ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
ALP ஜாதக ஆய்வு:
ஆய்வாளர்: ALP ஜோதிடர். திருமதி. பவானி முத்துசாமி.
கேள்வி: என் கணவர் ஒரு மருத்துவர். என் மகன் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறான். மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு எழுதியுள்ளான். அவனுக்கு மருத்துவக் கல்லூரியில், அரசு கவுன்சிலிங்கில் இடம் கிடைக்குமா?
ALP ஜோதிட ஆய்வு:
ஜாதகர்: ஆண், வயது: 18.
ஜாதகருடைய தற்போதைய ALP லக்னம்: கன்னி.
தற்போதைய ALP நட்சத்திரம்: உத்திரம் 2, அதிபதி: சூர்ய பகவான், ALP லக்னத்துக்கு 12 வது வீடான சிம்மத்தில் இருக்கிறார்.
கேள்வி படிப்பு தொடர்பானது. எனவே நாம் 2 வது பாவகமான துலாம் ராசியை, பார்த்தல் வேண்டும். துலாமின் அதிபதி: சுக்ர பகவான், ALP லக்னத்துக்கு 8 வது வீடான மேஷத்தில் இருக்கிறார்.
ALP ஜோதிட முறைப்படி, மருத்துவப் படிப்புக்கு இந்த அமைப்பு நன்றாக இருக்கிறது. எனவே மருத்துவம் படிக்கலாம்.
கவுன்சிலிங் நிறைவு பெறும் போது, மருத்துவ சீட் கிடைக்கும். கவுன்சிலிங் துவக்கத்தில் சீட் கிடைக்காது.
இதற்கான காரணத்தைப் பார்க்கும் போது, இந்த ஜாதகரின் ALP லக்னத்துக்கு 3 வது வீடான விருச்சிகம், டாக்குமென்ட்கள் தொடர்பானது. விருச்சிகத்தின் அதிபதி: செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானும் மேஷத்தில். இது ALP லக்னம் கன்னிக்கு 8 வது வீடு. இது கோர்ட் கேஸ் தொடர்பானது. எனவே மருத்துவ சீட், அரசு கவுன்சிலிங்க்கில் கிடைக்க வேண்டும் என்றால், கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
அவர்களும் கவுன்சிலிங்குக்காக காத்திருந்தார்கள். முதல் இரண்டு ரவுண்ட் கவுன்சிலிங்கில் சீட் கிடைக்கவில்லை.
இந்த ஜாதகர் மருத்துவத் தேர்வுக்கு அப்ளை செய்த போது, ஒரு தவறு செய்து விட்டார். அதாவது, ஆன்லைனில் ஒரு தடவை சப்மிட் செய்த அப்ளிகேஷன், சப்மிட் ஆகவில்லை என்று எண்ணி, இரண்டாவது தடவை அப்ளை செய்துள்ளார். இதனால் கவுன்சிலிங்க்கில் போலி அப்ளிகேஷன் என்று சொல்லி ரிஜக்ட் செய்தது, கவுன்சிலிங்கின் இரண்டாவது ரவுண்டின் முடிவில், ஜாதகருக்கு தெரிய வந்துள்ளது.
அதன் பின், ஜாதகரின் பெற்றோர் என்ன செய்வது என்று கேட்டார்கள். அவர்களுக்கு, கோர்ட்டில் உடனடியாக ஒரு வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் தெரியாமல் செய்த தவறு என்று நிரூபித்து, கோர்ட் ஆர்டர் வாங்குங்கள். மருத்துவ சீட் கிடைக்கும், என்று வழி காட்டப்பட்டது.
இறுதிச் சுற்று கவுன்சிலிங்குக்கு முன் அவர்களும் கோர்ட்டுக்கு சென்று, சீட் தரப்பட வேண்டும் என்று கோர்ட் ஆர்டர் வாங்கி விட்டார்கள்.
அதன் பின் இறுதிச் சுற்று கவுன்சிலிங்கில், கோர்ட் ஆர்டரை காண்பித்து, சீட் கிடைத்தது.
ALP ஜோதிடம், தெளிவாக, துல்லியமாக இருக்கும் என்பதற்கான லட்சக்கணக்கான உதாரணங்களில், இதுவும் ஒன்று.
இது போன்று, ஒரு செயல் செய்யும் போது, என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும? படிப்பு என்றால் சரியான படிப்பு தான் தேர்ந்தெடுக்கிறோமா? வேலை என்றால் சரியான வேலையைத் தான் தெர்ந்தெடுக்கிறோமா? திருமணம், வீடு வாங்குதல், விற்றல், இது உள்ளிட்ட நம் அன்றாட வாழ்வின் அனைத்துக் கேள்விகளுக்கும், சரியான வழி காட்டுகிறது, ALP ஜோதிடம்.
அட்சய லக்ன பத்ததி எனும் ALP ஜோதிடத்தை கண்டறிந்தவர், Dr. பொதுவுடைமூர்த்தி ஐயா, அவர்கள். அவர் 'வீட்டுக்கு ஒரு ஜோதிடர்' இருத்தல் வேண்டும் என்ற நோக்கில், ALP ஜோதிடத்தை ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் கற்பித்து வருகிறார். ALP அடிப்படை ஜோதிட வகுப்பு 15 நாட்கள் நடைபெறும். ஜோதிடம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட, இந்த வகுப்பில் சேரலாம். இந்த 15 நாள் வகுப்பு நிறைவடையும் போது, வகுப்பு மாணவர்கள் அனைவராலும் பலன் சொல்ல முடியும். நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ஜோதிடம் பார்த்து, நாமே முடிவெடுப்பது சரியாக இருக்கும்.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology