய்ய பிறந்திருக்கீங்க என எடுத்துக்கலாம்.இரண்டு எனில் சந்திரன் - இது வளர்ந்து வளர்ந்து - வளர்பிறையில் வளர்ந்து தேய்பிறையில் தேயக் கூடிய ஒரு கிரகம்.இப்படி ஒவ்வொரு எண்களுக்கும் ஆன ஒரு மகத்துவம் அப்படிங்கறது கண்டிப்பா உண்டு.
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் ஆளுமை மிகுந்து இருப்பாங்க - ரொம்ப அறிவு சார்ந்த நிகழ்வுகள் - அதிகாரத்துவத்தோடு - அதிகார தோரணையோடு - அரசியல் நிகழ்வுகள் - அரசு சார்ந்த துறைகளில் பயணிப்பவர்களாக - அதுல ஈடுபாடும் நாட்டமும் மிக்கவர்களாக - உடல் உஷ்ணம் அதிகம் நிறைந்தவர்களாக - கோபப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.
👉ALP SASTI OFFICIAL FACEBOOK PAGE : https://www.facebook.com/share/166o8XydVq/
இரண்டாம் எண் - சந்திரன் - மனம் அலைபாயுதல் - ஒரு நிலையில் இல்லாதவர்கள் - எண்ண ஓட்டங்கள் ஏற்ற இறக்கமாக உடைய நிலைப்பாடு - சந்தேக புத்தி - முடிவுகள் மாறி மாறி எடுத்தல் - பூட்டை இழுத்து சரி பார்த்தல் . அந்த எண்ணின் ஆதிக்கம் அப்படி வேலை செய்யும்.ஒன்பதாம் எண் - செவ்வாய் - ஆணவம் இருக்கும் - அஹங்காரம் இருக்கும் - ஒரு போர்க்குணம்- வீரத்தன்மை - ஒரு கட்டுப்பாடு - அதிகாரம் பண்ணக் கூடியவர்களாக இருப்பாங்க.
மூன்றாம் எண் - குரு ஆதிக்கம் - அமைதியாக, பண்பாக, வள்ளலாக, அறிவுரை சொல்லக்கூடிய, அனுபவத்தை முறையாக கொடுக்கக் கூடிய வல்லமையோடு இருப்பார்கள்.இப்படி ஒவ்வொரு எண்களுக்கும் மூணாம் நம்பர்ல பிறந்தா குரு, அஞ்சாம் நம்பர் அது புதன், ஒன்பது அப்படினா செவ்வாய் என கிரகங்களை எண்களாக எடுத்துக்கிட்டாலும் அதனுடைய தன்மை இயல்பாக பேசும் .
இந்த நியூமராலஜி எல்லாம் நிறைய மெத்தெட்ஸ் இருக்கு.ஒன்னு சிங்கிள் நம்பரா எடுத்துக்கலாம் - இரட்டை நம்பரா எடுத்துக்கலாம் - நான்கு நம்பர் எடுத்துக்கலாம். பிரமிடா ஒரு நம்பரை கொண்டு வரலாம். இப்படி பல நிகழ்வுகள் இருக்குங்க. இதுல நம்ம இன்னைக்கு என்ன பாக்க போறோம்னா - அட்சய லக்ன பத்ததியில் மூர்த்தி சார் அவர்கள் உருவாக்கி இருக்காங்க - அந்த சாப்ட்வேர்ல நியூமராலஜி அப்படிங்கிற தனி ஆப்ஷன் ஒன்னு கொடுக்கப்பட்டு இருக்கும்.
உங்கள் லக்னம் எதுவாக இருந்தாலும், எண்களுக்கு மட்டும் - அது கிரகங்களோடு இணைந்து பலன்களை வலிமையா வெளிப்படுத்தும் . அந்த கிரகங்களுடைய காரணங்களுக்கு தகுந்த மாதிரி அதனுடைய ரூபங்களுக்கு தகுந்த மாதிரி தான் அதனுடைய செயல்பாடுகள் இருக்கும்.மொபைல் நம்பர் 10 வருஷமா 15 வருஷமா நான் ஒரே நம்பரை யூஸ் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு ரொம்ப நல்லா இருக்கு.! அப்படின்னு நீங்க நினைக்கலாம்! அந்த எண் உங்க அட்சய லக்னத்திற்கு சாதகமாக இருந்திருக்கும் - லக்ன மாற்றத்திற்கு பிறகு பிரச்சனைகள் தலைதூக்கும்.
👉Dr.S. POTHUVUDAIMOORTHY ALP Inventor: https://www.facebook.com/share/1ETBhz9ahA/
உதாரணமாக மீன லக்னம். இந்த மீன லக்னத்திற்கு இரண்டாம் நம்பர் - அப்படிங்கறது சப்போர்ட் பண்ணும். 5 ஆம் இடத்தின் அதிபதி சந்திரனாக இருப்பதினால், இரண்டு அப்படிங்கறது அந்த எண்கள் அவங்களுக்கு ஒத்துப்போகும். சந்தோஷமா பயன்படுத்துவாங்க. நல்லா அவங்களுடைய எண்ணங்களை எல்லாம் வெளிப்படுத்த ஆற்றல் பெற்றவர்களாக இருப்பாங்க. அவங்க கனவுகளுக்கு ஏற்ப கற்பனைகளுக்கு ஏற்ப நிகழ்வுகளை, அந்த செல்போன்ல அவங்க பயன்படுத்தக் கூடியவங்களாக இருப்பாங்க. அந்த இரண்டாம் நம்பர்ல அவங்க நம்பர் வச்சிருக்காங்க. லக்ன மாற்றத்திற்கு பிறகு அவங்களுக்கு அஞ்சுங்கறது நாலாக மாறும். அப்ப அதனுடைய செயல்பாடுகள் ஒரு பொருள் சார்ந்த நிகழ்வுகளை கொடுக்கக் கூடியதா இருக்கும்.
உதாரணமாக கன்னி லக்னம் 2 ஆம் எண் மிக நன்றாக இருக்கும். ஒன்றாம் எண் விரயத்தை தரக்கூடியதாக இருக்கும். இப்படி லக்ன மாற்றங்களுக்கு தகுந்த மாதிரி அந்த பலன்களை நம்ம எடுத்துக்கலாம்.அட்சய லக்னம் கன்னி. லக்னத்தில் ஒரு நம்பர - நீங்க வாங்குறீங்க. அப்படின்னா அந்த பத்து வருடங்கள் - நீங்க ரொம்ப சந்தோஷமா பயன்படுத்தலாம் . லக்னமாற்றத்திற்கு பின் என்ன ஆகும்? அந்த நம்பர் உங்களுக்கு பிரச்சனை தரக்கூடியதாக இருக்கும். அந்த போன்ல பேசினாலே உங்களுக்கு செலவுகள் வரும்ங்க.
ஒரு உதாரணத்திற்கு ஒரே ஒரு நிகழ்வு மட்டும். இந்த துலாம் லக்னம் ஆரம்பிச்சிடுது. நமக்கு ஒரு போன் கால் வரும். உங்களுக்கு ஒரு கிப்ட் விழுந்திருக்கு. அந்த கிப்ட் மதிப்பு 19000. உங்க வீட்டுக்கு வந்துடும். அந்த கிப்ட் நீங்க வாங்கணும்னா நீங்க ஒரு 1000 மட்டும் கட்டினீங்கன்னா உங்களுக்கு நாளைக்கு அந்த கிப்ட் வந்துடும். அப்படின்னு சொல்லுவாங்க. நமக்கு 1000 ரூபாய் விரயம் ஏற்படும்.வீட்ல உள்ளவர்களுக்கு யாருக்கு அந்த எண் சாதகமோ - மாற்றிக் கொள்ளலாம்.நம்மளுடைய பேங்க் அக்கவுண்ட் நம்பர் இருக்குனு வச்சுக்குங்களேன். எண்கள் சப்போர்ட் பண்ணா தான் - அந்த அக்கவுண்ட்ல கூட உங்களுக்கு பணம் இருந்து கொண்டே இருக்கும். பணம் வந்து கொண்டே இருக்கும். அந்த அக்கௌன்ட் நம்பர் உங்களுக்கு சரியில்லன்னு வச்சுக்கோங்க - அந்த பேங்க்ல எவ்வளவுதான் பணம் ட்ரான்சாக்-ஷன் ஆனாலும், மிச்சம் என்பது ஜீரோல தான் இருக்கும்.
வீட்டு நம்பர் 54 போட்டு இருப்பாங்க. இந்த 54 ங்கறது இவருக்கு ரொம்ப சாதகமான ஒரு எண்ணாக இருக்கும். அதுல ரொம்ப சந்தோஷமா, மகிழ்ச்சியாக, நிறைய நல்ல பலன்கள் எல்லாம் நடந்து இருக்கும். அதுக்கப்புறம் என்ன பண்ணுவாங்க? இந்த புதிய எண்ணை கொண்டு வந்து போடுவாங்க.! 54 அழிச்சிட்டு 8/116 உங்களுக்கு நெகட்டிவ்வா இருந்தது வெச்சுக்கோங்க! அதுக்கப்புறம் இல்லாத நிகழ்வுகள் எல்லாம் நம்மள கொண்டுபோய் அங்க மாட்டி விடும். வீடு ஏதாவது ஒரு செலவு வைத்து கொண்டே இருக்கும்.
ALP ASTROLOGY CONSULTATION 📲 9786556156
எண்களுக்கும், ஜாதகத்திற்கும் தொடர்பு சூப்பரா இருக்கு. கன்னி லக்னத்தில், வாகனம் 3ம் எண்ணில், நான்குக்கும் ஏழுக்கும் அதிபதி குரு பகவான். இது உங்களுக்கு துலாம் லக்னமா மாறிடுது. என்ன பண்றாரு, மூன்றுக்கும், ஆறுக்கும் அதிபதி - துலாம் லக்னமாக மாறினால், அந்த ஜாதகருக்கு கடனை, அந்த ஈஎம்ஐ கட்ட முடியாத நிலை ஏற்படும்.ஒவ்வொரு நிகழ்வையும், அட்சய லக்ன பத்ததியோடு எண் கணிதத்தையும் பொருத்தி பலன் காண்கையில், அதனுடைய விசேஷம், அதனுடைய மகத்துவங்கள் அலாதியானது.நம் பெயர், கணவர் பெயர், நிறுவனத்தின் பெயர் இப்படி எல்லாத்தையும் போட்டு அதுல செக் பண்ணி நம்மளுடைய பேருக்கும் நம்மளுடைய லக்னத்திற்கும், வரக்கூடிய அந்த பெயர்களுக்கும் ஒத்துப் போகுதா என பார்க்கலாம்.
லக்னத்திற்கு 1 - 5 - 9 ல் அந்த எண்கள் அமையுமெனில் கொண்டாடி மேம்படுத்துவார்.
அதே ஆறு. எட்டுல அந்த எண் வந்ததுன்னா - அதனால நிறைய அவஸ்தைகள் தேடித் தேடி தேடி பிரச்சனையெல்லாம் வரும்.உதாரணத்துக்கு ஒரு நிகழ்வு. நமக்கு வேண்டிய நண்பர் ஒருத்தர், ஒரு பழைய அக்கவுண்ட் ஆப்பரேட் பண்ணாமல் இருந்தார். அவர் வந்து முன்னாடி ஒரு மாவட்டத்துல இருந்தாரு. நாமக்கல் மாவட்டத்துல இருக்கும்போது ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சாரு. அவர் அதுக்கப்புறம் ஊர் விட்டு ஊரு வேற ஊருக்கு போயிட்டு அந்த அக்கௌன்ட் நம்பர் அவர் பயன்படுத்தல. ஊழியர் உதவியுடன் அதை இல்லீகலா வேற ஒரு நிகழ்வுக்காக பயன்படுத்தி, அட்ரஸ் ப்ரூப் காமிச்சு, ஒரு இடத்தை அவங்க மாத்திட்டாங்க. அந்த அக்கவுண்ட் ஹோல்டரான ஜாதகர் வழக்கில் மாட்டிக் கொள்கிறார். காரணம் அக்கவுண்ட் எண் சாதகமாக இல்லாததே.
அன்றாட வாழ்க்கையில் நம்ம பயன்படுத்தக்கூடிய எண்களின் துணைகொண்டு செயல்படுவது எண்கணிதம். அது நம்ம கவனிச்சுக்கிட்டோம்னா இன்னும் கூடுதல் நற்பலன்களை நம்மளால பெற முடியும் .
மீண்டும் இனியதொரு நிகழ்வில் சந்திப்போம் .
நன்றி. வணக்கம்.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology